முன்பு அடுத்து Page:

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

கழகத் தலைவர் நேரில் மரியாதை சென்னை, டிச.14 திருமதி ராஜம் அம்மையார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் (வயது 71) 12.12.2018 அன்று மாலை உடல் நிலை நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார். திருமதி ராஜம் அம்மையாரின்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்:  தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

மாநில தேர்தல் ஆணையமே ஒப்புதல் சென்னை,டிச.14 உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று கமுக்கமாக இருந்த தமிழக அதிமுக அரசு, இப்போது மாநிலத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டதால் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே, நகராட்சிகள் வார்டு மறுவரையறை....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

புள்ளியியல் ஆய்வாளர், உதவி நூலகர் பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்

சென்னை, டிச.14  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கஜா புயல்  காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வு, வரும் 23ஆம் தேதி நடக்கிறது,  சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வர்கள் புதிய நுழைவு சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும், 23.12.2018 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை,டிச.14- வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்ட லம், இன்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், ஆந்திர -தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ள தாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங் கடல் பகுதியில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெறும்போது, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கட லோர மாவட்டங்களில் கன....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

வேலை நிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட வாரியாக 16ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ விளக்க கூட்டம்

சென்னை, டிச.14 ஜாக்டோ -- ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாவட்ட வாரியாக 16ஆம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

தூத்துக்குடியிலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்கம்

தூத்துக்குடி, டிச.14 தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடை பெற்றது. தூத்துக்குடி வஉசி துறைமுகத் தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நேரடி கப்பல் சேவை தொடங்கி யுள்ளது. அதன்படி, மலேசியாவில் உள்ள பீனாங் துறைமுகத்திலிருந்து 4,333 சரக் குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பெரிய ரக கப்பல் 320 சரக்குப் பெட்ட....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

இனமானப் பேராசிரியரின் 97ஆம் பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வீர்!

இனமானப் பேராசிரியரின் 97ஆம் பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வீர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை, டிச. 14- திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள் கைப் பேராசான் - தத்துவ வித்த கர் நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா -தலைவர் கலைஞரின் தலை மையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே இலட்சியம் என வாழ்பவர். தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு டிசம் பர் 19ஆம் நாளன்று 97ஆவது பிறந்தநாள். தலைவர் கலைஞரைவிட....... மேலும்

14 டிசம்பர் 2018 15:52:03

ஆசிரியர் பொது கலந்தாய்வில் ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரி வழக்கு

ஆசிரியர் பொது கலந்தாய்வில் ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரி வழக்கு

மதுரை, டிச. 14- மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2018--19ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இத னால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர். எனவே, 2018--19இல் கவுன்சலிங்கில்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:52:03

தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நடத்த யார் அனுமதி கோரினாலும் அளிப்பீர்களா?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள…

மதுரை, டிச.14 தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா?  என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலில் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக கோயில் வளாகத்தில்  பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குரைஞர் முத்துக் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும்: முத்தரசன்

மதுரை, டிச.14 இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 18ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும்....... மேலும்

14 டிசம்பர் 2018 14:57:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, டிச.6  கட்டாய இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர் சேர்க்கை குறித்து மண்டல வாரி யாக விவரம் தாக்கல் செய்ய மெட்ரிக் பள்ளி களுக்கான இயக்கு நருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள் ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  6 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்றலை தவிர்க்க கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

இதை பெரும்பாலான தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. மேலும் அந்த மாணவர்களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் சேர்க்கை போல இதிலும் கவுன்சலிங்  முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் கட்டாய இலவச கல்வியின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், அறிக்கை பொதுவாக உள்ளது. போதுமான விவரம் இல்லை. இதில், நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. எனவே, மண்டல வாரியாக விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 20க்கு தள்ளி வைத்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சேலம், டிச.6 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.5 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

மதச்சார்பின்மை, அரசியல் சாசன பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் (டிச.7) இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச.6- இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச் சார்பின்மையை பாதுகாத்து நிலைநிறுத்த வலியுறுத்தி டிசம்பர் 7 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் ஆட்சியிலுள்ள மோடி அரசும், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளும் நாட்டின்மதச்சார்பற்ற கொள்கையினையும், இந்திய அரசியல் சாசனத்தையும் நிர்மூலம் ஆக்க திட்டமிட்ட சதிகளை மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் ஏற்கெனவே பாபர் மசூதியை இடித்தமதவெறி அமைப்புகள் தற்போதுராமர் கோவில் கட்ட வேண்டுமென வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இம்மதவெறி சக்திகளை எதிர்த்தும், இந்திய அரசியல் சாசனத் தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாத்து, நிலை நிறுத்திட அம்பேத்கர் நினைவு தினத்தில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்கங்கள் நடத்திட இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதன்படி மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பின் அவசி யத்தை வலியுறுத்தி டிசம்பர் 7 அன்று, தலைநகர் சென்னையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிபிஎம். சிபிஅய், சிபிஅய் (எம்எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்:

விசைப்படகுகளில் மீனவர்கள்

கடலுக்கு செல்லவில்லை

சென்னை, டிச.6 ராமேவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களைத் தாக்குவது, அவர்களது வலைகளைக் கிழித்தெறிவது, அவர்களை சிறைபிடித்துச் செல்வது என்று தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதுடன், பெரும் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணமாக புதன்கிழமை ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அந்தப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கச்சத்தீவு அருகே பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடிக்க நம் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமை பெற்றுத் தரவேண்டும். இந்த நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே அச்சமின்றி மீன்பிடிக்க இயலும் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner