முன்பு அடுத்து Page:

சேலம், தர்மபுரியில் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சேலம், தர்மபுரியில் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சேலம், டிச.15 சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 8வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள், மலை களை அழித்து சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின் றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதி....... மேலும்

15 டிசம்பர் 2018 14:59:02

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தன்னார்வ அமைப்பு மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

ஒரு மாதமாக இருளில் தவிப்பு: தஞ்சை அருகே மக்கள் மறியல்

தஞ்சாவூர், டிச.15 தஞ்சை அருகே, புயலால் பாதிக்கப் பட்டு, ஒருமாதமாகியும், இது வரை மின் இணைப்பு வழங் கப்படாததால், ஆவேசம டைந்த கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 'கஜா' புயலால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு மாதத் திற்கும் மேலாக, பல கிராமங் களில் மின்சார வினியோகம் சீர் செய்யப்படாமல், பொது மக்கள் தவிக்கின்றனர். இத னால், பல்வேறு இடங்களில், சாலை....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! : வைகோ வலியுறுத்தல்

சென்னை, டிச.15 அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆதி திராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

மேகதாது விவகாரம்:  மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை  ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை, டிச.15 சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது, திமுக நாடாளு மன்ற குழு தலைவர் கனி மொழிக்கு நேற்று முன்தினம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி, டில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். சென்னை வந்த கனி மொழிக்கு, திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சிறப் பான வரவேற்பு அளித்தனர். பின் னர் அவர்,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:46:02

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.15 மாற்றுத் திறனாளி மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட் டத்தில் 2018 - -2019ஆம் நிதியாண்டில் கல்விபயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி, இதுவரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மட்டும் மாவட்ட....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்கலாம்

அண்ணா பல்கலை. பதிவாளர் தகவல் சென்னை, டிச.15 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ), அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்த போதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ் களைக் கொடுக்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரிய ருக்கு  அண்ணா  பல்கலைக்கழ கத்தின் குரோம்பேட்டை எம். அய். டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்புப் பணிகள் ஜனவரியில் முடியும்: கல்வித் த…

சென்னை, டிச.15 தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்பு களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி யமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1,....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

5 மாநில சட்டமன்ற தேர்தல்

5 மாநில சட்டமன்ற தேர்தல்

பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது : திருமாவளவன் நாகர்கோவில், டிச.15 நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றது. இது பா.ஜனதா விற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன்வந் துள்ளது அதிர்ச்சி அளிக்கும்....... மேலும்

15 டிசம்பர் 2018 14:35:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர், டிச.5 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புயல் சீரமைப்புப் பணிக்குப் பின்னரும் முறையாக பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து, மாணவர்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து களப்பால், அக்கரைக்கோட்டகம் வழியாக கறம்பக்குடி மேலசாலை வரை ஓர் அரசுப் பேருந்தும், திருத்துறைப்பூண்டியி லிருந்து வேதபுரம் வரை மற்றோர்அரசுப் பேருந்தும் காலை, மாலை என பள்ளி நேரத்தில் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி வீசிய கஜா புயலின் சீற்றத்தால் சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மேற்கண்ட இரண்டு பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது, சாலைகளில் கிடந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தும், கடந்த 2 நாள்களாக திருத்துறைப்பூண்டியிலிருந்து கறம்பக்குடி மற்றும் வேதபுரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துக்குப் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், களப்பால் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி முன்னாள் தலைவர் வேல்முருகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து, திருத்துறைப் பூண்டியிலிருந்து வேதபுரத்து அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை களப்பால் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த களப்பால் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பேருந்தை முன்பு இயக்கப்பட்டதுபோல், காலை மற்றும் மாலையில் பள்ளி நேரத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு தொலைபேசி மூலம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய போக்குவரத்துக் கழக கிளை மேலாளர், முன்புபோல் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்கப் படும் என உறுதியளித்ததையடுத்து பேருந்தை விடுவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner