முன்பு அடுத்து Page:

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை

சென்னை, மார்ச் 24- தமிழகத்தின்  நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தத் தடை விதித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.நாராயணா என்பவர் உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நெரிசல் மிகுந்த ரத வீதிகளில் அண்மைக் காலமாக அரசியல் கட்சிகளின்....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

ராகுல் மீண்டும் பிரச்சாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர்

சென்னை, மார்ச் 24 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறினார். சென்னை விமான நிலை யத்தில் 23.3.2019 அன்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் திமுக தலை மையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிக ளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். திருச்சியில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவ....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு…

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, மேகதாது  அணை எதையும் நிறைவேற்ற முடியவில்லை-எதற்கு பாஜகவுடன் கூட்டணி? மு.க.ஸ்டாலின் கேள்வி

அரூர், மார்ச் 24- தமிழகத்துக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாத பாஜகவுடன் எதற்காக கூட்டணி வைக்கிறீர்கள் என்ன சாதித்தீர்கள் என தி.மு.க. தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் பேசியதாவது: மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது வெற்றி பெற்றால் தான் தமிழகம் வளர்ச்சி....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - விரைவில் முடிக்க உத்தரவு

சென்னை, மார்ச் 24  பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக் கண் ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆண்டுதோறும் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி என 3....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

ஜூன் 3 முதல் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பாடநூல் விநியோகம்

சென்னை, மார்ச் 24  பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாட நூல்கள் வழங்கப்பட வுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-&2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்

தொல்.திருமாவளவன் பேச்சு சிதம்பரம்,  மார்ச் 24  தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிறீரமேஷ் ஆகியோரின் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி வேட்பா ளரும், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியதா வது: மத்தியில்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

பொள்ளாச்சி அவலம்: மூடி மறைக்க அரசு முயலக் கூடாது தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 23    பொள்ளாச்சி அவலத்தை மூடி மறைக்கும் வேலையில் அரசு ஈடுபடக் கூடாது - குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். நேற்று (22.3.2019) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ்விவரம் வருமாறு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைபற்றி... செய்தியாளர்: பொள்ளாச்சி....... மேலும்

23 மார்ச் 2019 16:36:04

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

இன்று (மார்ச் 23) உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் இன்று சனிக்கிழமை (மார்ச் 23)  கடைப்பிடிக்கப்படுகிறது. இந் தாண்டு  சூரியன், பூமி மற்றும் வானிலை எனும்  கருப் பொருள் மய்யமாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப் படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கிய மானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத் துழைப்பும் தேவைப்படுகிறது. ஒரு  நாட்டின்....... மேலும்

23 மார்ச் 2019 15:15:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊராட்சி சபை கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர், ஜன.10  இந்த ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம்  வந்துவிட்டது என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி புலி வலம் ஊராட்சிக்குட்பட்ட வில்வனம் படுகையில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் திமுக சார்பில் நேற்று (9.1.2019) காலை ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் மக்களோடு மக்களாக அமர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, இந்த கிராமத்தில் உள்ள பிரச்னைகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொருவராக ஸ்டாலினிடம் விளக்கினர்.

இதைக்கேட்ட மு.க.ஸ்டாலின், இந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய அதிகாரி களிடம் வலியுறுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர், கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம். மக்களின் மனதை  வெல்வோம் என்ற முழக்கத்தோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். உங்களை எல்லாம்  இந்த ஊராட்சி சபை கூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம்  ஒரு முறை அல்ல, 2 முறை நீங்கள் இந்த தொகுதியில் தலைவரை தேர்ந்தெடுத்து  உள்ளீர்கள். அவர் இல்லை என்ற குறை உள்ளது. (தலைவர்  உங்கள் ரூபத்தில் இப்போதும் இருக்கிறார் என்று மக்கள் குரல் எழுப்பினர்)  என் ரூபத்தில் மட்டுமல்ல உங்கள் ரூபத்திலும் அவர் இருக்கிறார். உங்கள்  ரூபத்திலும் அவரை நான் பார்க்கிறேன்.

மத்தியில் மதவாத வெறி பிடித்த ஆட்சி

மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ. மதவாத வெறிபிடித்த ஆட்சி நடக்கிறது. அந்த  ஆட்சிக்கு எடுபிடி ஆட்சிதான் இங்கு நடக்கிறது. மோடி அரசு, விவசாய நிலத்தை  பறித்து அழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கிறார். டெல்டா புயலால்  டெல்டா மாவட்டங்கள் பாதிக் கப்பட்ட நிலையில் கலைஞர் இருந்தி ருந்தால் அடுத்த  நிமிடமே வந்து ஆறுதல் கொல்லி இருப்பார். அவர் ஹெலிகாப்டரில் வந்திருக்க  மாட்டார். அவர் மக்களோடு மக்களாக வந்து இருப்பார். ஜெயலலிதா  இருந்தபோது ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடு போட்ட எடப்பாடிக்கு லக்  அடித் திருக்கு. அவர் இப்போது ஹெலிகாப்டரில் வந்து மக்களுக்கு ஆறுதல்  சொல்கிறார். ஊராட்சி சபை கூட்டத்தை  கிராம சபை கூட்டத்தை பஞ்சாயத்து ராஜ் என்பார்கள். தமிழக அரசுக்கு இதை  மாற்றி கரப்ஷன் ராஜ் என்றும், மத்திய ஆட்சிக்கு பாசிச ராஜ், நாசிச ராஜ்  என்றும் கூறலாம். இதை மாற்ற நம்முடைய ராஜ், மக்கள் ராஜ்... அதுதான் `பஞ்சாயத்து  ராஜ் என உரு வாக்குவோம். தி.மு.க. சார்பில் ஏற்கெனவே நமக்கு நாமே  திட்டத்தில் 234 தொகுதிகளுக்கும் சென்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து  பேசி உள்ளேன். ஆட்சிக்கு வருவோம் என்றிருந்த நிலையில் ஆட்சிக்கு வரும்  வாய்ப்பை 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோற்று தி.மு.க. எதிர்க்கட்சியாகி உள்ளது.  ஆனாலும் மக்களிடம் நாம்தான் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். எங்கே என்ன  பிரச்னை நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பது தி.மு.க.தான். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சியை மாற்றும் தருணம்

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட் டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆலமரத்தடியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, இந்த ஆட்சிக்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டுமென மக்கள் விரும் புகின்றனர். இந்த ஆட்சியை விரட்டுங்கள் என்று ரயில், விமானத்தில் செல்லும் போ தெல் லாம் பலதரப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர். இந்த ஆட்சியை மாற்ற வேண் டிய தருணம் வந்துவிட்டது என்று கூறினார்.

அஞ்சுகம் அம்மையார்

பின்னர், காட்டூரில் உள்ள கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினை விடத்துக்கு ஸ்டாலின் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள கலைஞர் மற்றும் முரசொலி மாறன் படங்களுக்கும் மாலை அணி வித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner