Banner
முன்பு அடுத்து Page:

92 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

92 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

சென்னை, மே 24-  கேன் குடிநீர் தயாரிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 309 நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில் கேன் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என்ற புகாரின் பேரில், அனைத்து கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி மூன்று மாவட்டங்களில் 92 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர்....... மேலும்

24 மே 2013 16:46:04

108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

108  அவசர ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

சென்னை, மே 24-  உயர் சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப் பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மருத்துவர்களின் பரிந் துரையின் பேரில் கொண்டு செல்வது கடந்த ஆறு மாதத்தில் 4 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 108 அவசர ஆம்புலன்ஸ் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னையில் முதல் முதலாக 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் ஆரம்பிக்கப்பட் டது. தற்போது 630....... மேலும்

24 மே 2013 16:38:04

நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்தபோது என்னை உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் அவர்கள்

நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்தபோது என்னை உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் அவர்கள்

எல்.ஜி.நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 24- 1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி காலத்தில் என்னை மிசாவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, சிறையில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப் படுத்தியவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய  நுநடயஅ கூயஅடைள றடைட....... மேலும்

24 மே 2013 16:34:04

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலைய…

மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் நாட்டிலே அன்றைக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள்

இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை தஞ்சை, மே 23- 1975ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார்கள் என இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய  ‘Eelam....... மேலும்

23 மே 2013 16:24:04

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால் 4 ஏக்கர் வனம் நாசம்

யானைகளை விரட்ட வைக்கப்பட்ட தீயால்  4 ஏக்கர் வனம் நாசம்

கோவை, மே 23-கோவை மாங்கரை, சோமையம்பாளையம், சோமையனூர், காளையனூர், தடாகம் ரோடு பகுதியில் 22 யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூன்று குழுவாக திரியும் இந்த யானைகள், வீடுகளை இடித்து, கதவை உடைத்து அரிசி சாப்பிடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் ரோட்டில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். செங்கல் சூளை வளாகத்திற்குள் யானைகள் புகுவதால் செங்கல் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகம் ரோடு அனுவாவி....... மேலும்

23 மே 2013 15:00:03

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

தமிழ்நாடு பட்ஜெட் தொடர் பற்றி கலைஞர்

கேள்வி: பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி ஏடு களில் வந்த செய்தியைப் படித்தீர்களா? கலைஞர்: படித்தேன்; குறிப்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையையே படித்தேன். தலைப்பே, வாழ்த்துரை களை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்று வெளியிட் டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த பகுதி வருமாறு:- நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர், ஆறு மாதங் களுக்கு சஸ்பென்ட் செய் யப்பட்டனர். தி.மு.க........ மேலும்

23 மே 2013 14:51:02

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் தஞ்சை, மே 22- கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுடன் சமுதாயத்திற்காக, இனத்திற்காக, மொழிக்காக, தொடர்ந்து பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் என தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின்  புகழாரம் சூட்டினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய ‘Eelam Tamils....... மேலும்

22 மே 2013 15:32:03

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

கடலோர காவல் படையில் புதிதாக ரோந்து கப்பல் வைபவ் இணைப்பு

தூத்துக்குடி, மே 22-இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிநவீன பாது காப்பு வசதிகளுடன் கூடிய வைபவ் என்ற புதிய கப்பல் நேற்று இணைக்கப் பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்தது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப் படி இணைத்து வைத்தார். இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக்....... மேலும்

22 மே 2013 15:28:03

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

குன்னூர், மே 22-நீலகிரி மாவட்டம், குன்னூரில் மத்திய சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் பாஸ்டியர் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு, வெறிநாய் கடி தடுப்பு மருந்து மற்றும் ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான் ஆகிய முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. இங்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை முத்தடுப்பு மருந்துகள் 2.51 லட்சம் டோசஸ் நாடு முழுவதும் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இதில் வெறிநாய்க் கடி, தடுப்பு....... மேலும்

22 மே 2013 15:26:03

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே 22-ஆனை மலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு ஜனவரி....... மேலும்

22 மே 2013 15:22:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.22-  தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி உருவானது. நீண்ட.. நெடிய.. வரலாற்றை கொண்ட சென்னை மாநகரம் இன்று (புதன்கிழமை) தனது 373ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது. அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் வந்து சென்னை கடற்கரையில் இறங்கியுள் ளனர். சிறிய கிராமமாக இருந்த அந்தப் பகுதி `சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது. 1639ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி யின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், அந்தப் பகுதியை ஆங்கிலேயர் களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்தனர். அதன்பிறகு, ஓராண்டு கழித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதனால், சென்னப்பட்டினத்தை சுற்றி பரவலாக இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்களும் ஒன்றிணைந்தன. 1688ஆம் ஆண்டு சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை என்ற புகழ் சென்னைக்கு கிடைத்தது. 1746ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். அதன்பிறகு, 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின்னர்தான், சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சியடைய தொடங்கியது.

இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட் டன. சென்னப்பட்டினம் என்ற பெயரில் கிராமமாக இருந்த ஆரம்பகால சென்னை, அதன்பிறகு மதராஸ் பட்டினம், மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தாண்டியே சென்னை என அழைக்கப்பட்டது.   1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது. 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகர மானது. அதன்பின்னர், 1996ஆம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் `காஸ்மோபாலிடன்' நகரமாக சென்னை விளங்கிவருகிறது.

தொழில் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இங்குதான் உள்ளன. கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உள்பட பல்வேறு துறைகளிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.   சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரெயில் மற்றும் விமான சேவையும், வெளிநாடுகளுக்கு விமான சேவையும், அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்தும் இருந்து வருகிறது.

அன்றைய கால கட்டடக்கலைக்கு சான்றுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழக கட்டடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவை இருக்கின்றன. `வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்ற சொல்லுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள நகராக சென்னை உருவெடுத்துள்ளது. நிறைவேறிக் கொண்டிருக்கும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் சென்னையை மேலும் வளர்ச்சியுடையதாக்கும்.

இருந்தாலும், அன்றைய காலத்தில், சென்னையில் தெளிந்த நீராக ஓடிய கூவம், அடையாறு போன்றவை, இன்று மக்கள் நெருக்கத் தால் சாக்கடை செல்லும் கால்வாயாக மாறிவிட்டன. சென்னையின் 373ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது, கூவம், அடையாறு போன்றவற்றை சுத்தப்படுத்துவதற்கான முயற்சியில் அரசும், சமூக ஆர்வலர்களும் ஈடுபட வேண்டும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், சென்னை வரலாறு என்றும் மணக்கும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்