முன்பு அடுத்து Page:

தமிழக மீனவர்கள் 200 பேர் ஆந்திராவில் சிறை பிடிப்பு

சென்னை, பிப்.20 சென்னை ஆந்திர கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற, தமிழக மீனவர்கள், 200 பேர், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடந்த பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, பிப்., 16ல், 27 விசைப்படகுகளில், 200 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர கடலோர பகுதியில் மீன்பிடித் ததாக, 200 பேரை, ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்துள்ளனர்.சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்கள், ஆந்திர....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

பொதுத் தேர்வுகள்: முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை, பிப்.20 தமிழகத்தில் வரும் மார்ச் முதல் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 3,400 பள்ளிகளில் பொதுத் தேர்வு மய்யங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மய்ய கண் காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து தேர்வு மய்யங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:03:05

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

சென்னை, பிப்.20 தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள் ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் முதலமைச்சர் கோப்பைக் கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:00:05

அவசர உதவிகளுக்கு 112 எண் சேவை தொடக்கம்

சென்னை, பிப்.20 தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை தொடங்கப் பட்டுள்ளது. இந்த புதிய தொலைபேசி சேவை, முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட்....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த 10,000 நெல் மூட்டை சேதம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  திறந்தவெளியில் வைத்திருந்த 10,000 நெல் மூட்டை சேதம்

விருத்தாசலம், பிப்.20  விருத்தாசலத்தில் நேற்று காலை திடீரென கன மழை பெய்ததால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம்,  சிறீமுஷ்ணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், விழுப்புரம், சேலம், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நெல், கம்பு, மணிலா,....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:23:04

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்…

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க  சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்கம்

சென்னை, பிப்.20 கோடையைச் சமாளிக்க சென்னைக்கு அருகில் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் குடிநீர் ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. சென்னை மக்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தினமும் 83 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் விநியோகித்து வந்தது. இதற்காக புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகள்,  நெம்மேலி-மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள்,  வீராணம் போன்ற  குடிநீர் ஆகிய....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:20:04

மக்களை பற்றி கவலையில்லாமல் கூட்டணி! அதிமுக ஊழல்களை புத்தகம் போட்டவர் ராமதாஸ்

மக்களை பற்றி கவலையில்லாமல் கூட்டணி!  அதிமுக ஊழல்களை புத்தகம் போட்டவர் ராமதாஸ்

ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு ஆம்பூர், பிப்.20 அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ். இன்று பாமக -- அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று (19.2.2019) ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கரடிக்குப்பம் என 2 இடங்களில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்கள் மற்றும் வாக்குச்சாவடி....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:17:04

பால் உற்பத்தியாளர்களை காப்பாற்ற அரசு பேச்சு நடத்த வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை, பிப்.20  பால் உற்பத்தி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாய தொழிலுக்கு துணை தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 25 லட்சம் குடும்பங்கள் கூட்டுறவு துறைக்கு நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறார்கள். நாள் தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 35....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:12:04

விசாரணை நீதிமன்றங்கள் குறித்த காலத்தில் வழக்கை முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.20 குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குகளை முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சசிக்குமார் என்பவர் பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து சசிக்குமாரின் சகோதரர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையில், இழப்பீடு கோரி சசிக்குமாரின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தொழிலாளர் நலத்துறை ஆணையர், சம்பந்தப்பட்ட நிறுவனம் சசிக்குமாரின் குடும்பத்திற்கு....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:39:03

கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில்களில் கொள்ளை

கடவுள் சக்தி இவ்வளவுதான்!  கோவில்களில் கொள்ளை

குஜிலியம்பாறை, பிப்.19 குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனி அருகே மேட்டுபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு வேளை யில் கோவில் பூட்டை உடைத்து அடையாளத் தெரியாத சில நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் வைத் திருந்த 6 குத்து விளக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடிச்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:13:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.7 வடகிழக்கு பருவமழை அக்டோபர்  8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 8-ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் இரண்டு நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற் றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவுகள், தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதி களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் மேற்குப் பருவ மழை வட இந்தியப் பகுதிகளில் இருந்து அடுத்து வரும் 3 நாள்களில் படிப்படியாக விலகி விடும். இதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தமிழகம், கேரளம், தெற்கு ஆந்திரம், தெற்கு கர்நாடகம் பகுதிகளில்  அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமாக சூழல் நிலவுகிறது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென் கிழக்கு அரபிக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, தமிழக பகுதி வழியாக ஈரப்பதமிக்க  காற்று வீசும். அப்போது, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார் எஸ்.பாலச்சந்திரன்.

முன்னதாக தொடங்கும் பருவ மழை

தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்யும் வடகிழக்குப் பருவமழை வழக்கமாக, அக்டோபர் 3-ஆவது வாரத்தில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டு  சற்று தாமதமாக  அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கியது.

ஆனால், இந்த ஆண்டு முன்னதாக அக் டோபர் 8-ஆம் தேதியே தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. வட கிழக்குப் பருவ மழை சீசனில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்)  இயல்பான மழை அளவு 440 மி.மீ. ஆகும். இந்த ஆண்டு 500 மி.மீ. வரை மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner