கூட்டமாக நீதிமன்றத்திற்குள் வரவேண்டாம்: நீதிபதிகள் அறிவுரை
முன்பு அடுத்து Page:

சிறுவாணி-பவானி ஆறுகளின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா முடிவாம்

சிறுவாணி-பவானி ஆறுகளின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா முடிவாம்

சிறுவாணி-பவானி ஆறுகளின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா முடிவாம் கோவை, ஆக.27 கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான முக்கிய நீராதாரமாக சிறுவாணி, பவானி ஆறுகள் விளங்குகின்றன. பவானி ஆறு காவிரிக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 2-ஆவது பெரிய நதியாகும். இது நீலகிரி மாவட்டம் அமைதி பள்ளத்தில் உற்பத்தி யாகி கேரள மாநில எல்லையில் உள்ள அட்டப்பாடி வழியாக பாய்ந்து ஓடி முக்காலி என்ற இடத்தில் மீண்டும் தமிழகத் துக்குள்....... மேலும்

27 ஆகஸ்ட் 2016 15:28:03

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக கலைஞர் வலியுறுத்தல்

  துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக கலைஞர் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 27- உயர் நீதி மன்ற உத்தரவுப்படி விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று (26.8.2016) அவர் வெளியிட்ட அறிக்கையில்: “சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றத்துக்கான இந்தியா அமைப்பின் இயக்கு நர் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், ‘’தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகள், குழாய்களுக் குள்....... மேலும்

27 ஆகஸ்ட் 2016 15:11:03

புதிய தொழிற் கொள்கை அறிவிக்க தயார் புதுவை முதல்வர் நாராயணசாமி தகவல்

புதிய தொழிற் கொள்கை அறிவிக்க தயார் புதுவை முதல்வர் நாராயணசாமி தகவல்

புதிய தொழிற் கொள்கை அறிவிக்க தயார் புதுவை முதல்வர் நாராயணசாமி தகவல் புதுச்சேரி, ஆக.27 புதிய தொழிற் கொள்கை அறிவிக்க தயாராக உள்ளதாக புதுவை முதலமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் உரை மீதான விவாதம் புதுச்சேரி சட்டப் பேரவையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. ஆளு நர் உரை மீதான நன்றி தெரி விக்கும் தீர்மான விவாதத்தை நிறைவு செய்து பேசிய முதல் வர் வி. நாராயணசாமி, ``நிதிநிலை குறித்த....... மேலும்

27 ஆகஸ்ட் 2016 14:47:02

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

சேலம், ஆக.26 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை யின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலத்தில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக் கிழமை (25.8.2016) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியது:மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான....... மேலும்

26 ஆகஸ்ட் 2016 16:38:04

மகத்தான மனிதநேயம் விபத்தில் மூளைச்சாவு : 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்த சிறுவன்

மகத்தான மனிதநேயம் விபத்தில் மூளைச்சாவு : 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்த சிறுவன்

மகத்தான மனிதநேயம்விபத்தில் மூளைச்சாவு : 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்த சிறுவன் நெல்லை, ஆக.26 விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாண வனின் உடல் உறுப்புகள் கொடை யாக அளுலீக்கப்பட்டு ஆறு பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. குமரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் சாமி நாதன். ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி புரி கிறார். இவர்களது மகன் அவி னாஷ் (12)........ மேலும்

26 ஆகஸ்ட் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.19- வழக்கு விசாரணையின்போது மக்கள் நலப்பணியாளர்கள் கூட்டமாக நீதிமன்றத்திற்குள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த அரசாணையை ரத்து செய்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உயர்நீதிமன்றம் நீதிபதி கே.சுகுணா உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா பிறப்பித்திருந்த உத்தரவுக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த இடைக்கால தடை உத்தரவை விலக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அதே நீதிபதிகளிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கான பணி ஒப்பந்த காலம் வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, எல்.சந்திரகுமார் ஆகியோர் வாதிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கோர்ட்டுக்குள் ஆஜராகியிருந்தனர். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், `அவர்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள சங்கங்களின் நிர்வாகிகள் வேண்டுமானால் கோர்ட்டுக்குள் வரலாம். மக்கள் நலப்பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டமாக வர வேண்டாம். இது விசாரணைக்கு தடங்கலாக உள்ளது.

இந்த வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம். மக்கள் நலப்பணியாளர்கள் பெரும் கூட்டமாக வருவதை தவிர்த்தால்தான் வழக்கை நடத்த முடியும்'' என்று குறிப்பிட்டனர்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner