
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்
22 மே 2013 15:32:03

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்
22 மே 2013 15:28:03

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்
22 மே 2013 15:26:03

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்
22 மே 2013 15:22:03

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில் “Expressway : Contractor demands Rs. 103.95 Crores” என்ற தலைப்பில் புகைப்படத் துடன் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions Ltd., the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project, has sought Rs. 103.95 crore from the National Highways Authority of India. The latest....... மேலும்
21 மே 2013 15:42:03

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்
21 மே 2013 15:37:03

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்
21 மே 2013 15:12:03

புதுவை, மே 21- நெய் வேலி என்எல்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்த ரம் செய்யக்கோரி பல் வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்த னர். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலா ளர் மற்றும் ஊழியர் சங் கத்தினர் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுத்த னர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வெளியா னது. அதில், என்எல்சி யில் பணியாற்றும் ஒப் பந்த தொழிலாளர்களில் சுமார்....... மேலும்
21 மே 2013 14:31:02

சென்னை, மே 21- டெல்டா பாசனத்துக் காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலி ருந்து தண்ணீர் திறந்து விடுவது கேள்விக் குறி யாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணை யத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர் நாடக காங்கிரஸ் கூறி யிருப்பது தமிழக மக் களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது. நாளொன்....... மேலும்
21 மே 2013 14:29:02

விழுப்புரம், மே 21- தமிழக சட்டப்பேரவை யிலேயே மின்வெட்டு ஏற்பட்டது தான் தமி ழகத்தில் ஆளும் அதி முக அரசின் இரண்டு ஆண்டு சாதனை என்று மு.க.ஸ்டாலின் கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்ப உதவியாளர் சதீஷ் திரு மண விழா, விழுப்புரத் தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு ஆண்டு சாதனை என்று கொண்டாடி வருகின் றனர். சட்டமன்றத்தி....... மேலும்
21 மே 2013 14:21:02

சென்னை, ஆக. 22- பொறியியல் கலந் தாய்வின் மூலம் 50 ஆயிரத்து 808 மாணவிகள் இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரை மண்ட் உத்தரியராஜ் கூறினார்.
மாணவிகளில் மிக அதிக அளவாக 18,306 பேர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் (இ.சி.இ.) படிப்பைத் தேர்ந்தெடுத் துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக 7 ஆயிரம் மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பி.இ. கலந்தாய்வு ஜூலை ஏழாம் தேதி தொடங்கியது. தொழிற்பிரிவு மாணவர் களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு, மாற்றுத் திறனாளிக்கான கலந்தாய்வு ஆகியவற்றைத் தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
பொதுப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் தொழிற் பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21) பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 1,500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 681 மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு களில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் 74,873 பேர் மாணவர்கள், 50,808 பேர் மாணவிகள். மொத்த காலியிடங்கள் 56,778 ஆகும். கடந்த ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரம் இடங்கள் கலந்தாய்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 166 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளன.
புகார்கள் இல்லை
ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாக, எந்தவிதப் புகார்களுக்கும் ஆளாகாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் 2 இயக்குநர்கள், 2 துணை இயக்குநர்கள், 50 பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்தாய்வுப் பணி யில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 637 இடங்கள் காலியாக உள்ளன. திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப் பட்ட உறுப்புக் கல்லூரிகளில் மட்டுமே காலியிடங்கள் உள்ளன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 56,140 இடங்கள் காலியாக உள்ளன. செவ்வாய்க் கிழமை நடைபெற உள்ள கலந்தாய்வில் மேலும் 500 இடங்கள் வரை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றைச் சாளர கலந்தாய் வுக்கு ஒதுக்கப்பட்டு, கலந் தாய்வின் இறுதியில் நிரம் பாத இடங்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நிரப்பிக் கொள்ளலாம்.
இதற்காக அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப் படும் என்று பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரி வித்தன.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்ந்த மாணவர் களில் 79,955 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை (ரூ.20 ஆயிரம்) கல்லூரிகளுக்கு அரசு திருப்பி வழங்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 11 ஆயிரம் பேர் கூடுத லாக இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த பொறியியல் கலந்தாய்வில் 20 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
சுமார் 180 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. பல கல்லூரிகளில் எஸ்.டி. பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் 100 சதவீதத்தை அடைய முடியவில்லை. சுமார் 40 கல்லூரிகளில் 20 சத வீதத்துக் கும் குறைவான மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ளது இவ்விவரங்கள் பல்கலைக் கழக இணைய தளத்தின் மூலம் தெரிய வருகிறது.