Banner
முன்பு அடுத்து Page:

தேசிய கண்டுபிடிப்பு பிரச்சாரத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் கலாமின் பெயர்

தேசிய கண்டுபிடிப்பு பிரச்சாரத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் கலாமின் பெயர்

புதுடில்லி, ஜூலை 29_ மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 'தேசிய கண்டுபிடிப்பு பிரச்சாரம்' (நேஷனல் இன்வென்ஷன் காம்பைன்) திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, 'ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய கண்டுபிடிப்பு பிரச்சாரம்' என, வைக்கப் படுகிறது. மாணவர்கள், தங்கள் பாடங்களைத் தாண்டி, அறிவியல் அறிவில் சிறந்து விளங்குவதை ஊக்கு விப்பதற்கும், பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா விஷன்' திட்டத்தை முன் னோக்கி கொண்டு செல்லும் வகை யிலும், 'தேசிய....... மேலும்

29 ஜூலை 2015 16:25:04

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு94,772 இடங்கள் காலியாக உள்ளன

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு94,772 இடங்கள் காலியாக உள்ளன

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு94,772 இடங்கள் காலியாக உள்ளன சென்னை, ஜூலை 28_ பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ் வாய்க்கிழமையோடு (ஜூலை 28) நிறைவுபெற உள்ள நிலையில் 94,772 பி.இ. இடங்கள் காலியாக உள்ளன. அழைக்கப்பட்ட வர்களில் 98 ஆயிரம் பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது வெகு குறைவாகும்.  பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா....... மேலும்

28 ஜூலை 2015 17:14:05

பெரியார்பற்றி மாணவர்களிடம் கலாம்

பெரியார்பற்றி மாணவர்களிடம் கலாம்

25.05.2015 அன்று இரவு 10 மணியளவில் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் அறிவியல் அறிஞர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களை டில்லி யில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தித்தனர். மாணவர்களிடம் பல்வேறு செய்திகள் குறித்து ஆர்வத்துடன் உரையாடினார். இந்த சந்திப்பு புதுடில்லியிலுள்ள அப்துல்கலாம் இல்லத்தில் நடை பெற்றது. அப்துல்கலாம் அவர்கள், தொடர்ந்து குழந்தைகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். பெரியார் குறித்து என்ன....... மேலும்

28 ஜூலை 2015 16:41:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, ஏப்.24- சத்தீஷ்கார் மாநிலம் சுக்ரா மாவட்ட கலெக்டராக இருப்பவர் அலெக்ஸ் பால்மேனன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்று விட்டனர்.

கடத்தப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனனை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் உள்ள 8 பேரை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தை முகாம்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற 25 ஆம் தேதி வரை கெடு விதித்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனனை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒடிசா மாநில எல்லையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் உள்ள பணிகளை பார்வையிட தனது அலுவலக சோதனைக்காக சென்றிருந்த சத்தீஷ்கார் மாநில சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டுகளால் கடந்த 21 ஆம் தேதி கடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

கடத்தப்பட்ட அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாதுகாப்பு குறித்து, அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியராக தனது அலுவலக பணிகளை ஆற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த அதிகாரி கடத்தப்பட்டது மிகவும் வாய்ப்புக் கேடானதாகும்.

கடத்தப்பட்ட அதிகாரியை விரைவில் பாதுகாப்புடன் விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் உள்துறை ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட உள்ளூர் மக்கள் அனைவரும் இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையோடு இருக்கிறார்கள்.

குறிப்பாக அந்த அதிகாரி உடல் நலம் இல்லாமல் இருப்பதால் கடத்தப்பட்ட அவர் விரைவில் விடுவிக்கப்பட்ட நல்ல செய்தியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அதிகாரியை விரைவில் பாதுகாப்போடு விடுவித்து அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு நிம்மதியை அளிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்