Banner
முன்பு அடுத்து Page:

அண்ணாமலை பல்கலை. தொலைநிலைக் கல்வி: யு.ஜி.சி. உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அண்ணாமலை பல்கலை. தொலைநிலைக் கல்வி: யு.ஜி.சி. உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அண்ணாமலை பல்கலை. தொலைநிலைக் கல்வி: யு.ஜி.சி. உத்தரவுக்கு இடைக்காலத் தடை சென்னை, செப்.2_ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வியில் 2015_20-16 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து அண்ணா மலை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே.ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்த....... மேலும்

02 செப்டம்பர் 2015 16:48:04

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம்

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம்

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் சென்னை,  செப்.2_ சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்: வானவியல் கருத்துக்களை சிறப்பான ஒளி- ஒலி....... மேலும்

02 செப்டம்பர் 2015 15:45:03

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிப்பு

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிப்பு

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிப்பு சென்னை, செப். 2_ குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை என்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் சர்க் கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என அப்போலோ சுகர் மருத்துவ மனையின் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் உஷா தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளி களுக்கு அவர்கள் உடலில் போதுமான அளவு இன் சுலின் சுரக்காதது அல்லது இன்சுலின் சரியான செயல் திறன் போதுமானதாக இல்லாத காரணத்தால்....... மேலும்

02 செப்டம்பர் 2015 15:44:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.20- காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலை வரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தலைவ ராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறி கிறேன். காவிரி நீரை மாநிலங் களுக்கு இடையே பகிர்ந்து அளிப் பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற் றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலு வையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசா ரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16-3-2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17-4-2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23-3-2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்து விட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலை யில், காவிரி நடுவர் மன்றத் தலை வரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத் தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-இன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல் பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கை கள் எதையும் தொடர முடியாது. இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.- இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டு உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்