முன்பு அடுத்து Page:

பொய்ச் செய்தி பரப்பினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை: தி.மு.க. எச்சரிக்கை

சென்னை, ஏப். 24 பொய்ச் செய்தியினை பரப்பினால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எச்சரித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான  ஆர்.எஸ்.பாரதி  வெளியிட்ட அறிக்கை: திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைவரோ அல்லது தலைமைக் கழகமோ எவ்வித அறிவிப்பும்-ஆர்ப்பாட்டமும்-போராட்டமும்  அறிவிக் காத நிலையில்,  திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் - அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சமூகவலை தளங்களில் ஒன்றான (வாட்ஸ்அப்-பில்)  பகிரியில் தன்னிச்சையாக....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:45:03

மீனவர்கள் படகுகளில் தகவல் பரிமாற்ற கருவிகளை பொருத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உயர்…

மீனவர்கள் படகுகளில் தகவல் பரிமாற்ற கருவிகளை  பொருத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.24  தமிழக மீனவர் களின் படகுகளில் தகவல் பரிமாற்ற கருவிகளைப் பொருத்துவதற்கான நிதியை இரண்டு மாத காலத்துக்குள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில்,  மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க கடந்த 1984 -ஆம் ஆண்டில் போடப் பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. இலங்கை....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:32:03

பிளஸ் 1: மே 8-இல் தேர்வு முடிவுகள்

பிளஸ் 1: மே 8-இல் தேர்வு முடிவுகள்

சென்னை, ஏப்.24 பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தில்  பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2  ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கின. இதில், பிளஸ்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:32:03

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் ரயில் இயக்கம்

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் ரயில் இயக்கம்

சென்னை, ஏப்.24  சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதை யான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க் குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என  தெற்கு....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:09:03

மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு விசாரணை அறிக்கை …

சென்னை, ஏப்.24  மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்துக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மய்யத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அதிகாரி நுழைந்தது தொடர்பாக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:08:03

‘29ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

‘29ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புயல்’  வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை, ஏப்.24, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக் கினார் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் புவியரசன். புவியரசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘வரும் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்........ மேலும்

24 ஏப்ரல் 2019 15:04:03

அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது நடவடிக்கை: கல்வித்துறை முடிவு

   அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது  நடவடிக்கை: கல்வித்துறை முடிவு

சென்னை, ஏப்.24  தமிழகத்தில் அங்கீகார மில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண் டும் என  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.    அதன்படி,  வட்டாரக் கல்வி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:04:03

தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.23 தமிழகத் தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிய மித்த அரசாணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த யோகானந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இதற்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:43:04

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்:  தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

நாமக்கல், ஏப்.23, தேர்தலில் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பி யுள்ளனர். முதுகலைப் பட்டதாரி ஆசிரி யர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், தேர்தல் மற்றும் பயிற்சி பணிக்கான உழைப்பூதியம் குறைத்து வழங்கப்பட்டது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 7, 13, 17 ஆகிய....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:21:04

ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

 ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஏப்.23 அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி  தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.   இந்த கல்வியாண்டு (2019- - 2020)  தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு  நடத் தப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையம் மூலம் கலந்தாய்வு நடத்தப்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:08:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

சென்னை, பிப்.11 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற் பனை செய்யப்படாமல் நீண்டகாலமாக காத்திருப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களை விரைந்து விற்பனை செய்ய புதிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்க உள்ளது.

தனியார் கட்டுமான நிறுவனங்களைப் போன்று, இக் குடியிருப்புத் திட்டங்களையும் விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதாவது, வீடுகளை வாங்க நினைக்கும் தனி நபர்களை நேரடியாக வாரியக் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த மான வீடுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கவே வீட்டு வசதி வாரியம் தொடங் கப்பட்டது.

நாளடைவில் இது வருவாய் குறைந்த பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினர் என மூன்று வகைகளாகப் பிரித்து அவர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களை வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது.

இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.20 லட்சம் வரையிலும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ரூ.35 லட்சம் வரையிலும், உயர் வருவாய் பிரிவினருக்கு ரூ.35 லட்சத் துக்கு மேல் ரூ.1 கோடிக்கும் அதிகமான வீட்டு வசதி வாரிய குடியிருப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள குடியிருப்பு களை வாங்க ஆர்வமுடை யோரை நேரில் அழைத்துச் சென்று அவர்களுக்குக் காட்டி விருப்பம் இருந்தால் உடன டியாக அதனை பதிவு செய்ய தமிழக அரசு முடிவு செய் துள்ளது.

இதற்கான வீட்டு வசதிக் கடன்களை அளிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கி களுடன் இணைந்து செயல் பட்டு வருவதாக சென்னையைச் சேர்ந்த வீட்டு வசதி வாரிய உயரதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

 

 

அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விற்க புதிய திட்டம்

 

சென்னை, பிப்.11 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற் பனை செய்யப்படாமல் நீண்டகாலமாக காத்திருப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களை விரைந்து விற்பனை செய்ய புதிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்க உள்ளது. தனியார் கட்டுமான நிறு வனங்களைப் போன்று, இக் குடியிருப்புத் திட்டங்களையும் விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, வீடுகளை வாங்க நினைக்கும் தனி நபர்களை நேரடியாக வாரியக் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த மான வீடுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கவே வீட்டு வசதி வாரியம் தொடங் கப்பட்டது. நாளடைவில் இது வருவாய் குறைந்த பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினர் என மூன்று வகைகளாகப் பிரித்து அவர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களை வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.20 லட்சம் வரையிலும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ரூ.35 லட்சம் வரையிலும், உயர் வருவாய் பிரிவினருக்கு ரூ.35 லட்சத் துக்கு மேல் ரூ.1 கோடிக்கும் அதிகமான வீட்டு வசதி வாரிய குடியிருப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன. வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள குடியிருப்பு களை வாங்க ஆர்வமுடை யோரை நேரில் அழைத்துச் சென்று அவர்களுக்குக் காட்டி விருப்பம் இருந்தால் உடன டியாக அதனை பதிவு செய்ய தமிழக அரசு முடிவு செய் துள்ளது. இதற்கான வீட்டு வசதிக் கடன்களை அளிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கி களுடன் இணைந்து செயல் பட்டு வருவதாக சென்னையைச் சேர்ந்த வீட்டு வசதி வாரிய உயரதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner