முன்பு அடுத்து Page:

பெரியார் கல்விக் குழுமங்களில் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு மதிப்பெண் எடுக்க பய…

  பெரியார் கல்விக் குழுமங்களில் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு மதிப்பெண் எடுக்க பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

திருச்சி, மே 23 திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் 22.5.2017 அன்று  10.15 மணிக்கு  நடந்து முடிந்த 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், மாணவர்களை கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் நூற் றுக்கு நூறு மதிப்பெண்கள் மற்றும் கணக்குப் பதிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் பாடங்களில் 200க்கு 200 மதிப் பெண்களும் பெற பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு  பாராட்டு விழா நடந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக....... மேலும்

23 மே 2017 16:20:04

நீட் தேர்வுப் பிரச்சினை நீதிமன்றத் தீர்வு தேவையில்லை அரசியல் தீர்வுதான் அவசியம் நீதிபதி அரிபரந்தா…

நீட் தேர்வுப் பிரச்சினை  நீதிமன்றத் தீர்வு தேவையில்லை  அரசியல் தீர்வுதான் அவசியம்  நீதிபதி அரிபரந்தாமன்

சென்னை, மே 23- நீட் தேர்வுப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் வேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மற்றும் தமிழ் நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் இணைந்து “நீட் -- இந்தியா எனும் கோட் பாடுக்கே அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்த ரங்கை சென்னையில் திங்கள் கிழமை நடத்தின. கருத்தரங்கில் ஹரிபரந் தாமன் பேசியது: இந்தியா என்பது ஒன்றியமா....... மேலும்

23 மே 2017 16:00:04

செஸ் போட்டி: தமிழக வீராங்கனை வைசாலி தங்கம் வென்றார்

செஸ் போட்டி: தமிழக வீராங்கனை வைசாலி தங்கம் வென்றார்

பீஜிங், மே 22- சீன தலைநகர் பீஜிங்கில் ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சேர்ந்த வீராங்கனை வைசாலி தங்கப் பதக்கம் வென்றார். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் வைசாலி 7 சுற்றுகளில் வெற் றியும், இரண்டு சுற்றுகளை டிராவும் செய்து அசத்தினார். இறுதிச் சுற்றில் மங்கே லியாவின் உர்ட்சைக் யூரிந்த் யுயா உடன் கடுமையாகப் போராடி ஆட்டத்தை டிரா....... மேலும்

22 மே 2017 17:50:05

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கல்வித்துறை உத்தரவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசுப் பள்ளிகளில்  ஆய்வு  மேற்கொள்ள வேண்டும் கல்வித்துறை உத்தரவு

சென்னை, மே 22 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு மேற் கொள்ள வேண் டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக் குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களது மாவட்டங் களில் மாதந்தோறும் ஆய்வுசெய்ய வேண்டிய பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களின் எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எந்தப்....... மேலும்

22 மே 2017 16:27:04

மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு

மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு

  சேலம், மே 22 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 153 கன அடியில் இருந்து 840 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 19.72 அடியாகவும், நீர் இருப்பு 4.20 டி.எம்.சி.யாகவும், நீர் திறப்பு 500 கன அடியாகவும் இருக்கிறது. மேலும்

22 மே 2017 16:04:04

டாஸ்மாக்கடையை மூடக்கோரி போராட்டம்

டாஸ்மாக்கடையை மூடக்கோரி போராட்டம்

நெல்லை, மே 22 பாவூர் சத்திரம் அருகே உள்ள ஆவு டையானூரில், அரியப்புரம் செல்லும் வழியில் அரசு டாஸ் மாக்கடை அமைந்துள்ளது. இக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில நாட்களாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். கடையின் எதிரே பந்தல் அமைத்து தின மும் அங்கு சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்தும், பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத் தியும் அப்பகுதி....... மேலும்

22 மே 2017 15:16:03

தலைமை செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு ஜனநாயகத்துக்கு எதிரானது: முத்தரசன் பேட்டி

தலைமை செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு  ஜனநாயகத்துக்கு எதிரானது: முத்தரசன் பேட்டி

கோவை, மே 22 கோவை யில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் புதுப் பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா, ஜீவானந்தம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு அலுவலகம், சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய் தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு, மத்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி தமிழகத்தின் உரிமைகளை....... மேலும்

22 மே 2017 15:10:03

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,மே 22 தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து நேற்று (21.5.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளில் மனம்போன போக்கில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு கலைஞர், முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு பள்ளிகள் (கல்விக்கட்டண வசூல் முறைப்படுத்தும்) சட்டத்தை 7.12.2009 அன்று கொண்டுவந்து நிறைவேற்றினார். பெற்றோர்களின் நீண்டநாள் கோரிக் கையை ஏற்று இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற....... மேலும்

22 மே 2017 15:04:03

முதுநிலை மருத்துவப் படிப்பு: ஓரிடத்தை நிரப்ப இடைக்கால தடை

 முதுநிலை மருத்துவப் படிப்பு: ஓரிடத்தை நிரப்ப இடைக்கால தடை

சென்னை, மே 21 முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடஒதுக்கீடு பிரிவில் ஓர் இடத்தை நிரப்பாமல் ஒதுக்கி வைக்க, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர் வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன் றத்தில் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ஸ்வேதா தாக்கல் செய்த மனு: கடந்த 2015 -ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன்........ மேலும்

21 மே 2017 15:39:03

500-க்கு 486 மதிப்பெண் எடுத்த மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி

  500-க்கு 486 மதிப்பெண் எடுத்த மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி

சென்னை, மே 21 வீட்டு வேலையிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபிராமி  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரைப் போல் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவர்கள் 71 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்குச் சென்று பயிலும் வாய்ப்பை இழந்த சிறார்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பி சாதிக்க....... மேலும்

21 மே 2017 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம்:
ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை, ஜன.8 தமிழகத்துக்கு நிர்ண யிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்து விட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தமிழகத்துக்கு குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் வடகிழக்குப் பருவ மழைதான். ஆனால், இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால், சென்னைக்கு 57% அளவுக்கு குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னையில் உள்ள குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க கிருஷ்ணா நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எனவே, ஆந்திர அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி, தமிழகத்துக்கு உரிய நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்: ‘இஸ்ரோ’ விஞ்ஞானி தகவல்

விருதுநகர், ஜன.8 ‘’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அய்ந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,’’ என, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கில் தொழில் நுட்ப கண்காட்சியை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் உடல் நலம், சுகாதாரம் குறித்து உயிரியல், ‘நானோ’ அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு ‘நியூரான்’ செலுத்தி சோதனை நடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக ரீதியில் மாறி வருகின்றன.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குச்சியில், ‘சென்சார்’ கருவிகள் பொருத்தினால் துணை இல்லாமல் செல்லலாம். இந்த ‘சென்சார்’ குறைந்த விலையில் சிங்கப்பூரில் கிடைக்கிறது. ‘இஸ்ரோ விண்வெளி வாரம்‘ ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் நடக்கிறது.

அப்போது பள்ளி, கல்லூரிகளில் ராக்கெட் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்த 5 ஆண்டுகளில் இது நிறைவேறும், என்றார்.


புதர்களுக்கு மத்தியில் பழைய நோட்டுகள் ரூ.9.80 லட்சம் கண்டெடுப்பு

ரிஷிகேஷ், ஜன.8 உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையோரம் உள்ள புதர்களில் மொத்தம் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை குப்பை அள்ளுபவர் கண்டெடுத்தார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கங்கை நதிக்கரையில் பக்தர்கள் விட்டுச் செல்லும் பழைய துணிகளை அப்புறப்படுத்தும் பணியில் நேபாளத்தைச் சேர்ந்த உத்தம் தாரு என்பவர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார்.

அப்போது, புதர்களுக்கு மத்தியில் செல்லாத பழைய ரூ.500 நோட்டுகள் இருந்ததைக் கண்ட அவர், அவற்றை எடுத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.80 லட்சமாகும். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்  மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி, ஜன.8- நடப்பு நிதியாண்டில் (2016-  -2017) நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாகக் குறையும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2015-16) இது 7.6 சதவீதமாக இருந்தது.

தொழில் துறை உற்பத்தி குறைவு, சுரங்கத் துறையில் ஏற்பட்ட பின்னடைவு, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட சுணக்கம் ஆகியவை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி குறைவதற்கு முக்கியக் காரணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் விளைவுகள், பொருளாதார வளர்ச்சி விகித மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. மத்திய புள்ளியியல் அலுவலகம் தொகுத்த இந்த தகவல்களை, டில்லியில் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மதிப்பிட்டபோது கடந்த நவம்பர் மாத (ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான மாதம்) புள்ளி விவரங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. ஆனால், இதில் அந்த மாதத்தின் வங்கி டெபாசிட்டுகளையும், கடன் தகவல்களையும் சேர்க்கவில்லை. ஏனெனில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். அக்டோபர் மாதம் வரையிலான விவரங்கள் முழுமையாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

எனவே, இந்த மதிப்பீட்டில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் (2016-   -  2017) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக் கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் (2015- -   2016) 7.6 சதவீதமாக இருந்தது. மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும். இது கடந்த நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது.

வேளாண் துறை, மீன் பிடிப்புத் துறை, வனத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி 1.2 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சுரங்கத் துறையின் வளரச்சி 1.8 சதவீதம் குறையும். உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறையும். கட்டுமானத் தொழில் துறை வளர்ச்சி 3.9 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2016- -   2017-ஆம் நிதியாண்டில் தேசிய தனி நபர் சராசரி வருமானம் (தற்போதைய விலையில்) ரூ.1,03,007-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 10.4 சதவீத வளர்ச்சி யாகும். இது கடந்த நிதியாண்டில் ரூ.93,293 ஆக இருந்தது. அப்போது தேசிய தனிநபர் சராசரி வருமான வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருந்தது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner