முன்பு அடுத்து Page:

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு,  பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா (16.12.2018) மாபெரும் பொதுக் கூட்டத்தை முன்னின்று நடத்திய சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.இவ்விழாவில் பங்கேற்ற திருமதி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய அய்வருக்கும் வெள்ளி வீரவாள் வழங்கினார். அதனை....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

புதிய இந்தியாவுக்கு ராகுலை பிரதமராக்குவோம் கலைஞர் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம்   சென்னை, டிச. 17 சென்னை - அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று (16.12.2018) மாலை நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வை அடுத்து,....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

பெரியார் போராட்டத்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது தீர்ப்புகள் இறுதியானவை அல்…

பெரியார் போராட்டத்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது  தீர்ப்புகள் இறுதியானவை அல்ல;  போராட்டத்தால் மாற்றக் கூடியவையே  மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன்

சென்னை, டிச. 17 தீர்ப்புகள் இறுதியானவை அல்ல.அவை மக்கள் போராட்டத்தால் மாற்றப் படக் கூடியவையே என்று சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரி பரந்தாமன் கூறினார்.  தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பணியற்றிய ச.செந்தில்நாதனின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கை துவக்கி வைத்து சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந் தாமன் பேசுகையில், எழுத்தாளர் செந்தில்நாதனி டம் பயிற்சி பெற்ற 3 பேர் நீதி பதிகளாக....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

கலைஞர் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர்

கலைஞர் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர்

சென்னை - அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குகொண்டார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் உடன் சென்று பங்கேற்றனர். மேலும்

17 டிசம்பர் 2018 14:54:02

1 லட்சம் கண்காணிப்புக் கேமரா பொருத்த அரசு நிதி

1 லட்சம் கண்காணிப்புக் கேமரா பொருத்த அரசு நிதி

சென்னை, டிச.17 சென் னையில் 1 லட்சம் கண்காணிப் புக் கேமரா பொருத்துவதற்கு அரசு நிதி கிடைத்துள்ளதாக பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக அடையாறு காவல் மாவட்டத் தில் பொருத்தப்பட்ட 10,247 கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைக் கும் நிகழ்ச்சியும், கட்டுப் பாட்டு அறையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் திருவான்மியூரில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், கேமரா இயக்கத்தை தொடங்கி,....... மேலும்

17 டிசம்பர் 2018 14:53:02

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்

வதோரா, டிச. 17 நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 5,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்பட்டிருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில் அமைக்கப்பட் டுள்ள நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை பியூஷ் கோயலும், முதல்வர் விஜய் ரூபானியும் நாட்டுக்கு  அர்ப்பணித்தனர். இந்த விழாவில் பியூஷ் கோயல் பேசியதாவது: ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, அங்கு பணியாளர்களை நியமிப்பது,  மேம்பாலம், சுரங்க பாதை....... மேலும்

17 டிசம்பர் 2018 14:53:02

பொங்கல் முதல் கல்வித் தொலைக்காட்சி: அரசு கேபிளில் காண வசதி

சென்னை, டிச.16 தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற் காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் அன்று தொடங்கப் படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும்,  பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி அலை வரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தி ருந்தார்.  இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர்....... மேலும்

16 டிசம்பர் 2018 16:23:04

திருச்சி பெல் நிறுவனத்தில்

அய்.டி.அய். முடித்தவர்களுக்கு வாய்ப்பு திருச்சி, டிச.16 திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அய்டிஅய் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 71 பதவி: Welder - 26 பதவி:Fitter - 38 பதவி: Machinist - 07 சம்பளம்: மாதம் ரூ.34,300 வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி....... மேலும்

16 டிசம்பர் 2018 16:22:04

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள்

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள்

சென்னை, டிச.16 தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 2900 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு கரூரில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கு கிறது. கல்லூரிக்கான கட்டுமானங்கள் முடிவடைந்து தற்போது பணியாற்ற வேண்டிய டாக்டர்கள் நியமனம் நடந்து வருகிறது. இந்த கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும். இத்துடன் மதுரை, திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 100 இடங்களை....... மேலும்

16 டிசம்பர் 2018 16:22:04

உதகை தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு

உதகை  தாவரவியல் பூங்கா  நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு

உதகை, டிச.16 உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீரென  உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் இதுவரை பெரியவர்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 30 நுழைவுக் கட்டணம் தற்போது ரூ. 40 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. அதேபோல சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ........ மேலும்

16 டிசம்பர் 2018 15:02:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.11  ரத்தநாள குறைபாடு நோயால் பாதிக்கப் பட்ட ஒடிசா மாநிலச் சிறுமியின் முகத்தில் உருவான கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

ஒடிசா மாநிலம், பத்மபூரைச் சேர்ந்தவர் நாராயணா, தேநீர் கடை ஊழியர். மகள் தசபந்தி (15), பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி. தசபந்திக்கு ரத்தநாள குறைபாடு நோய் காரணமாக மூக்கு அருகிலும், மேல் தாடையில் உதட்டுக்கு கீழேயும் கட்டி உருவாகியது.

இதனால் பார்ப்பதற்கு மிக கோரமாகவும், ரத்தக் கசிவாலும் தசபந்தி நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார்.

ஒடிசா மாநிலத்தின் பல் வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் அக்கட்டியை நீக்க முடியவில்லை. இதை யடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் ஒன்றரை மாதத்துக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் தசபந்தி முகத்தில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட் டுள்ளது.

இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் பொன்னம் பலம் நமச்சிவாயம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

தசபந்தியை பரிசோதித்த போது, அவருக்கு பிறவியிலேயே ரத்த நாளங்கள் சரியாகப் பிரிந்து செல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து கட்டியாக மாறியிருப்பது தெரியவந்தது.

இதில், மூளை, கண்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களும் அடங்கி இருந்ததால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருந்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தசபந்தியின் முகத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

கட்டி அகற்றம்: ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் இளஞ்சேரலாதன், மருத்துவர்கள் பெரியகருப்பன், சண்முக வேலாயுதம், தீபன் குமார், சித்ராதேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ் உள் ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நவீன ரத்தநாள சிகிச்சை மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் வேதிப் பொருள்கள், கட்டி இருந்த பகுதிக்குள் முதலில் செலுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அறு வைச் சிகிச்சை மூலம் அந்தக் கட்டி அகற்றப்பட்டது.

இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது சிறிது தவறு ஏற்பட்டாலும் நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற அறுவை சிகிச் சையை தனியார் மருத்துவமனை யில் மேற்கொள்ள சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். இன்னும் ஒரிரு நாளில் தசபந்தி வீடு திரும்புவார் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner