முன்பு அடுத்து Page:

துபாயில் வேலைக்கு செல்ல 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச. 18- துபாயில் முன்னணி நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை தலைவர் சுனில் பாலீவால் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு: அய்க்கிய அரபு நாட்டிலுள்ள துபாயில் ஒரு முன்னணி நிறு வனத்தில் பணிபுரிய டிப்ளமோ எலக்ட்டிரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று வருட....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

வல்லம், டிசம்பர் 18- பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறு வனத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக 10.12.2018 அன்று மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவி கள் பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி யின் முதல்வர், முதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணி யாளர்கள்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, டிச. 18- ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டது.  தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.   இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டு நடைபெற்ற போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்டிஅய், பிளஸ் டூ முடித்தவர்கள் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

சென்னை, டிச. 18- தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகு நர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4429 பயிற்சி: தொழில் பழகுநர்(Apprentices) 1. சென்னை - 924 2. திருச்சி - 853 3. கோயம்புத்தூர் - 2652 தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து: 10 பேர் காயம்

மதுரை, டிச. 18- திருப் பரங் குன்றத்தில் அய்யப்ப பக்தர்கள் சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காய மடைந்த அய்யப்ப பக்தர் களுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உத்தரவு

கோவை, டிச.18 பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. இதனால், சான்று பெறுவதில், தாமதம் ஏற்படுவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையிலேயே, தனி அலுவலர் மூலம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவது குறித்து, ஆலோசிக்கப் பட்டது. முடிவாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள....... மேலும்

18 டிசம்பர் 2018 16:01:04

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அவசரம் ஏன்? விவசாயிகள் கண்டன ஆ…

திருவண்ணாமலை, டிச.18 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று, 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை- சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில், 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில், ஆயி ரக்கணக்கான  விவசாய நிலங்கள், வீடுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரு....... மேலும்

18 டிசம்பர் 2018 15:59:03

ஆந்திரத்தில் கரையை கடந்தது பெய்ட்டி புயல்: ஏராளமான மரங்கள்; மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதம்

ஆந்திரத்தில் கரையை கடந்தது பெய்ட்டி புயல்:  ஏராளமான மரங்கள்; மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதம்

கட்ரினிகோனா, டிச.18 ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினி கோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரை யை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90....... மேலும்

18 டிசம்பர் 2018 15:34:03

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு,  பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா (16.12.2018) மாபெரும் பொதுக் கூட்டத்தை முன்னின்று நடத்திய சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.இவ்விழாவில் பங்கேற்ற திருமதி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய அய்வருக்கும் வெள்ளி வீரவாள் வழங்கினார். அதனை....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

புதிய இந்தியாவுக்கு ராகுலை பிரதமராக்குவோம் கலைஞர் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம்   சென்னை, டிச. 17 சென்னை - அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று (16.12.2018) மாலை நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வை அடுத்து,....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து

கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா?

சென்னை, அக்.11 தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டங் களை நிறைவேற்றும் முன்பு பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய பா.ஜ.க. அரசிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேதாந்தா குழுமத்திற்கு

குறிப்பாக ஸ்டெர்லைட் தனியார் ஆலையை நடத்தும் வேதாந்தா குழு மத்தின் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள பேனா மை ஈரம் காய்வதற்குள், அ.தி.மு.க அரசு விடுத்துள்ள இந்த திடீர் கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இதற்காகவே டில்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது, தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு ஏற்கனவே உதவியது போல், அந்த குழுமத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கும் உதவுவ தற்கான அ.தி.மு.க அரசின் முன்னோட் டமாக அமைந்துள்ளது.

உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

மக்களின் நலனுக்காக போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் திட்டங்களை நிறை வேற்றுவது தாமதமாகிறது என்று அந்த கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்த காலத்திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங் களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயமாக எதிரானவை அல்ல. அதனால்தான் மக்க ளின் விருப்பத்துடன் கூடிய ஒப்புதலுடன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மறைப்பதற்காக கட்சிகள் மீது பழி!

ஆனால், இதைக்கூட சரியான கோணத் தில் புரிந்து கொள்ளாத அ.தி.மு.க அரசு, தனது கையாலாகாத தனத்தை மறைப் பதற்காக, வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் மீது பழி போட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற் சாலைகளோ, புதிய திட்டங்களோ, முதலீ டுகளோ தலைவிரித்தாடும் அ.தி.மு.க அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாசாரத் தால், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்ற னவே தவிர, மக்கள் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளால் அல்ல.

மக்களுக்கு எதிரான

திட்டங்களை...

தங்கள் முதுகில் படிந்திருக்கும் ஊழல் அழுக்கை கிஞ்சிற்றும் நீக்க முடியாத அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக்கேட்காமலேயே செயல்படுத்து வோம் என்ற எதேச்சதிகார மனப்பான் மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம். ஆகவே, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை அ.தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப்பாக முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner