முன்பு அடுத்து Page:

மக்கள் தொடர்புப் பணிகளுக்காக தேசிய விருதுகள்

சென்னை, பிப்.22 தென்னிந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான - சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இரண்டு அகில இந்திய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா  எனப்படும் மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கான தேசியக் கவுன்சில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்குகிறது. அதில், இந்த ஆண்டு ஊடகங்களுடனான தொடர்பை பயன் படுத்தும் பாங்கு....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:51:04

தொழில்முனைவோருக்கு ஆராய்ச்சி தொழில்நுட்ப உதவி: சென்னை அய்அய்டி ஏற்பாடு

சென்னை, பிப்.22 இளம் தொழில்முனை வோருக்கும், புதிய நிறுவனங்களுக்கும் உதவும் வகையிலும், ஆராய்ச்சி தொழில்நுட்ப ஆலோசனை களை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னை அய்அய்டி அறிமுகம் செய்துள்ளது. சென்னை அய்அய்டி-யின் ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஏ.தில்லைராஜனின் யோனோஸ் என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. இதுகுறித்து சென்னை அய்அய்டி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:- டெல்ஃபி எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், சென்னை அய்அய்டி-யை....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:49:04

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி

சென்னை, பிப்.22  பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில்  நடை பெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:- தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் மென்திறன் மேம் பாடு, ஆங்கில மொழி பேச்சுத் திறன் வளர்த்தல், வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத் துதல்,....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:47:04

டேராப்பாறை அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு

மதுரை, பிப்.22  டேராப்பாறை அணை திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஞானசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் பருவ காலம் தவிர பிற நேரங்களில் விவசாயம் செய்ய முடியாது. இந்த பகுதியின் தன்மையை அறிந்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., மலைப் பகுதியிலிருந்து வரும் நீரைத் தேக்கி, பாசன வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் டேராப்பாறை....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:44:03

துறைமுக ஓய்வூதியதாரர்கள் குறைகளைப் பதிவு செய்ய இணையவழி சேவை அறிமுகம்

சென்னை, பிப்.22 சென்னைத் துறைமுக ஓய்வூதி யதாரர்களின் குறைகளைப் போக்க இணைய வழி (போர்டல்) சேவை வசதியை துறை முக நிர்வாகம் வியாழக்கிழமை  அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  நாட்டின் 12 பெருந்துறை முகங்களில் ஒன்றான சென் னைத் துறைமுகத்தில் தற் போது 15, 310 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு  ஓய்வூ தியமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.324 கோடி பட்டுவாடா செய்யப்படுகிறது........ மேலும்

22 பிப்ரவரி 2019 15:38:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்

சென்னை, பிப்.22  சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 23,24) ஆகிய இரண்டு நாள்கள் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வா கம் வெளியிட்ட  செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தலை யொட்டி,  இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது........ மேலும்

22 பிப்ரவரி 2019 15:38:03

தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்கிறார் தளபதி மு.க. ஸ்டாலின்

சென்னை, பிப்.22  மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்புமாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் கூறியிருப்பது: தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.  உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம். உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திமுகவின் மக்களவைத்  தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு,  எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.  அதல பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டி....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:31:03

அனைத்து மீனவர்களுக்கும் ஏன் தகவல் பரிமாற்ற கருவிகளை வழங்கக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, பிப்.22  தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தகவல் பரிமாற்ற கருவிகளை ஏன் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க கடந்த 1984 ஆம் ஆண்டில் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய மனித....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:31:03

பா.ஜ.க.வுடன் தொகுதிப் பங்கீடு வைத்துள்ள முதல்வர் ஆளுநரைச் சந்தித்து 7 பேரின் விடுதலையை வலியுறுத்த வே…

