முன்பு அடுத்து Page:

கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில்களில் கொள்ளை

கடவுள் சக்தி இவ்வளவுதான்!  கோவில்களில் கொள்ளை

குஜிலியம்பாறை, பிப்.19 குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனி அருகே மேட்டுபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு வேளை யில் கோவில் பூட்டை உடைத்து அடையாளத் தெரியாத சில நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் வைத் திருந்த 6 குத்து விளக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடிச்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:13:04

8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி

8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி

சென்னை, பிப்.19  எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீதப் பங்குத் தொகையுடன் மத்திய அரசின் ஸ்மார்ட் மடிக் கணினிகள் இந்த மாத இறுதிக் குள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார். கோபி அருகே காசிபாளையத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 1.50 கோடி மரக்கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:55:03

ஒரே நாளில் 7 இடங்களில் காட்டுத் தீ

சென்னை, பிப். 19- தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஏழு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டதாக, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வன ஆராய்ச்சி நிறு வனம், காட்டுத் தீ சம்பவங் களை, செயற்கைக்கோள் உத வியுடன் கண்காணித்து வருகி றது. தீ விபத்து ஏற்பட்டால், உடனுக்குடன் மாநில ....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:55:03

பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகைக் காசுகள் கண்டெடுப்பு

பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  அரிய வகைக் காசுகள் கண்டெடுப்பு

பழனி, பிப். 19- பழனி அருகே ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட அரிய வகை காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழனி அருகே உள்ள போடுவார் பட்டி கிராமத்தில் ஆறு முகம் என்பவர் வீட்டில் சில பழைய காசுகள் கிடைத்துள்ளன. இதனை தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் மற்றும் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரலாற்றுத் துறைத் தலைவர் இராஜேஸ்வரி, பழனியாண்டவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனை வர் இரவிச்சந்தின்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:53:03

6 நாட்களாக நடந்த போராட்டம் திரும்பப் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

6 நாட்களாக நடந்த போராட்டம் திரும்பப் பெறுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி, பிப். 19- புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை கண்டித்து கடந்த 13ஆம் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட் டம் தொடங்கிய மறுநாள் ஆளுநர் திடீரென டில்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ஆம் தேதி தான் புதுவை திரும்புவதாக....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:52:03

முதுநிலை மருத்துவப் படிப்பு: தமிழகத்தில் 112 இடங்களை அதிகரிக்க அனுமதி

முதுநிலை மருத்துவப் படிப்பு:  தமிழகத்தில் 112 இடங்களை அதிகரிக்க அனுமதி

சென்னை, பிப். 19- முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழகத்துக்கு மேலும் 56 இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாநிலத்துக்கு இதுவரை கூடு தலாக 112 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மேலும் சில இடங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று மருத்துவக் கல்வி வட்டாரங்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் தற்போ தைய நிலவரப்படி 1250 முது நிலை மருத்துவப் படிப்புக....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:48:03

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வர வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு  கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வர வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, பிப்.19  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தற்காலிகமானது என்றும், அதிமுக அரசு  இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்ப தாவது: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு டெக்னிக்கலாக இருக்கிறது. தேசிய பசுமை பசுமை தீர்ப்பாயத்துக்கு ஜூடிஜியல் ரிவியூ என்ற அடிப்படையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை........ மேலும்

19 பிப்ரவரி 2019 15:11:03

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சத்தில் நுண்கருவி பிரிவு மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த…

ஆலந்தூர், பிப்.19 சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கணினி மயமாக்கப்பட்ட நுண்கருவி பிரிவு மற்றும் புதிய கட்டிடம், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் அவர்கள்  கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுவனுக்கு, மருத்துவர் முன்னிலையில் நுண்கருவி மூலம்  பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் ....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:09:03

தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி, பிப்.19 -நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளை செழிப் பாக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாமிரபரணி-கருமேனியாறு - -நம்பியாறு இணைப்பு திட்டம் தொடர்ந்து இழுத்தடி க்கப்பட்டு ஆமை வேகத்தில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கோரையாறு, பச் சையாறு, கருமேனியாறு, எலுமிச் சையாறு மற்றும் நம்பியாறு ஆகிய 6 நதிகளை இணைப்பது உள்ளிட்டதிட்டங்கள் போடப் பட்டன. இத்திட்டங்களில் முதலாவது திட்டமாக தமிழகத் தில் செயலாக்கம்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:09:03

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

சென்னை, பிப்.19  பொது சொத்துகளுக்கு சேதம் ஏற் படுத்திய விவகாரத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டியின் தண்ட னையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள் ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பால கிருஷ்ண ரெட்டி. இவர் கடந்த 1998இல் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:06:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 12- நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியின் நிர் வாக அலங்கோலங்கள் குறித்து 2016--2017ஆ-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக் கையில் வெளிவந்துள்ள தக வல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங் கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேர திர்ச்சியாக இருக்கிறது. நிலக் கரி இறக்குமதியில் நடைபெற் றுள்ள முறைகேடுகள் ஆதார பூர்வமாக இன்றைக்கு முச்சந் திக்கு வந்து நிற்கிறது. குறிப் பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத் திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

மாநில போக்குவரத்து கழ கத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாம தத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக் கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜா னாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016--2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென் னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடை மைகளையும் பேரிடருக்குள் ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக் களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உல கிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி. அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner