முன்பு அடுத்து Page:

திராவிட சிந்தனையாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது மேனாள் அமைச்சர். பொன் முத்துராமலிங்கம் …

திராவிட சிந்தனையாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய நேரம் இது  மேனாள் அமைச்சர். பொன் முத்துராமலிங்கம் வேண்டுகோள்

மதுரை, அக். 17- மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 68ஆவது நிகழ்ச்சி 30.9.2018 அன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேனாள் நீதிபதி பொ.நடராசன் தலைமை தாங்கினார். பா. சடகோபன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார். மேனாள் கல்வி அதிகாரி, ச.பால்ராசு துவக்க உரை ஆற்றினார். "அய்யா - -அண்ணா" என்ற தலைப்பில் மேனாள் அமைச்சரும், திராவிட முன்னேற் றக் கழகத்தின் தீர்மானக்குழு தலைவரு மான பொன்....... மேலும்

17 அக்டோபர் 2018 18:15:06

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி பயன்பாட்டியல் துறையின் தொழில்நுட…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  கணினி பயன்பாட்டியல் துறையின்  தொழில்நுட்ப கருத்தரங்கம்

வல்லம், அக்.17 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக பெரியார் கணினி அறி வியல் 2018ஆம் ஆண்டு வருடாந்திர  (றிணிசிஷிகிவி  2ரி18)  தொழில்நுட்ப கருத் தரங்கம் 12.10.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொடக்க விழா காலை 10 மணிக்கு நடைபெற்றது. றிணிசிஷிகிவி தலைவர், ஆர்.அரவிந்த் வரவேற்புரை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முதன் மையர் டாக்டர் பேரா கே.லட்சுமி வேலை வாய்ப்புக்கான திற மைகளை வளர்த்துக்கொள்ள....... மேலும்

17 அக்டோபர் 2018 17:07:05

பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய கோவை அரசு கல்லூரி மாணவி இடைநீக்கம்

பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய  கோவை அரசு கல்லூரி மாணவி இடைநீக்கம்

கோவை, அக்.17 கோவை அரசு கலைக்கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாள் விழாவை கொண் டாடிய முதுகலை வரலாற்று துறை மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை அரசு கலைக் கல்லூரியில், கோவையை சேர்ந்த மாணவி மாலதி(23) எம்.ஏ. முத லாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். கல் லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி....... மேலும்

17 அக்டோபர் 2018 16:58:04

இந்திய மீனவர்களுக்கு அபராதம் இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலி…

இந்திய மீனவர்களுக்கு அபராதம்  இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, அக்.17  மனிதநேயம் சிறிதும் இன்றி இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:53:04

சாலைப்பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடுவதில்லை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் …

சாலைப்பணிக்காக வெட்டப்படும்  மரங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடுவதில்லை  உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை, அக்.17 மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழரசன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பழைமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. பழமை யான மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மரங் களை பாதுகாப்பாக வேறு இடத்தில் நட்டு வைக்கும் முறை இருக்கும்போது, அதை பின்ப ற்றாமல் மரங்களை வெட்டி அகற்றுவது தேவையில்லாதது........ மேலும்

17 அக்டோபர் 2018 16:51:04

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு தந்தை பெரியார் ஆளுமை விருது

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு  தந்தை பெரியார் ஆளுமை விருது

நாமக்கல், அக்.17 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் ஆளுமை விருது வழங்கப்பட்டது. 14.10.2018 அன்று நாமக்கல் கோல்டன் பேலசில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில்  அம்பேத்கர் பவுத்தம் தழுவிய 62ஆவது  ஆண்டு விழா, தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா, கணசங்கம் கட்சியின் மூன்றாம் ஆண்டு ஆளுமை விருது வழங்கும் விழா....... மேலும்

17 அக்டோபர் 2018 16:45:04

மக்களவைத் தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் பா.ஜ.க.வின் சத்ருகன் சின்ஹா…

மக்களவைத் தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்  பா.ஜ.க.வின் சத்ருகன் சின்ஹா பேட்டி

முசாபர்நகர், அக்.17 மத்திய அரசின் ரபேல் ஒப்பந்தம் குறித்து பாஜ அதிருப்தி தலை வர் சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் விமா னங்கள் வாங்கியதில் பல ஆயி ரம் கோடி ஊழல் நடைபெற் றுள்ளதாக காங்கிரசு தலைவர் ராகுல் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரசு உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜ இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள....... மேலும்

17 அக்டோபர் 2018 16:31:04

கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: முற்றுகை போராட்டம்; 101 பெண்கள் உட்பட …

கடலூர் மாவட்டத்தில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு:  முற்றுகை போராட்டம்; 101 பெண்கள் உட்பட 495 பேர் கைது

கடலூர், அக்.16 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டத்தில் 11 இடங் களில் போராட்டத்தில் ஈடுபட்ட 495 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அரசு, தனியார் நிறுவ னங்களுக்கு உரிமம் வழங்கி யுள்ளது. இந்தத் திட்டத்தால் விளை நிலங்கள், கடற்கரை, மீனவ கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என வும், எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு....... மேலும்

16 அக்டோபர் 2018 15:24:03

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு

   கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு

சிவகங்கை, அக்.16 சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன. கீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அக ழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் (2014 - -2017) நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக....... மேலும்

16 அக்டோபர் 2018 15:20:03

சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் மருத்துவர் வி.சாந்தா எச்சரிக்கை

சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம்  மருத்துவர் வி.சாந்தா எச்சரிக்கை

சென்னை,  அக்.15 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா தெரிவித்தார். சென்னை ராயபுரம் எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உடல்நல சிறப்பு ஆய்வு மய்யத்தின் தொடக்க விழா, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தாவுக்கு பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தங்கப் பதக்கம் சொற்பொழிவு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு எம்.வி.சர்க்கரை....... மேலும்

15 அக்டோபர் 2018 15:52:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.9  அரபிக் கடலில் உருவாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகிய வற்றால், வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு மற்றும் அதை யொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மய்யம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற் போது வலுவடைந்து காற்றழுத் தத் தாழ்வு மண்டலமாக மாறி யுள்ளது. இது தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக, ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு மற்றும் தென் கிழக்கில் 720 கி.மீ. தூரத்தில் மய்யம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதி வழியாக கடக்க வாய்ப்பு உள்ளது. லூபன் புயல்: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மய்யம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, லூபன் புயலாக மாறி, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் மினிகாய் தீவில் இருந்து 1,300 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஓமன்-, ஏமன் கடற் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தாமதம்: அரபிக்கடலில் உரு வாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகியவற்றால், அரபிக் கடல், தென்னிந்திய பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் போக்கு, ஈரப்பதம் ஆகியவற்றில் மாற்றம் காணப்படுகிறது. இத னால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் மய்யம் கொண்டுள்ள புயல், வங்கக் கடலில் நிலை கொண் டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகியவற்றின் தாக்கம் நிறைவடைந்த பிறகே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner