முன்பு அடுத்து Page:

துபாயில் வேலைக்கு செல்ல 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச. 18- துபாயில் முன்னணி நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை தலைவர் சுனில் பாலீவால் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு: அய்க்கிய அரபு நாட்டிலுள்ள துபாயில் ஒரு முன்னணி நிறு வனத்தில் பணிபுரிய டிப்ளமோ எலக்ட்டிரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று வருட....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா

வல்லம், டிசம்பர் 18- பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறு வனத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக 10.12.2018 அன்று மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவி கள் பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி யின் முதல்வர், முதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணி யாளர்கள்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, டிச. 18- ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டது.  தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.   இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டு நடைபெற்ற போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்டிஅய், பிளஸ் டூ முடித்தவர்கள் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

சென்னை, டிச. 18- தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகு நர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4429 பயிற்சி: தொழில் பழகுநர்(Apprentices) 1. சென்னை - 924 2. திருச்சி - 853 3. கோயம்புத்தூர் - 2652 தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel....... மேலும்

18 டிசம்பர் 2018 16:54:04

அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து: 10 பேர் காயம்

மதுரை, டிச. 18- திருப் பரங் குன்றத்தில் அய்யப்ப பக்தர்கள் சென்ற 2 வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காய மடைந்த அய்யப்ப பக்தர் களுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உத்தரவு

கோவை, டிச.18 பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. இதனால், சான்று பெறுவதில், தாமதம் ஏற்படுவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையிலேயே, தனி அலுவலர் மூலம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவது குறித்து, ஆலோசிக்கப் பட்டது. முடிவாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள....... மேலும்

18 டிசம்பர் 2018 16:01:04

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அவசரம் ஏன்? விவசாயிகள் கண்டன ஆ…

திருவண்ணாமலை, டிச.18 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று, 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை- சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில், 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில், ஆயி ரக்கணக்கான  விவசாய நிலங்கள், வீடுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரு....... மேலும்

18 டிசம்பர் 2018 15:59:03

ஆந்திரத்தில் கரையை கடந்தது பெய்ட்டி புயல்: ஏராளமான மரங்கள்; மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதம்

ஆந்திரத்தில் கரையை கடந்தது பெய்ட்டி புயல்:  ஏராளமான மரங்கள்; மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதம்

கட்ரினிகோனா, டிச.18 ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினி கோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரை யை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90....... மேலும்

18 டிசம்பர் 2018 15:34:03

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

கலைஞர் சிலை திறப்பு விழா - பிரமாண்ட பொதுக் கூட்டம்

சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு,  பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா (16.12.2018) மாபெரும் பொதுக் கூட்டத்தை முன்னின்று நடத்திய சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.இவ்விழாவில் பங்கேற்ற திருமதி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய அய்வருக்கும் வெள்ளி வீரவாள் வழங்கினார். அதனை....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

பாசிச பா.ஜ.க. கட்சியை ஒழிப்போம்!

புதிய இந்தியாவுக்கு ராகுலை பிரதமராக்குவோம் கலைஞர் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம்   சென்னை, டிச. 17 சென்னை - அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று (16.12.2018) மாலை நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வை அடுத்து,....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, அக்.7 திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளியும், புதிய தலைமுறை தொலைக் காட்சியும் இணைந்து நடத்திய வீட் டுக்கு ஒரு விஞ்ஞானி 2018 திருச்சி மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மிக பிரம்மாண் டமான முறையில் அக்.5 ஆம் தேதி காலை 9 மணியளவில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனி லைப்பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் திருஞானம் தலைமை யில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் செ.வேலுசாமி மற்றும் பள்ளியின் முதல்வர் க.வனிதா ஆகியோர் முன்னிலை தொடங்கி வைக்கப்பட்டது.

அறிவியல் கண்காட்சி

இக்கண்காட்சியில் திருச்சி மாவட் டத்தை சேர்ந்த 30 பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி களின் புதுமையான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ் வொரு படைப்பும், சிந்தனையையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இருந்தன. மேலும் மாணவர்களது மின் காந்த மற்றும் மின்னூட்ட படைப்புகள் அவர்களின் எண்ண அலைகளை நினை வூட்டுபவையாக இருந்தன.

கண்காட்சிக்கு நடுவர்களாக ஜமால் முகமது கல்லூரி உதவிப் பேராசிரியர்  ஜாகீர்உசேன் (வேதியியல்துறை), மீரா மைதீன் (தாவரவியல்துறை), எபினேசர் (இயற்பியல்துறை), அஸ்லாம் (தாவர வியல்துறை) ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்து பரிசுக் குரியோரைத் தேர்வு செய்தனர்.

இக்கண்காட்சி எதிர்கால விஞ்ஞா னிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் உன்னத முயற்சியாக, மாணவர் களின் படைப்புகளை உலகறியச் செய் யும் விதமாக அமைந்திருந்தது. இம் முயற்சியினை  கண்காட்சியில் பங்கேற்க பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  விழா விற்கான ஏற்பாடு களை திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி பொறுப்பாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பரிசளிப்பு

மாலை 4 மணியளவில் கண்காட் சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி கலை அரங்கில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக இயக்குநர் பேரா.ப.சுப்ரமணியன் தலை மையில், புதிய தலைமுறை தொலைக் காட்சி தலைமை மேலாளர் இளைய ராஜா  முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி முதல்வர் க.வனிதா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வளாக இயக்குநர் ப.சுப்ரமணியன் பேசும் போது, மாண வர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நல்லதோர் கண்காட்சிக்கு இணைந்து செயல்பட்ட   புதிய தலை முறை தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் அறி வியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை மாணவர் கள், ஆக்கப் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்று கூறினார்.

தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தலைமை மேலாளர் இளையராஜா பேசுகையில், மாண வர்களின் சிந்திக்கும் ஆற்றலை வெளிக் கொணர்வதே புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் நோக்கம். மனிதனை மனிதன் நேசிக்கக் கற்று கொடுப்பதே உண்மையான கல்வியாகும். தந்தை பெரியாரை போன்ற தலைவர்கள் வழியில் புதிய தலைமுறை நிறுவனம் மாணவர்களை அறிவியல் பாதைக்கு கொண்டு சென்று புதிய உலகம் படைக்கும் பணியை தொடர்ந்து செய்யும் என்று கூறினார்.

கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஜமால் முகமது கல்லூரி உதவி பேராசிரியர்கள் நினைவு பரிசினை வழங்கினர்.

இக்கண்காட்சியில் இளநிலைப்பிரிவில் மகாத்மா காந்தி சென்டினரி வித் யாலா பள்ளி முதலிடத்தையும்,ஹோலி கிராஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி இரண் டாமிடத்தையும், ஓஎப்.டி மேனி லைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன.

முதுநிலைப்பிரிவில் ஜோசப் காலேஜ் மேனிலைப்பள்ளி முதலிடத் தையும், காஜாமியான் மேனிலைப்பள்ளி இரண்டா மிடத்தையும், ஜேம்ஸ் மெட்ரிக் மேனி லைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற் றன. வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுப் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங் கப்பட்டன. நிறைவாக பள்ளியின் துணை முதல் வர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner