ஒப்பந்த காலம் முடிவடையாத நிலையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியுமா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Banner
முன்பு அடுத்து Page:

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

சென்னை, மே 28_ பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்துடன், ஒப்பந்த தொழிலாளர்கள் சென் னையில் நேற்று நடத்திய 3-ஆம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதுகுறித்து, ஏஅய்டி யுசி ஜீவா ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலா ளர் என்.சேகர் கூறியதாவது:நெய்வேலி அனல்மின் கழகத்தில் ஒப்பந்த தொழி லாளர்கள் 13 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல....... மேலும்

28 மே 2016 15:58:03

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட நவீன கருவிகள் பொருத்தம்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட நவீன கருவிகள் பொருத்தம்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட 13 மதகுகளிலும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.தமிழக - -_ -கேரள மாநில எல்லையில் அமைந்து உள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடியாகும். இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த அணையானது பிரதான அணை, பேபி அணை, உபரிநீர் வெளியேறும் மதகுகள் என தனித்தனி கட்டமைப்புகளில் அமைந்துள்ளது.அணையில்....... மேலும்

28 மே 2016 15:52:03

வரதட்சணைக் கொடுமை கணவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டு சிறை

வரதட்சணைக் கொடுமை   கணவர் குடும்பத்தினருக்கு  10 ஆண்டு சிறை

வரதட்சணைக் கொடுமை  கணவர் குடும்பத்தினருக்கு  10 ஆண்டு சிறை நாகர்கோவில்,  மே 28_ நாகர்கோவில் அருகே வர தட்சணை கொடுமையால் மனைவி, குழந்தை தீயில் கருகி உயிரிழந்த சம்பவத் தில், கணவன் குடும்பத்தி னருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந் தவர் ஆசீர் டேவிட். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி கஸ்தூரி. இத்தம்பதியின் மகன் ஸ்டான்லி....... மேலும்

28 மே 2016 15:52:03

தமிழகம் காவிரியை மட்டும் நம்பி இருக்கக்கூடாதாம் கர்நாடக அமைச்சர் கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்…

தமிழகம் காவிரியை மட்டும் நம்பி இருக்கக்கூடாதாம்   கர்நாடக அமைச்சர் கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்

மன்னார்குடி, மே 28- விவசாயத் துக்கு காவிரியை மட்டும் தமிழகம் நம்பி இருக்கக்கூடாது என கர்நாடக அமைச்சர் கூறிய கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித் துள்ளனர். கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்து அங்கு அனுமதியின்றி பல அணைகளை கட்டி நீரை தேக்கியதாலும், பாசன பரப்புகளை அதிகப்படுத்தியதாலும் தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, குறுவை என இரு போகம் சாகுபடி செய்யப்பட்ட டெல்டா மாவட்டங்களில்....... மேலும்

28 மே 2016 15:52:03

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி நாகர்கோவில், மே 28_ தமி ழக சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதி களிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் களே வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் போட் டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் சுரேஷ் ராஜ னும், கன்னியாகுமரியில் ஆஸ்டினும், பத்மநாபபுரத் தில் மனோ தங்கராஜும், காங்கிரஸ் சார்பில் விள வங்கோடு தொகுதியில் விஜய தரணியும், குளச்ச....... மேலும்

28 மே 2016 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.25- ஒப் பந்தகாலம் முடிவடை யாத நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடி யுமா? என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் நலப் பணியா ளர்கள் 12 ஆயிரத்து 571 பேரை தமிழக அரசு பணிநீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நல சங்கம் உட்பட 2 சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.

அதைத் தொடர்ந்து அரசு உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து நீதி பதி கே.சுகுணா உத்தர விட்டார். சங்க உறுப்பி னர்களுக்கு உடனடியாக பணி வழங்க நீதிபதி ஆணையிட்டார்.

இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதியைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச்-ல் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி கே.சுகுணா நடத்தினார். 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜனவரி 23ஆம் தேதி அவர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் நீதிபதி தீர்ப் பளித்த பிறகும் பணி வழங்கப்படவில்லை என்று கூறி, அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பணியாளர் சங்கங்கள் தாக்கல் செய் தன. இந்த நிலையில் நீதி பதி கே.சுகுணாவின் உத் தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத் தில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி கள் தர்மாராவ், வேணு கோபால் ஆகியோர் விசாரித்தனர். மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

இந்த தடையை விலக் கக் கோரி மக்கள் நல பணியாளர் தரப்பில் வழக்குகள்தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி கள் முன்பு இந்த வழக் குகள் நேற்று விசார ணைக்கு வந்தன. மனுதா ரர் தரப்பில் வழக்கு ரைஞர் வைகையும், அரசு தரப்பில் அட்வ கேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனும் ஆஜரா னார்கள்.

அப்போது நீதிபதி கள் சில கேள்விகளை எழுப்பினர். ஒப்பந்த பணியாளர்கள் என்றா லும் அவர்களுக்கு தாக் கீது கொடுத்துதான் நீக் கம் செய்ய வேண்டும். ஆனால் மக்கள் நலப் பணியாளர் நீக்கத்தில் அப்படி செய்யப்பட வில்லை.

அவர்களுக்கு மே மாதம் வரை ஒப்பந்தம் உள்ளது. அவர்கள் பணி யில் இருந்து நீக்கப் பட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை அரசு சம்பளம் வழங்குமா? என்று நீதி பதிகள் கேட்டனர்.

இதற்கு அரசிடம் கலந்தாலோசித்துவிட்டு பதிலளிப்பதாக அட்வ கேட் ஜெனரல் கூறினார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 26ஆம்  தேதிக்கு நீதிப திகள் தள்ளிவைத்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 Ajaathasathru 2012-04-27 19:26
தாமதித்த நீதி, மறுக்கப்பட்ட நீதியே ஆகும்!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner