முன்பு அடுத்து Page:

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தன்னார்வ அமைப்பு மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

ஒரு மாதமாக இருளில் தவிப்பு: தஞ்சை அருகே மக்கள் மறியல்

தஞ்சாவூர், டிச.15 தஞ்சை அருகே, புயலால் பாதிக்கப் பட்டு, ஒருமாதமாகியும், இது வரை மின் இணைப்பு வழங் கப்படாததால், ஆவேசம டைந்த கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 'கஜா' புயலால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மாதத் திற்கும் மேலாக, பல கிராமங் களில் மின்சார வினியோகம் சீர் செய்யப்படாமல், பொது மக்கள் தவிக்கின்றனர். இத னால், பல்வேறு இடங்களில், சாலை....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

சென்னை, டிச.15 அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆதி திராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

மேகதாது விவகாரம்:  மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை  ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை, டிச.15 சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது, திமுக நாடாளு மன்ற குழு தலைவர் கனி மொழிக்கு நேற்று முன்தினம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி, டில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். சென்னை வந்த கனி மொழிக்கு, திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சிறப் பான வரவேற்பு அளித்தனர். பின் னர் அவர்,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச. 15 கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவி லில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஷ்வரி முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார். நகர இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் வரவேற்றார். ப.க. மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை

சென்னை, டிச.15  கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷாவுக்கு செய்துள்ளது. இச்சிறுமிக்கு ஏற்பட்ட வில்சன்ஸ் நோய் காரணமாக கல்லீரல் அழற்சி  ஏற்பட்டது. இதற்கு கல்லீ ரலை மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழியாகும். இதையடுத்து மருத்துவர்கள் 8 மணி நேரம்  தொடர்ந்து அறுவை சிகிச்சை நடத்தி ஆயிஷாவுக்கு வெற்றிகரமாக கல்லீரலை மாற்றி உயிரைக்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:25:02

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

கழகத் தலைவர் நேரில் மரியாதை சென்னை, டிச.14 திருமதி ராஜம் அம்மையார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் (வயது 71) 12.12.2018 அன்று மாலை உடல் நிலை நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார். திருமதி ராஜம் அம்மையாரின்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, டிச.6 மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்குரைஞர் திருமுருகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், காயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண மாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.

இதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. முழு மையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரண பொருட்களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது.

ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவா ரண பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner