முன்பு அடுத்து Page:

தமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.23 தமிழகத் தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிய மித்த அரசாணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த யோகானந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இதற்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:43:04

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

தேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்:  தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு

நாமக்கல், ஏப்.23, தேர்தலில் பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவ லர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பி யுள்ளனர். முதுகலைப் பட்டதாரி ஆசிரி யர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், தேர்தல் மற்றும் பயிற்சி பணிக்கான உழைப்பூதியம் குறைத்து வழங்கப்பட்டது குறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 7, 13, 17 ஆகிய....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:21:04

ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

 ஜூன் 20-இல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஏப்.23 அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி  தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.   இந்த கல்வியாண்டு (2019- - 2020)  தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு  நடத் தப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையம் மூலம் கலந்தாய்வு நடத்தப்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:08:04

தரமான பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அறிமுகம்

தரமான பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அறிமுகம்

சென்னை  சில்க்ஸ் நிறுவனத்தின் பென்னி ஹில்ஸ் பிராண்ட் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடவர்களுக்கான உள்ளாடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில்  சென்னையில் உள்ள முன்னணி டீலர்கள் கே.விநாயகம், கே.மாணிக்கம், நந்தகோபால், வினீத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தயாரிப்புகள் அனைத்தும் தரமான பிசிஅய் பருத்தியால் தயாரிக்கப்பட்டது என்று நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.   மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

மல்ட்டி மீடியா உதவியுடன் பள்ளிக் கல்வித் திட்டம்

மல்ட்டி மீடியா உதவியுடன் பள்ளிக் கல்வித் திட்டம்

தருமபுரி, ஏப்.23  சிஎன்எச் இன்டஸ்டிரியல் சமுகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்நிறுவனத்தின் ஒரு பிராண்டான நியூ ஹாலண்ட் அக்ரிகல்ச்சர் அரசு உயாநிலைப் பள்ளி, இலக்கியம் பட்டி என்னும் பள்ளியில் நியூஹாலண்ட் டிஜிட்டல் கிளாஸ் ரூம் என்னும் மல்ட்டி மீடியா உதவியுடன் கூடிய பள்ளிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு தருமபுரி மார்வெல் எண்டர் பிரைசஸ் லைன் என்ற முகவர் ஆதரவு கொடுக்கிறார்........ மேலும்

23 ஏப்ரல் 2019 15:20:03

40 ஆயிரம் பேரின் பெயர் நீக்கப்பட்டதால் குமரி தொகுதி வாக்குகளை எண்ணக்கூடாது

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீனவர்கள் மனு நாகர்கோவில், ஏப்.23 கன்னியா குமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண் டும் வாக்களிக்க வசதியாக, அடுத்த மாதம் நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மீனவ அமைப்புகள்  கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் மக்களவை தேர்த லுக்கான வாக்குப்பதிவு 18ஆம் தேதி நடைபெற்றது. இதற் கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:20:03

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு  யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை, ஏப்.23  நூற் றாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங் களுக்கு உலக புராதன சின்ன மாக யுனெஸ்கோவின் அங்கீ காரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ரயில்வே ஊழியர்கள், பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ரயில்வே 166 ஆண் டுகள் பழமை வாய்ந்தது. சிலிகுரி - டார்ஜிலிங் ரயில் பாதையை 1999-ஆம் ஆண்டும், மும்பை சத்ரபதி ரயில் நிலை யத்தை 2004-ஆம்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:07:03

பொன்பரப்பி சம்பவம்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க உத்தரவு

தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி சென்னை, ஏப்.23  சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்டத் தேர் தல் அதிகாரி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில்   திங்கள்கிழமை  அவர்அளித்த பேட்டி: சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்  தொடர்ந்து அமலில்  இருக்கும். 13 துணை ராணுவப் படை: இடைத்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:05:03

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்

   பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு  நடத்த வேண்டும்  திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.23  பொன்பரப்பி யில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்  என்று விடுதலைச் சிறுத் தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து,  சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை திருமாவளவன் திங்கள்கிழமை சந்தித்து அளித்துள்ள புகார் மனுவில், சிதம்பரம் மக்கள வைத் தொகுதியில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் அமைத்திருந்த வாக் குச்சாவடி எண் 281 மற்றும்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:01:03

