முன்பு அடுத்து Page:

கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: முற்றுகை போராட்டம்; 101 பெண்கள் உட்பட …

கடலூர் மாவட்டத்தில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு:  முற்றுகை போராட்டம்; 101 பெண்கள் உட்பட 495 பேர் கைது

கடலூர், அக்.16 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டத்தில் 11 இடங் களில் போராட்டத்தில் ஈடுபட்ட 495 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அரசு, தனியார் நிறுவ னங்களுக்கு உரிமம் வழங்கி யுள்ளது. இந்தத் திட்டத்தால் விளை நிலங்கள், கடற்கரை, மீனவ கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என வும், எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு....... மேலும்

16 அக்டோபர் 2018 15:24:03

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு

   கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு

சிவகங்கை, அக்.16 சிவகங்கை மாவட் டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன. கீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அக ழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் (2014 - -2017) நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக....... மேலும்

16 அக்டோபர் 2018 15:20:03

சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் மருத்துவர் வி.சாந்தா எச்சரிக்கை

சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம்  மருத்துவர் வி.சாந்தா எச்சரிக்கை

சென்னை,  அக்.15 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா தெரிவித்தார். சென்னை ராயபுரம் எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உடல்நல சிறப்பு ஆய்வு மய்யத்தின் தொடக்க விழா, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தாவுக்கு பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தங்கப் பதக்கம் சொற்பொழிவு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு எம்.வி.சர்க்கரை....... மேலும்

15 அக்டோபர் 2018 15:52:03

பள்ளி மாணவர்களுக்கு வங்கி, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு

பள்ளி மாணவர்களுக்கு வங்கி,  அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு

கோபி, அக்.15 பள்ளி மாணவர் களுக்கு வங்கி, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் கூறினார். தமிழகம் அனைத்துத் துறை களிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை பயோமெட்ரிக் முறை யில் பதிவுசெய்து பெற்றோர் களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, போரூரில் இந்த திட்டம் தொடங்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:49:03

வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு  5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆண்டிப்பட்டி, அக். 15- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள் ளது வைகை அணை. இந்த அணையின் முழுக் கொள்ளளவு 71 அடி. இந்த அணை முல் லைப் பெரியாறு அணை தண் ணீர் மூலமும், மூல வைகை ஆற்றில் வரும் தண்ணீர் மூல மும் நிரம்புகிறது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாத புரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:11:03

பி.ஜே.பி யையும்,அதன் கூட்டாளியான அ.தி.மு.க வையும் தோற்கடிக்கத் தயாராகுங்கள்!!

   பி.ஜே.பி யையும்,அதன் கூட்டாளியான அ.தி.மு.க வையும் தோற்கடிக்கத் தயாராகுங்கள்!!

தமிழக மக்களுக்கு திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல்!     திருப்பூர், அக். 15- -பி.ஜே.பி யையும்,அதன் கூட்டாளியான அ.தி.மு.க வையும் தோற்கடிக்கத் தயாராகுங்கள் என்று தமிழக மக்களுக்கு திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல் விடுத்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக் குழு சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரை....... மேலும்

15 அக்டோபர் 2018 15:07:03

மீனவர்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்துவதா? அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மீனவர்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்துவதா?  அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, அக். 15- மீனவர்களின் போராட்டத்தை உதாசீனப்படுத் துவதா என்று அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண் டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கடந்த 3.8.2018 முதல், தங்களின் அய்ந்து அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராம நாதபுரம், தூத்துக்குடி, கன்னி யாகுமரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடத்திய காலவரையற்ற போராட்டத்தை உதாசீனப்படுத்திய அதிமுக அரசுக்கு கடும்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:01:03

சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிப்பு

அரக்கோணம், அக்.14 சென்னை கடற்கரை - காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக் கோணம் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அரக்கோணம் - தக்கோலம் புதிய இரும்புப் பாதை அமைக்கப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் அரக்கோணம் ரயில்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இச்சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறி யாளர்....... மேலும்

14 அக்டோபர் 2018 15:46:03

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் நீர்நிலைகளில் எடுக்கப்பட நடவடிக்கைகள்

அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, அக்.14 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற் றுவதில் எவ்வித தயவு தாட்சண் யமும் காட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென் னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தர விட்டுள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் அருண்நிதி தாக்கல் செய்த பொதுநல....... மேலும்

14 அக்டோபர் 2018 15:46:03

காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு: இணைய தளத்தில் தேர்வு முடிவு

காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு: இணைய தளத்தில் தேர்வு முடிவு

சென்னை, அக்.14 காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் தமிழக காவல்துறையில் ஆயுதப்படைப் பிரிவில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 7 தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய-மாநில தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் புதனன்று (அக்.3)தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வே.சுப்புராமன், மு.சண்முகம், கி.நடராசன் (தொமுச), ஜி.சுகுமாறன், ஆறுமுக நயினார் (சிஅய்டியு), வி.சி.முனுசாமி (அய்.என்.டி.யு.சி), டி.எம்.மூர்த்தி, ஜே.இலட்சுமணன் (ஏ.அய்.டி.யு.சி), மு.சுப்பிர மணியம், மா.சுப்பிரமணியபிள்ளை (எச்.எம்.எஸ்), ஏ.எஸ்.குமார் (ஏ.அய்.சி.சி.டி.யு), இராம.முத்துக்குமார் (பாட்டாளி தொழிற்சங்கம்), பி.வேணுராம் (தே.மு.தொ.ச), வி.ஜார்ஜ், ஆறுமுகம் (எம்.எல்.எப்), அர்சுணன், ஆ.வேலு (எல்.எல்.எப்), திருமலைசாமி, ப.பத்மநாபன் (பணியாளர் சம்மேளனம்), இரா.குசேலர், துரைராஜ் (உ.ம.மா) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தொமுச தலைவர் மு.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பொதுத் துறையின் சாதனைகளை கொச்சைப் படுத்தும் அமைச் சர்களின் பேச்சும் தொழிலாளர்களையும், தொழிற்சங்க இயக்கங் களையும் சிறுமைப்படுத்துவதை கண்டிக்கிறோம். ஒப்பந்த முறையையும், அவுட்சோர்ஸிங் பணிகளையும் கைவிட வேண்டும். பிக்சட் டேர்ம் எம்ளாய்மெண்ட் முறையை முழுமையாக கைவிட வேண்டும்.தமிழகத்தில் முத்தரப்புக் குழுக்களை அமைத்து உடனடியாக கூட்ட வேண்டும். தொழிற் சங்க உரிமைகளை பேணிப்பாதுகாக்க சங்கம் வைத்தால் நிர்வாகங்களே வன்முறையை தூண்டுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யமஹா, எம்எஸ்அய் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் நடை பெறும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கிறோம். போக்குவரத்து, மின்சாரம்,நுகர்பொருள் வாணிபக் கழகம், அமைப்பு சாராத் தொழிலாளர்களின் கோரிக் கைகளை ஆதரித்தும் கூட்டுறவுத் துறை ஊழியர்களை கொத்தடிமையாக நடத்துவதைக் கண்டித்தும் வரும் 16 ஆம் தேதி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஒரு ஆலை யில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினாலும் ஒத்த கருத்தை உருவாக்கி அனைத்து இயக்கங்களில் பங் கேற்று ஆதரவு தருவதென்றும் முடிவு செய்துள்ளோம்.

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, 2019 ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு டில்லியில் நடந்த அனைத்துத் தொழிற் சங்கங்களின் தேசிய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. அதனை ஏற்று தமிழ கத்தில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner