முன்பு அடுத்து Page:

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    திருச்சி,  ஜூலை 22 பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன அரங்கில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான “அறிவியல் கண்காட்சி” மிக பிரம்மாண்டமாக 19.7.2018 அன்று காலை 10 மணியளவில் பள்ளியின் முதல்வர் டாக்டர் வனிதா தொடங்கி வைக்க பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன் முன் னிலை வகித்தார். இக்கண்காட்சியில் 400 மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடுமூளை செயலாக்கப் பயிற்சி

  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடுமூளை செயலாக்கப் பயிற்சி

    திருச்சி, ஜூலை 22 திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி பட்டறை வகுப்பு ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கு “நடு மூளை செயலாக்கம்“  (விவீபீ ஙிக்ஷீணீவீஸீ கிநீtவீஸ்வீtஹ்) என்ற தலைப்பில் 18.07.2018, 19.7.2018 இரு தினங்களும் ‘த ஸ்மார்ட் கிட்ஸ் அகாடமி” ன் நிர்வாக இயக்குநர்களான சி.சுரேஷ், சிறீஜெயந்தி சுரேஷ் இருவரும் இவ்வகுப்பை நடத்தினர். பள்ளியின் முதல்வர் கே.வனிதா  தொடங்கி வைக்க பெரியார் பள்ளிக் குழுமங்களின் இயக்குநர்....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

தமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, ஏமாற்றம் அளிக்கிறது: டி.…

தமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன் எம்.பி

சென்னை, ஜூலை 22-- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்க ளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மருத்துவப்படிப்பு சேர்க் கைக்கான நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் கேட்கப்பட்டி ருந்த 49 வினாக்களின் மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததால், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தரவரிசை பட்டியல் வெளியீடு

  எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை, ஜூலை 22  எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பு களுக்கு அரசு இடஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று  கோவையில் வெளியிடப்பட்டது. மாநில அளவிலான கலந் தாய்வு கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை நடத்தி வரும் பல்கலை மற்றும் கல் லூரிகளில் நடப்பு கல்வியாண் டில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் சென்னை....... மேலும்

22 ஜூலை 2018 15:54:03

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத் தட்டை

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத் தட்டை

    மதுரை, ஜூலை 22- ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ் டிக் பொருள்களுக்கு தமிழகம் முழுவதும் விரைவில் தடை வரவுள்ள நிலையில், அதற்கு மாற்றான பொருள்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வரு கின்றன. சிறிய கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ் டிக் பொருள்கள் தவிர்க்க முடி யாததாக இருந்து வருகிறது. ஆனால், இவற்றினால் ஏற் படக்கூடிய சுற்றுச்சூழல் கேடு கள் ஏராளம். இதைக் கருத்தில்கொண்டு ஒரு....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்காகவே வருமான வரி சோதனை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்காகவே வருமான வரி சோதனை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 22- மக்கள வையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுகவினர் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட் டியுள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை (21.7.2018) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகத்தின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்க ணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத் திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

சங்கராபுரத்தில் ரா.அன்புமணி பணிநிறைவு பாராட்டு விழா - நன்கொடை வழங்கல்

  சங்கராபுரத்தில் ரா.அன்புமணி பணிநிறைவு பாராட்டு விழா - நன்கொடை வழங்கல்

சங்கராபுரம், ஜூலை 22 கல்லக்குறிச்சி கழக மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் ரா.அன்பு மணி 30.6.2018 அன்று பணிநிறைவு பெற்றார். அன்னாரின் பணிநிறைவு பாராட்டுவிழா சங்கராபுரம் சிறீ அங் காளபரமேஸ்வரி திருமண மண்டபத்தில் 1.7.2018 அன்று நடந்தது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியர் சிந்தனைஉயராய்வு மய்யப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார் தலைமையேற்று நடத்தி வைத்தார். பணிநிறைவு பெற்ற அன்புமணியும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன் பணி....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் அறிமுகம்

  புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் அறிமுகம்

தஞ்சாவூர், ஜூலை 22- கும்பகோ ணம் நகராட்சியில் புதை சாக் கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் (ரோபோ) சனிக்கிழமை முதல் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008--20-09ஆம் ஆண்டு முதல் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள், 125 கி.மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் வழியே 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன. இவற்றில் ஏற்படும்....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

கல்லணையில் காவிரி நீர் திறப்பு

  கல்லணையில் காவிரி நீர் திறப்பு

திருச்சி, ஜூலை 22- காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக் காக திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தடைந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ஆம் தேதி வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத் தார். இந்த தண்ணீர் வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணைப் பகுதிக்கு வந்த டைந்தது. தொடக்கத்தில் குறைந்தளவில் வந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து 18,000....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கர…

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து

    திருவண்ணாமலை, ஜூலை 22  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று (21.7.2018)  திருவண்ணா மலையில் கருத்தரங்கு மற்றும் ஆவணம்-29 இதழ் வெளியீட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபா கரன், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச் சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோ ருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது........ மேலும்

22 ஜூலை 2018 15:09:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜூலை 12- தூத்துக்குடி யில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நாளன்று மாவட்ட ஆட்சியர் எங்குதான் சென்றார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடை பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி உயர்நீதிமன் றத்தில் பல வழக்குகள் தொட ரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத் தும் புதன்கிழமையன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் முன்பு விசா ரணைக்கு வந்தன. அப்போது, உயிரிழந்தோர் குடும்பத்துக் கும், காயமடைந்தவர்களுக்கும் அதிக இழப்பீட்டு தொகை, மருத்துவ உதவி, இணையதளச் சேவை, பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலவச சட்ட உதவி ஆகியவை நிறைவேற்றப் பட் டுள்ளதாகவும், தனிநபர் விசா ரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆஜரான மனு தாரர்கள்தரப்பு வழக்குரைஞர், மே 20 ஆம்தேதி மாவட்ட எஸ்.பி. தலைமையில் சமாதா னக் கூட்டம் நடைபெற்றதாக வும், அதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லை என்றும், போராட்டத் திற்குப் பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு சட்டவிரோதமாக காவ லில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் வாதிட்டார்.

இதன்பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தூத்துக்குடியில் சமாதானக் கூட்டம் நடந்தபோது, சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் பங்கேற்றதாகவும், எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட் டோம் எனஅப்போது பொது மக்கள் உறுதி அளித்ததாகவும் வாதிட்டார். ஆனால், மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தை தாக்கியது டன், பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தியதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், தூத்துக்குடியில் மிகப் பெரிய போராட்டம்நடந்தபோது மாவட்ட ஆட்சியர் எங்கு சென் றிருந்தார் என கேள்வி எழுப்பி னர். துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினர் என்னென்ன வகை துப்பாக்கிகளை பயன் படுத்தினர் என்றும் கேட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாட்களாக தூத்துக் குடியில் நடைபெற்ற போராட் டங்களின் வீடியோ பதிவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட னர். 99 நாட்கள் அமைதியாக போராட்டம் நடந்தபோது, உளவுப்பிரிவு காவல்துறையி னர் சேகரித்த தினசரி தகவல் களையும் அறிக்கையாக நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உத் தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகின்ற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner