முன்பு அடுத்து Page:

காவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

சென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:25:04

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? மத்திய தொல்லியல் து…

மதுரை, பிப்.16 ஆதிச்சநல்லூர் அகழ் வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என  மத்திய தொல்லியல் துறைக்கு கண் டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூ ரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல் லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத் துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்,  தூத்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:12:04

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மதுரையில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வெள்ளி விழா மற்றும் 11ஆவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழர்தலைவருக்கு இச்சங்கத்தின் நிர்வாகிகள்  பயனாடை அணிவித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். நிர்வாகிகள்: கோ. கருணாநிதி & தலைவர், டி. ரவிக்குமார் -& அகில இந்திய பொதுச் செயலாளர், எஸ். நடராசன் & பொதுச் செயலாளர், ஆலோசகர்கள்: எஸ். சேகரன், ஜி.மலர்க்கொடி, கே. சந்திரன் ஆகியோர் உள்ளனர்........ மேலும்

16 பிப்ரவரி 2019 16:05:04

போக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி

சென்னை, பிப்.16 தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது.  அதன்படி பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற செல்லிடப்பேசியை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.   மேலும்

16 பிப்ரவரி 2019 16:04:04

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

சென்னை, பிப்.16 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:03:04

பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலி…

சென்னை, பிப்.16 மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் உருவாக பத்தாம் வகுப்புவரை தாய்மொழி யில் அறிவியல் பாடங்களைப் படிப்பது அவசியம் என, அண் ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 20 - 22 தேதிகளில் நடத்த உள்ளன. இதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத் தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:01:04

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் தகவல்

சென்னை, பிப்.16 மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ள தாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத் தில் உள்ள தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:59:03

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்

சென்னை, பிப்.16 பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக இமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:57:03

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட…

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பள்ளப்பட்டி, பிப்.16 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக் கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி இந்த....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:46:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, பிப்.16 நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வரு வதையொட்டி விடுபட்டவர் களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ கத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:21:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8  டீசல் விலை உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு லாரி புக்கிங் முகவர்கள் சம்மேளனம் வரும்

15 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

இதுதொடர்பாக, இந்தச் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ராஜவடிவேல் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வரும் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து லாரிகளின் புக்கிங் நிறுத்தப்படும். மேலும், வரும் 18ஆம் தேதி முதல் தமிழகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து லாரிகளின் புக்கிங்களும் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ஒன்றரை லட்சம் லாரிகளும், தமிழகத்தில் இயங்கக்கூடிய மூன்றரை லட்சம் லாரிகளும் பங்கேற்கின்றன. இதன் மூலம் வட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய ஜவ்வரிசி, மஞ்சள், பால் பவுடர், இரும்பு தளவாடப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், ஜவுளிப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தேக்கமடையும். இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருள்கள் தமிழகத்தில் தேக்கமடையும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.



ஆசிரியர் நியமனத்தில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை: அமைச்சர் தகவல்

 

சென்னை, ஜூலை 8- வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து வெள்ளியன்று (ஜூலை 6) அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கான பணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப் பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner