முன்பு அடுத்து Page:

குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? அம்பலத்துக்கு வந்த இரகசியம்

குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? அம்பலத்துக்கு வந்த இரகசியம்

காந்திநகர், அக்.20  குஜராத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதன் உள்நோக்கம் குறித்து பாஜக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்ற நிலையில், பாஜக முதல்வரான விஜய் ரூபானியின் குஜராத் மாநில அரசு பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்துள்ளது.தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் குஜராத் மாநில அரசு ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.குஜராத் மாநில துணை....... மேலும்

20 அக்டோபர் 2017 16:34:04

வழக்குரைஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்

வழக்குரைஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னை, அக்.20 வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த....... மேலும்

20 அக்டோபர் 2017 16:21:04

ஆளும் கட்சி பிளவால் தமிழக மக்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஆளும் கட்சி பிளவால் தமிழக மக்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சென்னை, அக். 20- ஆளும் கட் சியான அதிமுகவில் நிலவும் குழு மோதல் போக்குகளால் தமிழ்நாட்டு மக்களின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:ஆளும் கட்சியான அதிமுக வில் நிலவும் குழு மோதல் போக்கு களால் தமிழ்நாட்டு மக்களின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி இணைப்பிற்கு பின்னாலும் தனித்தனியாகவே செயல்பட்டு....... மேலும்

20 அக்டோபர் 2017 15:44:03

மறுக்கிறார் துரைமுருகன்!

மறுக்கிறார் துரைமுருகன்!

சென்னை, அக். 20- தான் தீபாவளியைக் கொண்டாடுப வன் அல்ல வென்றும், தன் பெயரில் தீபாவளி வாழ்த்து மடல் வெளியிட்டவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக வும் திமுக முதன்மைச் செயலா ளரும், மேனாள் அமைச்சரு மான துரைமுருகன் பொது அறிவிப்பு விடுத்துள்ளார்.தனது முகநூல் பக்கத்தில் ‘பொது அறிவிப்பு' என்று தலைப்பிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அன்பான வர்களுக்கு வணக்கம், நான் தீபாவளியைக் கொண்டாடுபவன் அல்ல. எனது பெயரில் வாழ்த்துமடல் செய்து முகநூல்....... மேலும்

20 அக்டோபர் 2017 15:43:03

சைதை-டிஎம்எஸ் இடையே மார்ச்-18 முதல் மெட்ரோ ரயில் ஓடும் தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

சைதை-டிஎம்எஸ் இடையே மார்ச்-18 முதல் மெட்ரோ ரயில் ஓடும் தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

சென்னை, அக். 20- சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் சுரங்கப் பாதையில் வரும் மார்ச்சில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய....... மேலும்

20 அக்டோபர் 2017 15:33:03

புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டத் தடை!

புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டத் தடை!

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு சென்னை, அக்.19   நாளிதழில் வெளியான செய்தியை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், புழல்  ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கும், மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கும் உத்தர விட்டுள்ளது.  சென்னை மக்களின் குடிநீருக்காக புழல் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சில மர்ம நபர்கள், அந்த ஏரியில் ....... மேலும்

19 அக்டோபர் 2017 16:01:04

சென்னையில்: பட்டாசு புகையால் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு

 சென்னையில்: பட்டாசு புகையால் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு

சென்னை, அக்.19 பட்டாசு புகையால் சென்னையில் காற்றுமாசு பெருமளவு அதி கரித்துள்ளதுஎனமாசுக்கட் டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசு அளவாகும். ஆனால், நேற்று பட்டாசு வெடித்ததன் காரணமாக 2.5 மைக்ரானில் 263 நுண்துகள்கள் உள்ளன. மேலும் சென்னையில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மாலை 4....... மேலும்

19 அக்டோபர் 2017 14:56:02

கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விருத்தாசலம், அக்.19 கடலூர் மாவட் டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி நிலுவை தொகையை இதுவரை வழங்கவில்லை. இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வில்லை.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கரும்பு விவசாய....... மேலும்

19 அக்டோபர் 2017 14:52:02

பாசன கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

பாசன கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம், அக்.19 மாயனூர் காவிரியிலிருந்து தென் கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ண ராயபுரம் வாய்க்கால் என 3 முக்கிய பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் பல கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் கிளை வாய்க்கால்கள் எல்லாம் தூர் வாரப்படாததால் தண்ணீர் திறக்கப்பட்டும் கடை மடை வரை தண்ணீர் செல்வதில் பிரச்சினை நிலவுகிறது. வாய்க்....... மேலும்

19 அக்டோபர் 2017 14:49:02

டெங்கு பாதிப்பு உண்மையை வெளியிடக் கூடாதென தனியார் மருத்துவமனைகளுக்கு அச்சுறுத்தல் மு.க.ஸ்டாலின் கு…

டெங்கு பாதிப்பு உண்மையை வெளியிடக் கூடாதென தனியார் மருத்துவமனைகளுக்கு அச்சுறுத்தல்   மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, அக்.19 டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை வெளியிடக்கூடாது என தனியார் மருத்துவமனைகள் அச்சுறுத்தப் படுகின்றன என்று மு.க.ஸ்டா லின் கூறினார்.திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்து வமனையில்  ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் காய்ச்சல் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பலவித காய்ச்சல் களால் பாதிக்கப்பட்டு....... மேலும்

19 அக்டோபர் 2017 14:40:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை, ஜன.9 இலங்கையில் உள்ள 20 தமிழக மீனவர்கள், 118 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்துக்காக ரூ.1,650 கோடியை விரைவில் ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று இலங்கை வசம் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் விடுவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக தமிழக கரைக்கு வந்து சேரவில்லை. அதற்கிடையில், பாக் நீரிணையில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதி யில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 6 மீன வர்கள், ராமேசுவரம் பகுதியில் இருந்து சென்ற 4 மீனவர்கள் டிசம்பர் 8-ஆம் தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகளுடன் இலங்கையின் காங்கேசன் துறை மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறது. கடந்த 2016ஆ-ம் ஆண்டில் நடந்த 39 சம்பவங்களில் 290 தமிழக மீன வர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர் களது 53 படகுகளும் பறிக்கப்பட்டன. இதில், முன்னாள் முதல்வரின் முயற்சியால் 290 மீன வர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட் டாலும், அவர்களின் முக்கிய வாழ்வா தாரமான படகுகள் மற்றும் மீன்பிடி சாத னங்களை இலங்கை அதிகாரிகள் விடுவிப் பதில்லை.  படகுகள் விடுவிக்கப்படாதது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பராமரிக்கப்படாததால், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 118 படகுகளும் சேதமடைந்து வருகின்றன.

இரண்டு வடகிழக்கு பருவமழை காலங்கள் கடந்து விட்டதால், இந்த படகுகள் பயன் படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டன. அதனால்தான், படகுகளை மீட்டு, அவற்றை பயன்படுத்தும் வகையில் பழுதுபார்த்து மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என எங்கள் கட்சித்தலைவர் பலமுறை தங்களிடம் வலியுறுத்தினார்.

பாக் நீரிணைப் பகுதியில் உள்ள இந்தியா- இலங்கை இடையிலான சர்வ தேசக் கடல் எல்லையானது வழக்கு இருப் பதால் முடிந்துவிட்ட ஒன்றல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அதே போல், கடந்த 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து, அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர் களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், நீண்ட நாள் திட்டமாக ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக ரூ. ஆயிரத்து 650 கோடியை ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்புத் திட்டத்துக்காக வழங்க வேண்டும் என ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார். அதே கோரிக்கையை நான் கடந்த 19ஆ-ம் தேதி தங்களிடம் அளித்த மனுவிலும் தெரிவித்துள்ளேன்.

எனவே, தற்போது இலங்கை வசம் உள்ள 20 மீனவர்கள் மற்றும் 118 படகு களை காலதாமதமின்றி விடுவிக்க நட வடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுற வுத்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தர விட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறி யுள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner