
சென்னை, மே 24- கேன் குடிநீர் தயாரிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 309 நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில் கேன் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என்ற புகாரின் பேரில், அனைத்து கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி மூன்று மாவட்டங்களில் 92 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர்....... மேலும்
24 மே 2013 16:46:04

சென்னை, மே 24- உயர் சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப் பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மருத்துவர்களின் பரிந் துரையின் பேரில் கொண்டு செல்வது கடந்த ஆறு மாதத்தில் 4 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 108 அவசர ஆம்புலன்ஸ் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னையில் முதல் முதலாக 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் ஆரம்பிக்கப்பட் டது. தற்போது 630....... மேலும்
24 மே 2013 16:38:04

எல்.ஜி.நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 24- 1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி காலத்தில் என்னை மிசாவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, சிறையில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப் படுத்தியவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட....... மேலும்
24 மே 2013 16:34:04

இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam....... மேலும்
23 மே 2013 16:24:04

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்
23 மே 2013 15:00:03

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்
23 மே 2013 14:51:02

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்
22 மே 2013 15:32:03

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்
22 மே 2013 15:28:03

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்
22 மே 2013 15:26:03

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்
22 மே 2013 15:22:03

சென்னை, ஏப். 24- இவ்வாண்டில் 1,891 பெண் காவலர்கள் நிய மனம் செய்யப்படுவர் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இன்று (24.4.2012) கேள்வி நேரம் முடிந்தவுடன் உள், மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக் கான மான்ய கோரிக் கையை தாக்கல் செய்த முதலமைச்சர் ஜெயல லிதா அதில் கூறியிருப்ப தாவது:
கடந்த 11 மாதங்களில் 2,053 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் 9 நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அத்தி யாவசிய பொருள்களை கடத்துதல் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் பட்டுள்ளது. காவல் துறையினர் தமது கட மையை நிறைவேற்று வதில் எவ்வித குறுக்கீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது வெளிப்படையாக தெளிவு படுத்தப்பட் டுள்ளது.
கடந்த 11 மாதங்களில் காவல்துறை பாது காவலின் போது 4 மரண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காவல் துறையினரின் நடவடிக் கைகளால் மரணங்கள் நிகழுமாயின் அவற்றை அரசு மிகவும் கடுமை யாக நோக்குவதுடன் அத்துமீறிய காவல்துறை யினர் மீது தீவிர நட வடிக்கை மேற்கொள் ளப்படும். சில நிகழ்வு களில் கைது செய்யப் பட்ட நபர்கள் ஏற்கெ னவே உடல்நிலை பாதிக் கப்பட்டிருந்ததாலும் பலவீனமான நிலையில் இருந்ததாலும் இப்படிப் பட்ட சோக நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற மரணங்கள் ஏற்பட்டபோது அதற் கான காரணங்களை கண்டறிய நீதித்துறை நடுவர் மூலம் சுதந்திர மான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறையில் டிசம்பர் 1995இல் நான் முதல் முறையாக பெண் களுக்கென்று 30 சதவி கித இடஒதுக்கீடு அறிமு கப்படுத்தபட்டது. தற் போது இத்துறையில் 10,133 பெண் காவல் பணி யாளர் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டில் 1,891 பெண் காவலர்கள் நிய மனம் செய்யப்படுவர்.
கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் சட்டவிரோதமாக மது பானம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல் நாட்டு மதுபானங்களை எடுத்துச் செல்லுதல், இருப்பில் வைத்திருத் தல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கை களை தடுக்கும் பணிக ளுக்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அமைக்கப்பட்டது. மாநிலத்தில் 94 மது விலக்கு அமலாக்கப் பிரிவு கள் செயல்பட்டு வருகின்றன. 2011ஆம் ஆண்டில் இப்பிரிவால் 1,01,486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,00,930 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 221 நபர் கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2011-2012ஆம் ஆண் டில் 3,440 காவலர் குடி யிருப்புகள் ரூ. 287.95 கோடி மதிப்பீட்டில் கட்ட ஆணை வெளி யிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 4,340 குடியிருப்புகள் ரூ. 400 கோடி செலவில் கட்டப்படும். காவலர் களுக்கான குடியிருப் புகள் எண்ணிக்கையை அதிகரிப்பது வரும் ஆண்டுகளிலும் தொட ரும்.
2011-2012இல் காவல் துறையினருக்கான குடியிருப்புகள் மற்றும் பிறகட்டடங்களுக் கென ரூ. 377.95 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப் பட்டுள்ளது. காவல்துறை நிருவா கத்தினை நவீனப்படுத் தவும் மின் ஆளுமையை மேம்படுத்தவும் ஆயிரம் புதிய கணினிகள் வழங் கப்படும். அதன் அடிப்ப டையில் ரூ. 5 கோடி அனுமதிக்கப்பட்டு இக்கணினிகள், கோட்டம், மாவட்டம், சரக, மண் டல அளவிலான அலுவலகங்கள் சிறப்புப் பிரிவுகள் மற்றும் காவல் துறை தலைமையகத்தில் நிறுவப்படும் என முதல மைச்சர் சட்டமன்றத் தில் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை, ஏப். 24- நெல் கொள்முதல் செய்யப் படும்போது, விவசாயி களுக்குமின்னணு அட்டை (எலக்ட்ரானிக் கார்டு) மூலம் பணப் பட்டுவாடா செய்யப் படும் என அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித் தார்.பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள் கிழமை 23.4.2012 நடந்த விவாதத்துக்குப் பதில ளித்து அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய் யப்பட்டு வருகிறது. நெல்லுக்கான தொகை இப்போது ரொக்கமாக வழங்கப் பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றி, அவர் களுடைய வங்கிக் கணக் குகளில் அவர்களுக்கான தொகைமின்னணு அட்டை மூலம் நேரடி யாக வழங்கப்படும். ரூ.3.20 கோடி செலவி லான இந்தப் புதிய திட் டத்தால் 8 லட்சம் விவ சாயிகள் பயன்பெறுவர். நெல் தூற்றும் இயந்தி ரங்கள்: தமிழகத்தில் இப்போது 1,459 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் 680 இடங் களில் மட்டுமே தமிழ் நாடுநுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நெல் தூற்றும் இயந்திரங்கள் உள்ளன. எனவே, விவ சாயிகளின் நலன் கருதி அனைத்து நெல் கொள் முதல் நிலையங்களுக்கும் ரூ.2.10 கோடி மதிப்பில் நெல் தூற்றும் இயந்தி ரங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 1,394 நியாய விலை கடை களில் 899 கடைகள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் வாடகைக் கட்டடங் களில் இயங்கும் 100 கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப் படும் என்றார்.