பா.ஜ.க.வுடன் தொகுதிப் பங்கீடு வைத்துள்ள முதல்வர் ஆளுநரைச் சந்தித்து 7 பேரின் விடுதலையை வலியுறுத்த வேண்டும்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை, பிப்.22-   பா.ஜ.க.வுடன்  தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதலமைச்சர்  எடப்பாடி  பழனிசாமி, தமிழக  ஆளுநரைச்  சந்தித்து  ஏழு தமிழர் களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என, நேற்று விடுத்த அறிக்கையில் திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தி யுள்ளார். அவரது அறிக்கை  வருமாறு:- முன்னாள்  பிரதமர்  ராஜீவ்  காந்தி கொலை  ....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:17:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, பிப்.12 பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 15 ஆம் ஆண்டு மழலையர் பட்ட மளிப்பு விழா 9.2.2-019 அன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாக என்.எஸ்.கே. கலை வாணர் அரங்கில் நடை பெற்றது.

இவ்விழாவிற்கு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் எஸ்.வேலுச்சாமி தலைமையில்  பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதா முன்னிலையில், பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையா சிரியர் சிறீதர், பெரியார் தொடக் கப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி, துணை முதல் வர்கள் கலந்து கொண்டனர். மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மழலையர் பிரிவு யு.கே.ஜி மாணவிகள் ரஹிமா அஸ்மா, நிவேதிகா ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வேலுச்சாமி உறுதி மொழி கூற மழலையர்களும் முன்மொழிந் தனர். பின்னர் மழலையர் களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசும் போது இன் றைக்கு பட்டம் பெற்ற பிஞ்சு கள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். எனவே சிறந்த முறையில் கல்வி கற்று சமுதா யத்திற்கு பணியாற்ற வேண் டும். நான் பழைய கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு  உள்ளேன். ஆனால் அவை எல்லாம் கிடைக்காத மகிழ்ச்சி இந்த மழலையர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் புதுமையாகவும் பார்க்கிறேன். வளர்ந்து வரக் கூடிய தொழில்நுட்ப உலகத் தில் நிறைய தொழில் நுட் பங்கள் மாறி விட்டன. அதற் கேற்றாற் போல மாணவர்கள் நீங்கள் இப்போதே தயாராக வேண்டும். அதற்கான உந்து தல்தான் இந்த  நிகழ்ச்சி நல்ல சமுதாயத்தை உருவாக்கிய தந்தை பெரியார் பள்ளியில் படிப்பது உங்களுக்கெல்லாம் பெருமையாகும். மாணவர் களாகிய நீங்கள் ஒவ்வொரு வரும் கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். உழைத்து சாப்பிட வேண்டும், உணவை வீணாக்கக் கூடாது என்று மழலையர்களுக்கு நற் சிந்தனை கூறினார்.

இதைத் தொடர்ந்து யு.கே.ஜி. மாணவர்கள் ஆத்திச்சூடி, திருக்குறள், இந்திய மாநி லங்களின் பெயர்கள், 1 முதல் 100 வரையிலான எண்களை தலைகீழாக சொல்லுதல், யூனி யன் பிரதேசங்களின் பெயர்கள், புவிபாதுகாப்பு, விவசாயி மேன்மை, துரித உணவை தவிர்த்தல், போனிக்ஸ் ஆங்கி உச்சரிப்பு முறைகள், இலக்கண விதிகள், தமிழ் எழுத்துக்கள், இந்திய, தமிழக ஆட்சியா ளர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை தங்களது மழலை மொழியில் கூறி தங்களது திற மைகளை வெளிப்படுத்தியும், நன்றிப்பாடல் பாடியும், பெற் றோர்களை வியப்பில் ஆழ்த் தினர்.

விழாவினை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் சி.சந்தியா, பி.பூஜா, எஸ்.ரோகித், வெங்கடேஷ், பி.எப்.முகமது அப்ரருல் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக யு.கே.ஜி. மாணவிகள் நிளனாசிறீ, சுகால்யா காஜல்  ஆகி யோர் நன்றி கூறினர். இதில் ஆசிரியர், ஆசிரியைகள், அலு வலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner