முன்பு அடுத்து Page:

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும்  பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.17  கல்வி யாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனு மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென் னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடு நிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந் தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின்....... மேலும்

17 ஜனவரி 2019 15:46:03

மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்ல வசதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது…

சென்னை, ஜன.17 மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் ஒருவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். இதுவரை தேர்வை நடத்தும் பல் கலைக்கழகம்....... மேலும்

17 ஜனவரி 2019 15:44:03

ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக கால வரையற்ற வேலைநிறுத்தம்

ராமேசுவரம், ஜன.17  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 4 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 46 விசைப்படகுகளை மீட்க அதிகாரிகள் குழு புதன்கிழமை இலங்கை சென்றது. ராமேவரத்தில் இருந்து கடந்த சனிக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக் கப்பட்டனர். இதனைக் கண்டித்தும் உடனே படகுகள் மற்றும்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ரோபோவை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். இடம்: வேப்பேரி. மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

காசநோய் பாதிப்பு 6-ஆம் இடத்தில் தமிழகம்

சென்னை, ஜன.17  கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

நன்னடத்தை விதிகளை மீறிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது கல்வித்துறை

சென்னை, ஜன.17  அரசுப் பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப விண்ணப் பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியராக இருந்தால், 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மூலம்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

உயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை  ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.17 உயர்நீதி மன்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் என அரசு அதிகாரிகளுக்கு தலை மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற் கெனவே வழங்கப்பட்ட மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், மீண்டும் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்கள்: டிஜிபி உத்தரவு

சென்னை, ஜன.17 தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கட் செவி அஞ்சல் (வாட்ஸ்- அப்) குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையங்களுக்கு அவர் புதன் கிழமை அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்களின் அட்மின் ஆக அந்தந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம். அதில் காவல்....... மேலும்

17 ஜனவரி 2019 14:39:02

உயிர் காக்கும் விழிப்புணவு பிரச்சாரம்

சேலம், ஜன.14  சேலத்தில் இருக்கும் மணிபால் மருத்துவமனை பத்மவாணி கல்லூரியில் உங்களால் உயிரை எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றலாம் என்ற உலக ஆம்புலன்ஸ் தினத்தை குறிப்பதற்கான பிரச்சாரத்தை நடத்தியது. கல்லூரி விரிவுரையாளரகள் மற்றும் மாணவர்களுக்கு எப்படி உயிரை பாதுகாப்பது என்கிற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் இது நடத்தப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட காரடியோபல்மொனரி ரெசிடேஷன் (இதய சுவாசம்) மற்றும் ஆட்டோமேடட் எக்ஸ்டரனல் டிஃபிப்ரிலேட்டர் என்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து....... மேலும்

14 ஜனவரி 2019 17:43:05

2,381 அங்கன்வாடி மய்யங்களில் மழலையர் வகுப்பு

சென்னை, ஜன.14 தமிழகத் தில் 2,381 அங்கன்வாடி மய்யங் களில் மழலையர் வகுப்புத் தொடங்கப்படவுள்ளது. இந் தத் திட்டத்தை வரும் 21-ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட் டத் துறை அமைச்சர் வெ. சரோஜா. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் 12.1.2019 அன்று நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில்....... மேலும்

14 ஜனவரி 2019 16:42:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜன.10   உரிய கல்வி தகுதியில்லாதோர் ரத்த வங்கி களில் பணியாற்றுவதாக தொட ரப்பட்ட வழக்கில், சுகாதாரத் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட் டுள்ளது. மதுரை, அண்ணா நகரை சேர்ந்த வழக்குரைஞர் முத்துக் குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ரத்தம் ஏற்றி யதால் எச்அய்வி பாதித்தவர் களுக்கு முறையான சிகிச்சை, மறு வாழ்வு பணிகள் வழங்கப் படுவதில்லை.

ரத்த வங்கிகளை முறையாக கண்காணிப்பதில்லை. அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் உரிய உரிமம் இன்றி யும், உரிமத்தை புதுப்பிக்காமலும் இயங்குகின்றன.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவ மனைகள் மற்றும் ரத்த வங்கி களில் உரிய கல்வித்தகுதி இல் லாத பலர் பணியில் உள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாத தாலும், தகுதியுடைய அலுவலர்கள் பணியில் இல்லாததாலும் கொடையாகப் பெற்ற ரத்தம் ஏராளமாக வீணடிக்கப்பட்டுள் ளது. நாடு முழுவதும் ஆண்டு தோறும் பல லட்சம் யூனிட் ரத்தம் வீணடிக்கப்படுகிறது. கடந்த 2014 மார்ச் முதல் 2016 வரையிலான 17 மாதத்தில் ரத்தம் மூலம் 2,234 பேர் எச்அய்வியால் பாதித்துள்ளனர்.

எனவே, அரசு மற்றும் தனி யார் ரத்த வங்கிகளை முறையாக கண்காணிக்க வல்லுநர் குழு அமைக்கவும், கொடை கொடுப் பவர், பெறுபவர் உள்ளிட்டோரின் விவரங்களை முறையாக பரா மரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

உரிய கல்வித் தகுதியில்லாத பணியாளர் களை நீக்கவும், பாதிக்கப் பட்டோருக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கவும் உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை   விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகி யோர், சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை யை ஜன.22க்கு தள்ளி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner