முன்பு அடுத்து Page:

காவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

சென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:25:04

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? மத்திய தொல்லியல் து…

மதுரை, பிப்.16 ஆதிச்சநல்லூர் அகழ் வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என  மத்திய தொல்லியல் துறைக்கு கண் டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூ ரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல் லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத் துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்,  தூத்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:12:04

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மதுரையில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வெள்ளி விழா மற்றும் 11ஆவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழர்தலைவருக்கு இச்சங்கத்தின் நிர்வாகிகள்  பயனாடை அணிவித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். நிர்வாகிகள்: கோ. கருணாநிதி & தலைவர், டி. ரவிக்குமார் -& அகில இந்திய பொதுச் செயலாளர், எஸ். நடராசன் & பொதுச் செயலாளர், ஆலோசகர்கள்: எஸ். சேகரன், ஜி.மலர்க்கொடி, கே. சந்திரன் ஆகியோர் உள்ளனர்........ மேலும்

16 பிப்ரவரி 2019 16:05:04

போக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி

சென்னை, பிப்.16 தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது.  அதன்படி பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற செல்லிடப்பேசியை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.   மேலும்

16 பிப்ரவரி 2019 16:04:04

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

சென்னை, பிப்.16 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:03:04

பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலி…

சென்னை, பிப்.16 மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் உருவாக பத்தாம் வகுப்புவரை தாய்மொழி யில் அறிவியல் பாடங்களைப் படிப்பது அவசியம் என, அண் ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 20 - 22 தேதிகளில் நடத்த உள்ளன. இதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத் தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:01:04

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் தகவல்

சென்னை, பிப்.16 மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ள தாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத் தில் உள்ள தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:59:03

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

சென்னை, பிப்.16 பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக இமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:57:03

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட…

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பள்ளப்பட்டி, பிப்.16 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக் கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி இந்த....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:46:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, பிப்.16 நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வரு வதையொட்டி விடுபட்டவர் களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ கத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:21:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவர் எம்.நாகநாதன்

சென்னை, ஜூலை 8  கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக திட்டக் கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் எம்.நாகநாதன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மாணவர்- -பெற்றோர் நலச் சங்கம் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தும் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகநாதன் பேசியதாவது: இந்திய உயர் கல்வி ஆணையத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி விடுவிக்கும் அதிகாரம் இந்த ஆணையத்திடம் அல்லாமல், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரவுள்ளது.

இதனால், தமிழகம்தான் அதிகம் பாதிக்கப்படும். ஏனெனில், தமிழகத்தில்தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிக உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்போதே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர் களுக்கான கல்வி உதவித் தொகைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ஆணையம் நடைமுறைக்கு வந்தால், தமிழக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுவதுமாகக் கிடைக்காது. மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கேற்ப, உயர் கல்விக்கான நிதியை உயர்த்த வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மறையாக நிதி குறைக்கப்பட்டு வருகிறது. எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்: உச்ச நீதிமன்றம் 1993-இல் டி.எம்.ஏ. பாய் வழக்கில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், தனியார் கல்வி நிறுவனம் என்பது சேவைத் துறையின் கீழ் வராது. எனவே, இந்தியாவைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், தனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்கலாம். அதற்கு எந்தவித தடையுமில்லை எனத் தீர்ப்பளித்தது. இதன் காரணமாகவே, தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு முன்பாக 40 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்த ஒரு சில கல்லூரிகளில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற பின்னர் மாணவர் தேர்ச்சி விகிதம் 100 சதவீதத்தை எட்டியிருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றத்தின் 1993 தீர்ப்பு ரத்து செய்யப்படவேண்டும். உயர் கல்வி மேம்பாட்டுக்கு யுஜிசி பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஆணையம் கொண்டுவருவது தேவையற்றது.

கல்வியாளர் வசந்திதேவி: இதுவரை கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் யுஜிசி, இனி இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற பெயரில் மத்திய அரசு அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட உள்ளது. இந்த ஆணையத்துக்கு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமை வகிக்க உள்ளார். உறுப்பினர்களாக அதிகாரிகள் இடம்பெற உள்ளனர். இந்த ஆலோசனைக் குழுதான் அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கும். இதன் மூலம், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நிதி, அரசியல்மயமாக்கப்பட உள்ளது.

அதாவது, மத்திய அரசின் எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் ஒத்துப் போகின்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். மாற்றுக் கருத்துத் தெரிவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மறுக்கப்படும். சமூக நீதி மறுக்கப்பட்டு, உயர் கல்வி வர்த்தக ரீதியாக மாற்றும் முயற்சியே இது. எனவே, மத்திய அரசின் இந்த முயற்சி முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: கூட்டாட்சித் தத்துவம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாற்ற இயலாத அடிப்படை அம்சம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே மாற்ற முற்படுகிறது. இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-க்கு எதிரானது. பல்கலைக்கழகங்களை உருவாக்கவும், ஒழுங்கு படுத்தவும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ள போது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களைக் கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் சட்டத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். அத்துடன் யுஜிசியைக் கலைக்கும் முயற்சியையும் கைவிடவேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner