அண்ணா பல்கலைக்கழகம்: ஜூன் முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு
முன்பு அடுத்து Page:

சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. (27.6.2016) திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி, கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன், மேயர் சா.கணேசன், மாறன், இளங்கோ முதலியோர் உரையாற்றினர். தென்சென்னை மாவட்ட....... மேலும்

28 ஜூன் 2016 16:00:04

நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள்

நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள்

நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள் சென்னை, ஜூன் 27 சென் னையின் முக்கியமான 4 ரயில் நிலையங்களில் 122 சிசி டிவி கேமராக்கள் பொருத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், ஏற்கெ னவே பொருத்தப்பட்டு தரமற் றுள்ள கேமராக்களை அகற்ற வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக் கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரூ.41 கோடியே 60 லட்சம் செலவில்....... மேலும்

27 ஜூன் 2016 15:58:03

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

அரசு மருத்துவமனைகளில் ஏழை எளியவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு சென்னை, ஜூன் 27 அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியவர்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதற்குத் தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது முகநூலில் பதிவு செய்துள்ளார். சேலம் மாவட்டம், மேட் டூர் அரசு....... மேலும்

27 ஜூன் 2016 15:54:03

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதா? திமுக தலைவர் கலைஞர் கேள்வி

  தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதா? திமுக தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதா என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கேள்வி :- ஆளுநர் உரையில், அடுத்த அய்ந்தாண்டு களில் 13,000 மெகாவாட்  அனல் மின் திறனும், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின் திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப் பட்டு, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று சொல்லி யிருக்கிறார்களே? கலைஞர் :- அய்ந்தாண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க........ மேலும்

27 ஜூன் 2016 15:36:03

100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 லட்சம் மின்வாரியம் கணக்கெடுப்பு

 100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 லட்சம் மின்வாரியம் கணக்கெடுப்பு

சென்னை, ஜூன் 26 தமிழக அரசின் 100 யூனிட் மின்சாரம் இல வசம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, 89 லட்சம் பேர் மின்சாரக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இல வசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையடுத்து அதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி, கடந்த மாதம் 23-ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப் படும் அனைத்து....... மேலும்

26 ஜூன் 2016 15:04:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி,ஏப்.21- பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்று மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் கூறினார்.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது எதிர்கால தேவைக்கு தகுந்தாற்போல் சேர்ந்து படிக்கவேண்டிய கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரிய ராஜ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கவேண்டும், எந்த கல்லூரியில் படிக்கவேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ளவேண்டும். அந்த முடிவானது பெற்றோரின் கருத்துக்கு ஏற்பவும் இருக்கவேண்டும்.

அதேநேரத்தில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை முடிவு எடுக்க சுதந்திரமாக விடவேண்டும். தங்களது எண்ணங்களை அவர்கள் மீது திணிக்கக்கூடாது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும்.

மாணவர்கள் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக அந்த கல்லூரிகளின் தரம், ஆசிரியர்களின் திறமை பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளியில் மனப்பாடம் செய்து பாடங்களை படிப்பதுபோல் கல்லூரிகளில் படிக்க முடியாது. எனவே மாணவர்கள் புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

புரியும் திறனை வளர்த்துக்கொள்ள முடியாத மாணவர்கள் தான் பருவத்தேர்வுகளில் தோல்வியை தழுவுகிறார்கள். தமிழகத்தில் தற்போது 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு பல கல்லூரிகளில் ஏ.அய்.சி.டி.இ கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே கலந்தாய்வு  மூலம் சுமார்ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner