Banner
முன்பு அடுத்து Page:

சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில் எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்…

சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில்              எந்த வடிவத்தில் வந்தாலும்  நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்!

சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில்             எந்த வடிவத்தில் வந்தாலும்  நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்! சென்னை, பிப்.9_ சமூகநீதியின் தாயகமான தமிழகத்தில் எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவுத் தேர்வை எதிர்ப் போம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (8.2.2016) எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இளநிலை மற்றும் முதுநிலை  மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு தனியார் கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும்,  தேசிய  அளவில்  பொது மருத்துவ நுழைவுத் தேர்வு  நடத்தும்  திட்டத்துக்கு மத்திய....... மேலும்

09 பிப்ரவரி 2016 16:43:04

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு: இன்று முதல் அமல்

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை  உயர்வு: இன்று முதல் அமல்

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை  உயர்வு: இன்று முதல் அமல் சென்னை, பிப்.9_ தனியார் பால் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள் ளது. இது செவ்வாய்க் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. பால் கொள்முதல் விலை, மூலப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கார ணம் காட்டி, 2015-இல் தமிழகத்தில் 4 முறைக்கும் மேல் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பை அடுத்து, தனியார் பால் நிறுவனங்கள்....... மேலும்

09 பிப்ரவரி 2016 16:37:04

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்கட்ட சோதனை நடந்து வருகிறது

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்  முதல்கட்ட சோதனை நடந்து வருகிறது

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்  முதல்கட்ட சோதனை நடந்து வருகிறது சென்னை, பிப்.9_- சட்ட மன்ற தேர்தலுக்கு இன் னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்த லுக்கான ஏற்பாடுகளை செய்ய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக வாக் காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்குதல், ஆன்-லைன் மூலம் விண் ணப்பித்தவர்களுக்கு வீடு தேடிச்சென்று வாக்காளர் அடையாள அட்டை வழங் குதல் என தீவிர நடவ டிக்கைகள்....... மேலும்

09 பிப்ரவரி 2016 16:35:04

விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்

விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்

விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்: உடற்கூறு ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் சென்னை, பிப்.9_ விழுப் புரம் மாவட்டத்துக்குள் பட்ட கள்ளக்குறிச்சி அரு கேயுள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல் லூரியின் 3 மாணவிகள் அண்மையில் இறந்த விவ காரத்தில், உடற்கூறு ஆய்வு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி. சி.அய்.டி. காவல்துறையி னர் திங்கள்கிழமை தாக்கல் செய்தனர். இந்தக் கல்லூரி மாண விகள் மோனிஷா, பிரி யங்கா, சரண்யா ஆகியோர்....... மேலும்

09 பிப்ரவரி 2016 16:33:04

கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை கி.பி. 500க்குப் பிறகு வலிமையாக சமூகத்தில் இ…

கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை கி.பி. 500க்குப் பிறகு வலிமையாக சமூகத்தில் இறுகியது!

வேதங்களும், ஸ்மிருதிகளுமே இந்தப் பிளவுகளுக்குக் காரணம்தேசிய மரபணு ஆய்வு மய்யத்தின் தலைவர் பேட்டி கோல்கத்தா பிப் 8-_ சமூகத்தில் மக்களை வர்ணாசிரம முறையில் கூறு போட்டவை வேதங்க ளும், ஸ்மிருதிகளுமேதான் என்று மரபணு ஆய்வு மய்யத்தின் தலைவர் முஜும்தார் செய்தியாளர் களிடம் கூறினார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர் களின் மரபணுவைப் பரிசோதனை செய்த  உயிரியல் ஆய்வு மய்யம்  இந்திய தீபகற்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்கள் 70 தலைமுறைகளுக்கு முன்பு அதாவது சுமார்....... மேலும்

09 பிப்ரவரி 2016 15:42:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.22-சென்னை பெருநகர போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய 3 புதிய இணைப்பு சாலைகள், 2 சாலை மேம்பாலங்கள், 2 ஆற்று மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரி வித்தார்.

சட்டசபையில் 20.4.2012 நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை மானி யக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி பேசியதாவது: சாலைகளை அகலப்படுத்துதல்

பெருகி வரும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க இந்த ஆண்டு 350 கி.மீ. இடை வழித்தட மாநில நெடுஞ் சாலைகளையும், 1150 கி.மீ. ஒரு வழித்தட மாவட்ட முக்கிய சாலை களையும் அகலப்படுத் தும் பணி ரூ.740 கோடி யில் மேற்கொள்ளப்படும்.
ரூ.215 கோடியில் மாவட்ட முக்கிய சாலை கள் மற்றும் மாவட்ட இதர சாலைகளை வலுப்படுத்துதல், மேம்பாடு செய்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளும், ரூ.235 கோடியில் பாலப் பணி களும் நபார்டு வங்கியின் அங்கீகாரம் பெறப் பட்டவுடன் மேற்கொள் ளப்படும். நெடுஞ்சாலை களின் ஓரங்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.

திருவள்ளூரில் பைபாஸ் ரோடு

கடலூர்  விருத்தா சலம் வழியாக சேலம் சென்றடையும் 111 கி.மீ. மாநில நெடுஞ்சா லையை தேசிய நெடுஞ் சாலையாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இந்த ஆண்டு முதல் இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக பராமரிக்கப்படும்.

கூட்டேரிப்பட்டு அருகே மைலம் புதுச் சேரி மாநில நெடுஞ் சாலை, வெள்ளிமேடு பேட்டைமைலம் சாலை சந்திப்பில் ரூ.25 கோடியில் பல்லடுக்கு பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக் கப்படும். திருவள்ளூர், திருத்தணி, மணச்சநல் லூர், மன்னார்குடி நக ரங்களுக்கு புறவழிச் சாலைக்கான நில எடுப்புப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

சென்னையின் தேவைக்காகசென்னை பெருநகர வளர்ச்சியின் போக்கு வரத்து தேவையினை பூர்த்திசெய்யும் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

* பல்லாவரம்  துரைப் பாக்கம் சாலையினை கிழக்கு கடற்கரை சாலை வரை நீட்டிப்பு செய்யும் வகையில் ஒரு புதிய இணைப்பு சாலை * மறைமலை அடிகள் பாலம்  இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் பகுதியினை ராஜீவ்காந்தி சாலையில் காரப்பாக்கம் பகுதியில் இணைக்கும் விதமாக சிறப்பு பொரு ளாதார மண்டலத்தின் பின்புறமாக புதிய இணைப்பு சாலை.

* அம்பத்தூர் பகுதி யில் சென்னை புறவழிச் சாலையினையும் சென்னை வெளிவட்டச் சாலையினை கருணாக ரச்சேரி அருகில் இணைக் கும் விதமாக புதிய 200 அடி அகல ஆரச்சாலை.

*கீழ்கட்டளை அருகே மவுண்ட் மேட வாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் துரைப் பாக்கம் சாலைகளின் சந்திப்பில் ஒரு மேம் பாலம் அமைக்கப்படும்.

* மேடவாக்கத்தில் மறைமலை அடிகள் பாலம்  இரும்புலியூர் சாலையுடன் மேட வாக்கம்  சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம்  மாம் பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட்  மேட வாக்கம் சாலை சந்திப் புகளை இணைக்கும் வகையில் ஒரு மேம் பாலம் அமைக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்