முன்பு அடுத்து Page:

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச. 15 கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவி லில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஷ்வரி முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார். நகர இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் வரவேற்றார். ப.க. மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

8 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை

சென்னை, டிச.15  கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷாவுக்கு செய்துள்ளது. இச்சிறுமிக்கு ஏற்பட்ட வில்சன்ஸ் நோய் காரணமாக கல்லீரல் அழற்சி  ஏற்பட்டது. இதற்கு கல்லீ ரலை மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழியாகும். இதையடுத்து மருத்துவர்கள் 8 மணி நேரம்  தொடர்ந்து அறுவை சிகிச்சை நடத்தி ஆயிஷாவுக்கு வெற்றிகரமாக கல்லீரலை மாற்றி உயிரைக்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:25:02

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

பேராசிரியர் மங்களமுருகேசன் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் மறைவு!

கழகத் தலைவர் நேரில் மரியாதை சென்னை, டிச.14 திருமதி ராஜம் அம்மையார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் (வயது 71) 12.12.2018 அன்று மாலை உடல் நிலை நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார். திருமதி ராஜம் அம்மையாரின்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

உள்ளாட்சித் தேர்தல் தாமதம்:  தமிழக அரசின் அவசரச் சட்டம் தான் காரணம்

மாநில தேர்தல் ஆணையமே ஒப்புதல் சென்னை,டிச.14 உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று கமுக்கமாக இருந்த தமிழக அதிமுக அரசு, இப்போது மாநிலத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டதால் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே, நகராட்சிகள் வார்டு மறுவரையறை....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

புள்ளியியல் ஆய்வாளர், உதவி நூலகர் பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்

சென்னை, டிச.14  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கஜா புயல்  காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வு, வரும் 23ஆம் தேதி நடக்கிறது,  சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வர்கள் புதிய நுழைவு சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும், 23.12.2018 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை,டிச.14- வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்ட லம், இன்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், ஆந்திர -தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ள தாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங் கடல் பகுதியில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெறும்போது, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கட லோர மாவட்டங்களில் கன....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

வேலை நிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட வாரியாக 16ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ விளக்க கூட்டம்

சென்னை, டிச.14 ஜாக்டோ -- ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாவட்ட வாரியாக 16ஆம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, நவ.5  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் எதிர்ப்பு குழுவினரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம்  அணி அணியாக வந்து மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட்  ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர்,  ஆலையை மூடியது தவறு என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.  இதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஸ்டெர்லைட்  எதிர்ப்பு கூட்டமைப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி தருண் அகர்வால் குழு பரிந்துரை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனு மதிக்கக் கூடாது என்றும், தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை   நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைமையில் தூத்துக்குடி பண்டாரபுரம்,  குமரெட்டியாபுரம், மடத்தூர், மீளவிட்டான் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200 பேர் நேற்று காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் டிஆர்ஓ வீரப்பனை சந்தித்து மனு அளித்தனர். இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,  சிஅய்டியூ நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மனு அளித்தனர்.

மனு அளிக்க பல்வேறு அணிகளாக திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி எஸ்.பி. முரளி ராம்பா தலைமையில் நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக  குவிக்கப்பட்டு இருந்தனர்.

உப்பாற்றில் கழிவு: ஆட்சியருக்கு தாக்கீது

தூத்துக்குடி, சங்கர் நகரை சேர்ந்த முத்துராமன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக்கழிவுகளை தூத்துக்குடி மாவட்டம், புதுக் கோட்டை பகுதியிலுள்ள உப்பாற்றில் கொட்டுவது  நீர் மற்றும் காற்று சட்டத்திற்கு எதிரானது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள்  கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், தூத்துக்குடி ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு,  விசாரணையை டிச. 12க்கு தள்ளி வைத்தனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner