காவிரி நடுவர் மன்றம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
முன்பு அடுத்து Page:

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி சென்னை, ஜூன்24- நெய்வேலி சுரங்க நிலக்கரி நிறுவனத்தில் (என் எல்சி) பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை யில் நேற்று மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னி லையில் நடந்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி யில் முடிந்தது........ மேலும்

24 ஜூன் 2016 19:03:07

சென்னை உள்ளிட்ட மூன்று மாநில உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு

சென்னை உள்ளிட்ட மூன்று மாநில உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு

சென்னை உள்ளிட்டமூன்று மாநில உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு சென்னை, ஜூன் 24 சென்னை உள்ளிட்ட மூன்று மாநில உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றங்களுக் கான மசோதாவானது எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொட ரில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தலைநக ரங்களின் பெயர்கள் முறையே மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா என....... மேலும்

24 ஜூன் 2016 19:02:07

கச்சத் தீவுப் பிரச்சினை அன்று முதல்வர் ஜெயலலிதா எழுதியது என்ன? துரைமுருகன் விளக்கம்

கச்சத் தீவுப் பிரச்சினை அன்று முதல்வர் ஜெயலலிதா எழுதியது என்ன? துரைமுருகன் விளக்கம்

கச்சத் தீவுப் பிரச்சினைஅன்று முதல்வர் ஜெயலலிதா எழுதியது என்ன?துரைமுருகன் விளக்கம் சென்னை, ஜூன் 24 கச்சத்தீவு பிரச்சினையில் 2003இல் முதல் அமைச்சர் ஜெயலலிதா அ ன்றைய பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதியது என்ன என்பது குறித்து தமிழ சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் சட்ட மன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம் வருமாறு:தி.மு.க. தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லி, அவர்தான் கச்சத்தீவை விட்டுக் கொடுத்து விட்டார் என்கிறார். இந்திய....... மேலும்

24 ஜூன் 2016 18:54:06

ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற காவல் துறை சார்பில் புதிய செயலி

ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற காவல் துறை சார்பில் புதிய செயலி

ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற காவல் துறை சார்பில் புதிய செயலி மதுரை, ஜூன் 24 ஆபத்தில் இருப் பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இயங்கும் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது: மதுரை நகரில் குற்றங்களைத் தடுப்பற்காக பல்வேறு நட வடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆபத்தில் இருப்பவர் களை....... மேலும்

24 ஜூன் 2016 16:48:04

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும்சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை சென்னை, ஜூன் 24 சென்னைப் பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பான சூழலுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநக ராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடு நிலைப் பள்ளிகள், 119 தொடக் கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 261 முதுகலைப் பட்டதாரி ஆசிரி....... மேலும்

24 ஜூன் 2016 16:45:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.20- காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறிகிறேன்.

காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16.3.2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17.4.2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23.3.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துவிட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தலைவரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-இன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல் பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கைகள் எதையும் தொடர முடியாது.

இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner