முன்பு அடுத்து Page:

செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

செப். 21-இல் அரசு மருத்துவர்கள்  வேலைநிறுத்தம்

சென்னை, செப்.18 ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கே. செந்தில், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:22:04

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க வெறிபிடித்த மிருகம்போல செயல்படுவதா? சென்னை, செப் 18-  “தந்தை பெரியாரை அவமானப்படுத் துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு வெறிபிடித்த மிருகம் போல செயல்படுவதா?” என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று(17.9.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பகுத்தறிவுப்....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:02:04

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னை, செப்.18  தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா நேற்று (17.9.2018) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர் கள் நேற்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பெரியார் சிலையை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தார். பின்னர்....... மேலும்

18 செப்டம்பர் 2018 15:55:03

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் மாலை அணிவிப்பு

சென்னை, செப். 16- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2018 அன்று காலை 8 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். வினைதீர்க்கும் விநாயகன் சக்தியைப் பாரீர்! விநாயகர் சிலை கரைக்கச் சென்ற....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும், ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: …

பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும்,  ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: திமுக தலைவர் சூளுரை

விழுப்புரத்தில் நேற்று (15.9.2018) திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மும்பை வி.தேவராசனுக்கு பெரியார் விருதும், பொன்.இராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதும், குத்தாலம் பி.கல்யாணத்திற்கு கலைஞர் விருதும், புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருதும், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கி சிறப்பித்தார். விழுப்புரம், செப். 16- விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் நேற்று (15.9.2018) மாலை....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

உயர் கல்வி படிப்பில் சேருவதற்கு பிளஸ்2 மதிப்பெண் மட்டும் போதும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…

உயர் கல்வி படிப்பில் சேருவதற்கு பிளஸ்2 மதிப்பெண் மட்டும் போதும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப்.16  உயர் கல்வியில் சேருவதற்கு இனி பிளஸ் 1 மதிப்பெண் அவசிய மில்லை. எனவே, இந்த கல்வி யாண்டு முதல் பிளஸ் 2 வில் எடுக்கும் மதிப்பெண் அடிப் படையில்  மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு விண்ணப்பிக் கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.  தமிழகத்தில் இருந்து நீட், ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 412 மய்யங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்....... மேலும்

16 செப்டம்பர் 2018 15:09:03

மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்

சிவகாசி, செப்.15 தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன் னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் மாற்றுத்திற னாளிகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் (IEDSS - Inclusive Education for Disabled at Secondary) 2009-2010ஆம் கல்வியாண்டில் துவக்கப்பட்டது. பின் அனைவருக்கும் இடைநிலைக்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:55:03

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப்.15 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறு வதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்.) வரும் செப்.17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூல மாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவர் களுக்கு என்.எம்.எம்.எஸ்........ மேலும்

15 செப்டம்பர் 2018 15:55:03

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசு

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசு

சென்னை, செப். 15- இந்தோனே சியா தலைநகர் ஜகர்த்தா மற் றும் பிளமிங் நகரங்களில் நடை பெற்ற 18ஆ-வது ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் பதக் கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ் வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ-குவான்-இயு பிறந்த நாள் விழா

சென்னை, செப். 15- தமிழ்நாடு - சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, 17.9.2018 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் "பாரதீய வித்யாபவன்" ஏசி மெயின் ஹாலில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்று பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:32:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 12- திருவண் ணாமலை மாவட்டம், வேட்ட வலத்தை அடுத்த காட்டுமலை யனூர் கிராமத்தில் 2ஆம் நந்தி வர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

வேட்டவலம் பேரூராட்சி, ஆவூரை அடுத்த காட்டுமலைய னூர் கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் பழங் கால நடுகல் இருப்பதை அந் தப் பள்ளியின் ஆசிரியை ஜெய பிரியா பார்த்தார். இதுகுறித்து திருவண்ணாமலை மரபுசார் அமைப்புக்கு அவர் தகவல் அளித்தார்.

இதையடுத்து, அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம், வரலாற்று ஆர்வலர்கள் மணி கண்டன், மோகன் ஆகியோ ரைக் கொண்ட குழுவினர் திங் கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து ராஜ்பன்னீர்செல்வம் கூறியதாவது:

4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட கல்லில் 2 வீரர்களின் உருவம், புடைப்புச் சிற்பமாக 5 வரி கல்வெட்டுடன் நடுகல் காணப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் 2-ஆம் நந்தி வர்மன் (கி.பி. 730--795) ஆட்சிக் காலத்திய நடுகல் என்பது தெரியவந்தது.

போரிலும், ஆநிரை (பசுக் கள், மங்கைகள்) மீட்கும் முயற் சியிலும் உயிரிழக்கும் வீரர்க ளின் நினைவாக இதுபோன்ற நடுகல் நடப்படுவது அந்தக் கால மக்களின் வழக்கம். இந்த நடுகல் மூலம் அந்தப் பகுதி பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது. நடு கல் பலகையில் உள்ள வரி களில் மணியன்னாரம் மகன் இடரன் என்ற பெயர் செதுக் கப்பட்டுள்ளது. எனவே, நடு கல் கல்வெட்டில் இருப்பவர் கள் தந்தை, மகனாக இருக் கலாம். 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மலையனூர் என்று அழைக்கப்பட்டுள்ளது.

நடுகல்லின் வலது பக்கத் தில் தந்தையைப் போல் உள்ள முதியவரின் உருவமும், இடது பக்கத்தில் மகன் போன்ற தோற்றத்தில் உள்ள வீரரின் உருவமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நடுகல்லில் உள்ள வரிகளின் கடைசி வரி முற்றி லும் சிதைந்துள்ளது.

எனவே, 2 வீரர்களின் வீர மரணம் குறித்த முழு தகவலை அறிய இயலவில்லை. நடுகல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கருப்பு, சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள் அதிகமாக இருப்பதால், இந்த ஊர் மக்க ளின் வாழ்விடமாக இருந்துள் ளதை காண முடிகிறது என்றார் அவர்.

இதுநாள் வரை இந்தக் கல் பற்றி அறியாத காட்டுமலை யனூர், ஆவூர், வேட்டவலம் பகுதி மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நடுகல்லின் சிறப்புகள் தெரிந்தபிறகு கூட்டம், கூட்ட மாகச் சென்று அதைப் பார்த்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner