
சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்
19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்
19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்
19 மே 2013 13:51:01

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்
18 மே 2013 18:22:06

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்
18 மே 2013 17:57:05

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்
17 மே 2013 17:22:05

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்
17 மே 2013 17:13:05

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்
17 மே 2013 16:17:04

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்
17 மே 2013 15:20:03

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்
16 மே 2013 16:56:04

சென்னை, ஏப்.27- தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான தொகை ரூ.5 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது என்றும், இதனால் தமிழ்நாடு முழுவதும் சுகாதார கிராமங்கள் உருவாகும்'' என்றும் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:-
தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் மாசுமறுவற்ற காற்றும், தூய்மையான குடிநீரும் கிடைக்கும் வண்ணம் சுற்றுப்புறமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். இந்த நிலையை அடைவதற்கான அடிப்படை தேவை நாட்டில் நல்ல சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்குவதே ஆகும்.
இந்தச் சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற ஒரு திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுத்தல், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மனிதக் கழிவுடன் இணைந்த எரிவாயு கலன் அமைத்தல், தனி நபர் இல்லங்கள் மற்றும் பள்ளிகளில் சுகாதார வசதி ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திறந்தவெளி மலம் கழித்தலை அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் மூலம் நூறு விழுக்காடு சுகாதாரத்தை எய்துகின்ற ஊராட்சிகளுக்கு அரசின் சார்பில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்தின் மூலம் முழுமையான சுகாதார அமைப்புகள் பெற்ற கிராமங்கள் உருவாயின. ஆனால், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, இந்தத் திட்டம் 2006-2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவில்லை.
நான் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், சுகாதார கிராமங்களை உருவாக்குகின்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு நான் உத்தரவிட்டேன்.
மேலும், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மகளிர் பொது சுகாதார வளாகங்கள்'', 2006-ஆம் ஆண்டுக்கு பின்னர் சரிவர பராமரிக்கப்படாததால் அவை பயன்படுத்தப்படாமல் இருந்ததை கருத்தில் கொண்டு, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 170 கோடி ரூபாய் செலவில், 12,793 மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது இந்த மகளிர் வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சுகாதார கிராமங்களை உருவாக்கும் வண்ணம், முழு சுகாதாரத் திட்டத்தின்'' கீழ் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. தற்போது ஒரு இல்லத்திற்கான தனி நபர் கழிவறை கட்டும் பொருட்டு, மத்திய அரசின் சார்பில் 2,200 ரூபாயும், மாநில அரசின் சார்பில் 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் பயனாளியின் பங்குத் தொகை 300 ரூபாய் ஆகும். ஆக மொத்தம் 3,500 ரூபாய் செலவில் தனி நபர் இல்லக் கழிவறை கட்டப்படுகிறது.
தற்போது, தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள 3,500 ரூபாய் என்பது போதுமானதாக இல்லையென்றும், இந்தத் தொகையை வைத்து, தனி நபர் இல்லக் கழிப்பறையை முழுமையாக அமைத்திட இயலாது என்றும், இந்தத் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.
இந்தக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், சுகாதார கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை பூர்த்தி செய்யும் வகையிலும், ஒவ்வொரு தனி நபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அலகுத் தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, மாநில அரசின் பங்கு 2,500 ரூபாய் எனவும், மத்திய அரசின் பங்கு 2,200 ரூபாய் எனவும், பயனாளியின் பங்கு 300 ரூபாய் எனவும் இருக்கும். இதன்படி, தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தொகை 5,000 ரூபாய் என உயர்த்தப்படுகிறது. எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு முழுவதும் சுகாதார கிராமங்கள் உருவாகும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.