10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு

சென்னை, ஏப்.23  தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்: பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது.  இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட....... மேலும்

23 ஏப்ரல் 2019 14:54:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொதிக்கிறது மாற்றுத் திறனாளிகளின் டிசம்பர் 3 இயக்கம்

சென்னை, பிப்.11 மத்திய  அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இது நம்மை கடைசி மட்டும் கையேந்து! என்பதை உண்மையாக்க எடுக்கப்பட் டுள்ள முன் னெடுப்பு!

இதில் அரசியல் மிளிர்கிறது!

572 கோடியில் நமது உரி மைகள் உண்மையாக்க எடுக் கப்படும் முன்னெடுப்புகள் எத்தனை?

மொத்த ஒதுக்கீட்டில் தன் னார்வ தொண்டு நிறுவனங் களுக்குத்தான் 75% நிதி செல் கிறது!

மீதி தரமில்லாத உபகர ணங்களை கொடுப்பதற்கு பயன்படுகிறது!

முழுக்க முழுக்க "உடை யார்முன் இல்லார் போல் நம்மை நிற்க வைக்கின்ற, உரிமைசார் பார்வையை" ஏற்க மறுக்கும் அரசு இயந்திரத்தின் எச்சமேயன்றி வேறொன்றும் இல்லை!

உதாரணத்திற்கு..... உள்ள டக்கிய கல்வியை (வீஸீநீறீவீஸ்மீ மீபீநீணீவீஷீஸீ) மேம்படுத்த, மாற்றுத் திறனாளிகள் சட்டம், கட்டமைப்பு ஆரம்பித்து பல கடமைகளை அரசுக்கு சொல் கிறது. இதற்கான நிதி? மாற்றுத் திறனுடையோருக் கான குறைந்தபட்ச தடையற்ற சூழல் ஏற்படுத்த அம்மை யாரின் (ஜெயலலிதா) அரசு, அரசாணை எண் 21 நகராட்சி நிர்வாகத்துறை கொண்டுவந்த விதிகளுக்கு ஒற்றைப் பைசா ஒதுக்கீடு? குறைந்தபட்சம் ஒரு சைகை மொழிபெயர்பா ளர்களை நியமனம் செய்திருக் கிறார்களா? அதற்கு பயிற்சி அளிக்க ஒரு பயிற்று நிறுவனம்?

நீதிமன்றங்கள் எத்தனை எங்களுக்கு ஏதுவாக?

எத்தனைப் பூங்காக்கள் எங்களுக்கு ஏதுவாக? இரண்டு பூங்கா இருக்கே என்பவர் களே, எடுத்துக்காட்டுக்கு ஒன்றை காட்டிவிட்டால் போதுமா? சுமார்ட் சிட்டி என்பதற்காக உருவானது அது!

21 வகை ஊனமுற்றோர் இருக்கிறார்கள், அதில் பத் துக்கு மேற்பட்ட வகையினருக்கு குறைந்தபட்சம்   அடையாள அட்டையாவது உண்டா?

யுடிஅய்டி (ஹிஞிமிஞி) அட் டையை எங்கள் செலவில் தரமுயற்சி செய்யும் அரசு, அதை ஏன் துறைகளே தரக் கூடாது? செலவாகுமே அதானே?

அய்.நா மாற்றுத் திறனா ளிகள் உரிமை உடன்படிக் கையில் கையெழுத்திட்டு பின்பு அதற்காக என்று சம ரசம் செய்யப்பட்ட சட்டத்தின் குறைந்தபட்சமாவது நடை முறைக்கு வருவதற்கு மாநில விதிகளைக்கூட உருப்படியாக உருவாக்காத இந்த அரசு, 3000 வண்டிகள் தருகிறேன் என்று சொல்வது கமிஷனுக்காகவே!

இதை கண்டு டிசம்பர் 3 இயக்கம் ஏமாறாது ....கேள் விகள் கண்டிப்பாய் கேட் போம் என்று பேராசிரியர் தீபக் (டிசம்பர் 3 இயக்கம்) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner