முன்பு அடுத்து Page:

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச. 15 கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவி லில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஷ்வரி முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார். நகர இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் வரவேற்றார். ப.க. மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை

சென்னை, டிச.15  கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷாவுக்கு செய்துள்ளது. இச்சிறுமிக்கு ஏற்பட்ட வில்சன்ஸ் நோய் காரணமாக கல்லீரல் அழற்சி  ஏற்பட்டது. இதற்கு கல்லீ ரலை மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழியாகும். இதையடுத்து மருத்துவர்கள் 8 மணி நேரம்  தொடர்ந்து அறுவை சிகிச்சை நடத்தி ஆயிஷாவுக்கு வெற்றிகரமாக கல்லீரலை மாற்றி உயிரைக்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:25:02

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

கழகத் தலைவர் நேரில் மரியாதை சென்னை, டிச.14 திருமதி ராஜம் அம்மையார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் (வயது 71) 12.12.2018 அன்று மாலை உடல் நிலை நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார். திருமதி ராஜம் அம்மையாரின்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்:  தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

மாநில தேர்தல் ஆணையமே ஒப்புதல் சென்னை,டிச.14 உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று கமுக்கமாக இருந்த தமிழக அதிமுக அரசு, இப்போது மாநிலத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டதால் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே, நகராட்சிகள் வார்டு மறுவரையறை....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

புள்ளியியல் ஆய்வாளர், உதவி நூலகர் பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்

சென்னை, டிச.14  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கஜா புயல்  காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வு, வரும் 23ஆம் தேதி நடக்கிறது,  சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வர்கள் புதிய நுழைவு சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும், 23.12.2018 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை,டிச.14- வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்ட லம், இன்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், ஆந்திர -தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ள தாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங் கடல் பகுதியில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெறும்போது, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கட லோர மாவட்டங்களில் கன....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

வேலை நிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட வாரியாக 16ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ விளக்க கூட்டம்

சென்னை, டிச.14 ஜாக்டோ -- ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாவட்ட வாரியாக 16ஆம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு

சென்னை, டிச.5 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேர வையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடை பெறுகிறது. இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டும் கரு நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

காவிரியின் குறுக்கே மேக தாதுவில் கருநாடகம் அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், காவிரியின் குறுக்கே எந்தத் திட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கருநாடகத்துக்கு எந்த அனு மதியையும் அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமி அண்மையில் கடிதம் எழுதி யிருந்தார்.

இதனிடையே மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ அல்லது சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தையோ கூட்டி விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்து வந்தன. இந்தப் பிரச்சி னையை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக் கைகளைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பேரவைச் செயலகம் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனை தலைமைச் செயலகத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இதற் கான அறிவிப்பை ஆளுநர் பன் வாரிலால் புரோ கித்தின் ஒப்புத லுடன் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டார்.

தமிழக சட்டப் பேரவையை, பேரவை மண்டபத்தில் வரும் வியாழக்கிழமை (டிச. 6) மாலை 4 மணிக்குக் கூட்ட ஆளுநர் பன் வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தனது அறிவிப்பில் பேரவைச் செயலாளர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் எந்தப் பொருள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner