முன்பு அடுத்து Page:

கலைஞர் சிலை திறப்பு விழா

கலைஞர் சிலை திறப்பு விழா

தலைவர்கள் உரை நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை, டிச.15  தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (14.12.2018) அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தலைவர் கலைஞர் மறைந்தாலும் அவர் கட்டிக்காத்த இயக்கமும், அதன் கொள்கைகளும், அவர் உருவாக்கித்தந்த திட்டங்களின் பலன்களும், சட்டங்களின் விளைவுகளும் சாதனை வைரங்களாக சதா ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வைரங்களை மணிமுடியில் பதிப்பதுபோல அதன் பெருமை உலகுக்கெல்லாம் தெரிவதுபோல டிசம்பர் 16-ந்....... மேலும்

15 டிசம்பர் 2018 15:24:03

சேலம், தர்மபுரியில் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சேலம், தர்மபுரியில் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சேலம், டிச.15 சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 8வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள், மலை களை அழித்து சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின் றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதி....... மேலும்

15 டிசம்பர் 2018 14:59:02

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தன்னார்வ அமைப்பு மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

ஒரு மாதமாக இருளில் தவிப்பு: தஞ்சை அருகே மக்கள் மறியல்

தஞ்சாவூர், டிச.15 தஞ்சை அருகே, புயலால் பாதிக்கப் பட்டு, ஒருமாதமாகியும், இது வரை மின் இணைப்பு வழங் கப்படாததால், ஆவேசம டைந்த கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 'கஜா' புயலால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மாதத் திற்கும் மேலாக, பல கிராமங் களில் மின்சார வினியோகம் சீர் செய்யப்படாமல், பொது மக்கள் தவிக்கின்றனர். இத னால், பல்வேறு இடங்களில், சாலை....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

சென்னை, டிச.15 அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆதி திராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

மேகதாது விவகாரம்:  மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை  ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை, டிச.15 சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது, திமுக நாடாளு மன்ற குழு தலைவர் கனி மொழிக்கு நேற்று முன்தினம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி, டில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். சென்னை வந்த கனி மொழிக்கு, திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சிறப் பான வரவேற்பு அளித்தனர். பின் னர் அவர்,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, டிச.5 பெரியார் மருந்தியல் கல்லூரியும் பெரியார் மருத்துவக் குழுமமும் இணைந்து எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை 01.12.2018 அன்று மாலை 3 மணியளவில் நடத்தியது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் பெரியார் நல வாழ்வு சங்க செயலாளர் பேராசிரியர் க.அ.ச. முகமது சபீக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் திருச்சி எஸ். ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் நுண்ணுயிரியல் துறை பேரா சிரியர் மரு. பி. அனுபிரியா அவர்கள் எய்ட்ஸ் நோய் குறித்து சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில்:

உலக அளவில் 36.9 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், நம் இந்தியாவில் 2.1 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு ஆளாகியிருப்ப தாகவும் உரையாற்றினார்.

இந்நோய் முதன் முதலில் சிம்பன்ஸி குரங்குகளில் காணப்பட்டது என்றும் அதன் பிறகு மனித இனத்திற்கு பரவியது என்றும் தகாத உடலுறவின் மூலமும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாலும் இந்நோய் வேகமாக பரவுகிறது என்றும் உரையாற்றினார்.

மாலை நேரங்களில் காய்ச்சல், எடை குறைதல், இரவில் அதிக வியர்வை, வயிற்றுப் போக்கு போன்றவை இந் நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

இந்நோய் வந்தவுடன் சந்தர்ப்பவாத நோய்களான காசநோய், டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், இந்நோய் பாதித்த மூன்று வாரத்தில் கூட நாம் பரிசோதித்தால் இந்நோயின் தாக்கம் நமக்கு தெரியாது என்றும் கூறினார். எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகள் அதிக அளவில் கிடைப்ப தாகவும் தற்பொழுது இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலமும் அதிகமாகி வருகிறது என்றும் உரையாற் றினார்.

சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்களைப் போன்றே எய்ட்ஸ் நோயும் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று எய்ட்ஸ் குறித்த சரியான  விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர் களை ஒதுக்காமல் அவர்களும் மனிதர்கள், அவர்களை தொடுவதினாலோ, அவர் களுடன் இணைந்து செயல்படுவதினாலோ எய்ட்ஸ் பரவாது என்பதனை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்தகைய தீண்டாமை நோயை விரட் டினாலே எய்ட்ஸ் இல்லா உலகத்தை உரு வாக்க முடியும் என்று கூறி பார்வை யாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

நிறைவாக பெரியார் நலவாழ்வு சங்க இணைச்செயலர் அ.ஷமீம் அவர்கள் நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் பேராசி ரியர்கள், பணியாளர்கள் மற்றும்  மாணவச் செல்வங்கள் உட்பட 400க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந் தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner