முன்பு அடுத்து Page:

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை

சென்னை, மார்ச் 24- தமிழகத்தின்  நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தத் தடை விதித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.நாராயணா என்பவர் உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நெரிசல் மிகுந்த ரத வீதிகளில் அண்மைக் காலமாக அரசியல் கட்சிகளின்....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

சென்னை, மார்ச் 24 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறினார். சென்னை விமான நிலை யத்தில் 23.3.2019 அன்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் திமுக தலை மையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிக ளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். திருச்சியில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவ....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு…

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது  அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு.க.ஸ்டாலின் கேள்வி

அரூர், மார்ச் 24- தமிழகத்துக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாத பாஜகவுடன் எதற்காக கூட்டணி வைக்கிறீர்கள் என்ன சாதித்தீர்கள் என தி.மு.க. தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் பேசியதாவது: மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது வெற்றி பெற்றால் தான் தமிழகம் வளர்ச்சி....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

சென்னை, மார்ச் 24  பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக் கண் ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆண்டுதோறும் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி என 3....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

ஜூன் 3 முதல் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பாடநூல் விநியோகம்

சென்னை, மார்ச் 24  பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாட நூல்கள் வழங்கப்பட வுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-&2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

தொல்.திருமாவளவன் பேச்சு சிதம்பரம்,  மார்ச் 24  தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிறீரமேஷ் ஆகியோரின் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி வேட்பா ளரும், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியதா வது: மத்தியில்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

பொள்ளாச்சி அவலம்: மூடி மறைக்க அரசு முயலக் கூடாது தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 23    பொள்ளாச்சி அவலத்தை மூடி மறைக்கும் வேலையில் அரசு ஈடுபடக் கூடாது - குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். நேற்று (22.3.2019) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ்விவரம் வருமாறு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி... செய்தியாளர்: பொள்ளாச்சி....... மேலும்

23 மார்ச் 2019 16:36:04

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் இன்று சனிக்கிழமை (மார்ச் 23)  கடைப்பிடிக்கப்படுகிறது. இந் தாண்டு  சூரியன், பூமி மற்றும் வானிலை எனும்  கருப் பொருள் மய்யமாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப் படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கிய மானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத் துழைப்பும் தேவைப்படுகிறது. ஒரு  நாட்டின்....... மேலும்

23 மார்ச் 2019 15:15:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

சென்னை, ஜன.10 தமிழகத்தில் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் மனு அளித்தனர்.

மேலும் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி- தொடக்கக் கல்வி இயக்குநர்கள் ஆகியோரிடமும் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அங்கு செயல்பட்டு வரும் 3,500 சத்துணவுக் கூடங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் 3,500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கு பணியாற்றும் சமையலர்கள், முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் பதவியிலிருந்து பணி இறக்கம் செய்யப்பட்டு பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு இல்லாமல் போகும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடக்கக் கல்வித் துறையை தனித்தனியாகப் பிரித்து தனி அலுவலர்களை நியமித்து அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுத்தார். ஆனால் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை, நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், அதிகாரக் குவியலுக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

இந்த நடவடிக்கையால் கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி உரிமைகள் பறிபோகும். எனவே, தொடக்கப் பள்ளியை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு 5 டிஎம்சி குடிநீர்: 4 மாநிலம் ஒப்புதல்

மேலாண்மை வாரிய கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜன.10 தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து 2ஆவது தவணைக் காலமான ஜனவரி 1ஆம் தேதி முதல் 4  டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆந்திர நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியது. ஆனால், ஆந்திர  அரசிடம் இருந்து பதில் வரவில்லை. இதை தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.  இதை  தொடர்ந்து மத்திய நீர் வள ஆணையம் சார்பில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியம் கூட்டத்தில் பங்கேற்க 5 மாநில அரசுகளுக்கு அழைப்பு  விடுத்தது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் நேற்று மாலை 3 மணியளவில் கிருஷ்ணா நிதி நீர் மேலாண்மை வாரியம் கூட்டம்  நடந்தது.

சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகராட்டிரா மாநில நீர்வளத்துறை  செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை  நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம்,  சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக அதிகாரிகள்  தரப்பில், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.  இந்த நீர் இருப்பை கொண்டு 1 மாதம் தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அதன்பிறகு குடிநீர் தட்டுபாட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே,  தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 4 மாநில அரசுகளும் தண்ணீரை பங்கிட்டு கொடுத்தால் சென்னை மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி  செய்ய முடியும். குறைந்தது 5 டிஎம்சி கொடுத்தால் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலகட்டம் வரை எங்களால் சமாளித்து கொள்ள முடியும்  என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, 4 மாநில நீர்வளத்துறை செயலாளர்களும் தண்ணீர் தர ஒப்புக் கொண்டனர்.

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner