முன்பு அடுத்து Page:

காவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

சென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:25:04

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? மத்திய தொல்லியல் து…

மதுரை, பிப்.16 ஆதிச்சநல்லூர் அகழ் வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என  மத்திய தொல்லியல் துறைக்கு கண் டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூ ரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல் லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத் துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்,  தூத்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:12:04

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மதுரையில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வெள்ளி விழா மற்றும் 11ஆவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழர்தலைவருக்கு இச்சங்கத்தின் நிர்வாகிகள்  பயனாடை அணிவித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். நிர்வாகிகள்: கோ. கருணாநிதி & தலைவர், டி. ரவிக்குமார் -& அகில இந்திய பொதுச் செயலாளர், எஸ். நடராசன் & பொதுச் செயலாளர், ஆலோசகர்கள்: எஸ். சேகரன், ஜி.மலர்க்கொடி, கே. சந்திரன் ஆகியோர் உள்ளனர்........ மேலும்

16 பிப்ரவரி 2019 16:05:04

போக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி

சென்னை, பிப்.16 தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது.  அதன்படி பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற செல்லிடப்பேசியை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.   மேலும்

16 பிப்ரவரி 2019 16:04:04

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

சென்னை, பிப்.16 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:03:04

பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலி…

சென்னை, பிப்.16 மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் உருவாக பத்தாம் வகுப்புவரை தாய்மொழி யில் அறிவியல் பாடங்களைப் படிப்பது அவசியம் என, அண் ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 20 - 22 தேதிகளில் நடத்த உள்ளன. இதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத் தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:01:04

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் தகவல்

சென்னை, பிப்.16 மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ள தாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத் தில் உள்ள தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:59:03

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

சென்னை, பிப்.16 பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக இமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:57:03

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட…

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பள்ளப்பட்டி, பிப்.16 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக் கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி இந்த....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:46:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, பிப்.16 நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வரு வதையொட்டி விடுபட்டவர் களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ கத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:21:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.6  நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்பு களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத் தால் 1955ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழி களில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது டில்லியில் உள்ள சாகித்ய அகாடமி நிறுவனத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. 7 கவிதை புத்தகங்கள், 6 நாவல்கள், 6 சிறுகதை புத்தகங்கள், 3 விமர்சனங்கள் மற்றும் 2 கட்டுரைகள் என 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி செயலாளர் சீனிவாசராவ் விருதுகளை அறிவித்தார்.

இதில் தமிழ் மொழியில் சிறந்த படைப்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டது.

இந்த நூலில் எஸ்.ராமகிருஷ்ணன், கரிசல் பூமியில் தலைமுறை தலைமுறையாக வாழும் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறார்.

வருகிற ஜனவரி மாதம் 29ஆம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில், அவருக்கு விருது வழங்கப்படும். இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கமும், தாமிரப் பட்டயமும் கொண்டது ஆகும்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், தற்போது சென்னையில் வசிக்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 25 ஆண்டு கால எழுத்துப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதனை கருதுகிறேன். மதுரை, கோவில்பட்டி, சாத்தூர் என கரிசல் மண் சூழ்ந்த பூமியில் வாழும் நாதஸ்வர கலைஞர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் நாவலாக படைத்தேன்.

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை எத்தனை துயரங்களும், துன்பங்களும் சூழ்ந்தது என்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த நாவல் அதை வெளிச்சம் போட்டு காட்டியது.

நாதஸ்வர கலைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக தங்களது வித்தையை அழிந்து போகாமல் காத்து வருகிறார்கள். கலையை அழிக்காமல் காத்து வரும் இவர்களின் வாழ்வியல் பாதாளத்திலேயே இருக்கிறது. நாதஸ்வர கலையை போற்றும் விதமாகவும், நாதஸ்வர கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வித மாகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டதாக கருதுகிறேன். இந்த விருது ஒட்டுமொத்த நாதஸ்வர கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner