ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6.56 லட்சம் பேர் விண்ணப்பம்
Banner
முன்பு அடுத்து Page:

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

சென்னை, மே 28_ பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்துடன், ஒப்பந்த தொழிலாளர்கள் சென் னையில் நேற்று நடத்திய 3-ஆம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதுகுறித்து, ஏஅய்டி யுசி ஜீவா ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலா ளர் என்.சேகர் கூறியதாவது:நெய்வேலி அனல்மின் கழகத்தில் ஒப்பந்த தொழி லாளர்கள் 13 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல....... மேலும்

28 மே 2016 15:58:03

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட நவீன கருவிகள் பொருத்தம்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட நவீன கருவிகள் பொருத்தம்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் வேகத்தை கணக்கிட 13 மதகுகளிலும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.தமிழக - -_ -கேரள மாநில எல்லையில் அமைந்து உள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடியாகும். இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த அணையானது பிரதான அணை, பேபி அணை, உபரிநீர் வெளியேறும் மதகுகள் என தனித்தனி கட்டமைப்புகளில் அமைந்துள்ளது.அணையில்....... மேலும்

28 மே 2016 15:52:03

வரதட்சணைக் கொடுமை கணவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டு சிறை

வரதட்சணைக் கொடுமை   கணவர் குடும்பத்தினருக்கு  10 ஆண்டு சிறை

வரதட்சணைக் கொடுமை  கணவர் குடும்பத்தினருக்கு  10 ஆண்டு சிறை நாகர்கோவில்,  மே 28_ நாகர்கோவில் அருகே வர தட்சணை கொடுமையால் மனைவி, குழந்தை தீயில் கருகி உயிரிழந்த சம்பவத் தில், கணவன் குடும்பத்தி னருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந் தவர் ஆசீர் டேவிட். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி கஸ்தூரி. இத்தம்பதியின் மகன் ஸ்டான்லி....... மேலும்

28 மே 2016 15:52:03

தமிழகம் காவிரியை மட்டும் நம்பி இருக்கக்கூடாதாம் கர்நாடக அமைச்சர் கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்…

தமிழகம் காவிரியை மட்டும் நம்பி இருக்கக்கூடாதாம்   கர்நாடக அமைச்சர் கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்

மன்னார்குடி, மே 28- விவசாயத் துக்கு காவிரியை மட்டும் தமிழகம் நம்பி இருக்கக்கூடாது என கர்நாடக அமைச்சர் கூறிய கருத்துக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித் துள்ளனர். கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்து அங்கு அனுமதியின்றி பல அணைகளை கட்டி நீரை தேக்கியதாலும், பாசன பரப்புகளை அதிகப்படுத்தியதாலும் தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, குறுவை என இரு போகம் சாகுபடி செய்யப்பட்ட டெல்டா மாவட்டங்களில்....... மேலும்

28 மே 2016 15:52:03

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

குமரி மாவட்டத்தை அரசு புறக்கணிக்க கூடாது தி.மு.க., காங்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி நாகர்கோவில், மே 28_ தமி ழக சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதி களிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் களே வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் போட் டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் சுரேஷ் ராஜ னும், கன்னியாகுமரியில் ஆஸ்டினும், பத்மநாபபுரத் தில் மனோ தங்கராஜும், காங்கிரஸ் சார்பில் விள வங்கோடு தொகுதியில் விஜய தரணியும், குளச்ச....... மேலும்

28 மே 2016 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.24-ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) எழுதுவ தற்காக, தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் விண் ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதில் புதிய முறை கொண்டு வந்துள்ளது. அதன்படி பட்டதாரிகள், இடை நிலை பட்டயம் முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினால் தான் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு சுமார் 15,000 பட்டதாரி ஆசிரியர்கள், 10,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, கடந்த மார்ச் 7ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மார்ச் 22ஆம் தேதி முதல் விண் ணப்பம் விநியோகம் தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் சமர்ப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாளாக அறிவிக் கப்பட்டது. பின்னர், அந்த தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 12 வரை விண் ணப்பம் பெறப்பட்டது.

விண்ணப்ப விநியோகம் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது.  எல்லோ ருக்கும் விண்ணப்பம் கிடைக்கும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம்  விண்ணப்பங்களை கூடுதலாக அச்சிட்டது. அதன்படி, 14 லட்சத்து 33,678 விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக் கப்பட்டது. அதில் 7 லட்சத்து 54,000 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன. இறுதி நாளில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 6 லட்சத்து 56,063 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் கள் வந்து சேர்ந்துள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வாங்கிய மய்யங்களில் ஒப்படைக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்று அறிவித்து இருந்தும், 144 பேர் நேரடியாக தபால் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கே விண்ணப்பங் களை அனுப்பியிருக்கின்றனர். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 7 லட்சத்து 54,038 விண்ணப்பங்களில், பூர்த்தி செய்து அனுப்பியவர்கள் போக 97,975 பேர் விண்ணப்பிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner