முன்பு அடுத்து Page:

கலைஞர்தம் இலட்சியங்களை எள்ளளவும் பிறழாமல் நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்!

கலைஞர்தம் இலட்சியங்களை எள்ளளவும் பிறழாமல் நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்!

பிரமிப்பூட்டும் சாதனை சரித்திரம் படைத்த தலைவர் கலைஞர்  -  பெரியார் நினைவு சமத்துவபுரம் கண்டவர்  -  சமூகநீதிகாவலர் திமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழி சென்னை, ஆக.14,  பிரமிப்பூட்டும் சாதனை நாயகரான கலைஞர்தம் புகழ் அத்தியாயங்களையும் நினைவூட்டி, அவர் விட்டுச் சென்ற இலட்சியங்களை எள்ளளவும்  பிறழாமல் செய்து முடிக்க உறுதி ஏற்போம் என்று இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (14.8.2018) காலை நடைபெற்ற....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 15:04:03

தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

   தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு  பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

  சென்னை , ஆக.14 தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் இல்லை. இந்த புதிய அட்டவணை நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ. பல கோடி சேமிப்பதற்கோ சில நொடி!

டில்லியில் நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள் 1000 பேர் பங்கேற்க முடிவு சென்னை, ஆக. 13-  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வடசென்னை சிஅய்டியு அலு வலகத்தில் மாநில துணைத் தலைவர் சித்திரச்செல்வி தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டில்லியில் நாடா ளுமன்றத்தை நோக்கி நடை பெறும் தொழிலாளி-விவசாயிகள் பேரணியில் தமிழகத்திலிருந்து ஆயிரம் அங்கன்வாடி....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:30:03

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றக் கோரும் தகவல் அனுப்பும் பணி தீவிரம்

   குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றக் கோரும்  தகவல் அனுப்பும் பணி தீவிரம்

சென்னை, ஆக.13 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைப் பதிவேற்றக் கோருவது குறித்த தகவலை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, குரூப் 4 தேர்வுடன் இணைந்து முதல் முறையாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், கிராம நிர்வாக அலுவலர் பிரிவில் 494 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், இப்போது,....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:28:03

காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு  கரையோர பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மேட்டூர், ஆக. 13 கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:43:02

பெரியாரின் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய கொடியாக இருந்துவிட்டு போகிறேன்- கலைஞர்

   பெரியாரின் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய  கொடியாக இருந்துவிட்டு போகிறேன்- கலைஞர்

திருச்சி, ஆக.12 பெரியார் மருந்தியல் கல்லூரியில் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்  டாக்டர் மு. கருணாநிதி அவர்களை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் 11.08.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது இரங்கலுரையில் மறைந்த முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்கள் தமிழினத்தின் முன்னேற்றத் திற்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர்கள் என்றும் அறிவு ஆசான்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:52:02

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாள்

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாள்

    சென்னை, ஆக.12 நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள ஆயிரத்து 199 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப். 9-ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்ட அறிவிக்கை: இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர் (16 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர் (26), சார்-பதிவாளர்கள் (73), நகராட்சி ஆணை யாளர்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:51:02

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்காட்லாந்து இணையர்

     கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்காட்லாந்து இணையர்

    சென்னை, ஆக.12  திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் பலரும் மரியாதை செலுத்திவரும் வேளையில் வெளிநாட்டு இணையர் மரியாதை செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது. தமிழகத்தின் மிக மூத்த தலைவர், 74 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர், 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக நீடித்தவர், 5 முறை முதல்வராகப் பதவி வகித்தவர் கலைஞர். மூத்த பத்திரிகையாளர், நாடக, திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இலக்கியவாதி என பல துறைகளில் முத்திரை படைத்தவர். திமுக தலைவர் கலைஞர்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:51:02

கொட்டும் மழையிலும், கலைஞர் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

   கொட்டும் மழையிலும், கலைஞர்  நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

சென்னை, ஆக.12  மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் கொட்டும் மழையிலும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இடைவிடாது சனிக்கிழமை மரியாதை செலுத் தினர். சென்னை மெரினா கடற் கரையில் அமைந்துள்ள கலை ஞரின் நினைவிடம் சனிக்கிழமை அருகம்புல் மற்றும் மலர்களால் உதயசூரியன் வடிவில் அலங் கரிக்கப்பட்டிருந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு கலைஞரின் நினைவிடத்துக்கு வந்தார். நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மாநிலங்களவை....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை

   மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை

  மேட்டூர், ஆக.12 கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த தால் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதற்குப் பிறகு உபரிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. நீர்வரத்துக் குறைந்த நிலை....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 14 நாட்டில் கருத்துரிமைக்கும், மதச்சார்பின்மைக்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கவிப்பேரரசு வைரமுத்து எடுத்துக் கூறினார்.

தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத் தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :

சிறுகதை என்ற கலைவடிவத்தை அமெரிக்காவின் எட்கர் ஆலன்போ வடிவமைத்தார். பிராண்டர் மேத்யூஸ் அதன் ஓரஞ்சாரங்களை ஒழுங்கு செய்தார். அந்த அமெரிக்க  அய்ரோப்பிய இலக்கிய வடிவத்தை அழகு செய்து தமிழுக்குப் பெரிதும் கொண்டு வந்தவர் புதுமைப் பித்தன். தமிழர்க்குப் பெரிதும் கொண்டு சேர்த்தவர் ஜெயகாந்தன்.

மத்திய தர வர்க்கத்தின் மொழி அலங்காரமாய் இருந்த சிறுகதையை அடித் தட்டு மக்களின் வேர்வை  இரத்தம்  கண் ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த சமூகம் அவரது எழுத்தையும் சுகித்துக்கொண்டது; அவரையும் சகித்துக் கொண்டது. மனித குலத்தின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முரண்பட்ட மரபுகளையும் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் தர்மங்களையும் உடைத்தெறிவதற்கான உக்கிரத்தை அவர் எழுத்து கொண்டிருந்தது. அந்தக் கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமை களைக் காலம் அவருக்குத் தந்தி ருந்தது. இந்தியச் சமூகத்தில் இப்போது அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்பதை சர்வதேச சமூகம், தன் கண்களை நெற்றிக்கு உயர்த்தி கவனித்துக்கொண்டிருக்கிறது.

போராட்டமே வாழ்க்கை

பேச்சு  எழுத்து  செயல் என்ற போ ராட்ட வடிவங்களால்தான் இந்தச் சமூகம் சமநிலை பெறுகிறது. ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை? இல்லை போராட்டமே வாழ்க்கை என்று மனிதன் படத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சதுரமான முட்டைபோடும் பறவை ஏதும் இல்லை. சமநிலையை அடைந்துவிட்ட சமூகம் ஏதுமில்லை. அந்தச் சமநிலையை அடை வதற்கான போராட்டம்தான் மனிதர்களின் வற்றாத வரலாறு. கருத்துரிமை வெல்லப் படுவதும், கருத்துரிமை கோருகிறவன் கொல்லப்படுவதும் நல்ல சமூகத்தின் அடையாளங்கள் அல்ல.

கருத்துரிமைப் போராளிகளான பன் சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டிருப் பதும், மலையாள எழுத்தாளர் பஷீர் தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன் போன் றோர் ஒடுக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. சமய நம்பிக்கை, பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான மக்கள் போராட் டம் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் இயற்றவே முடியாது என்பதுதான் அமெரிக்காவின் அரசமைப்பு. குடிசார் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத் துலக உடன்படிக்கையும் இதையே உறு திப்படுத்துகிறது. முற்போக்கு இல்லாத தேசத்திற்கு முன்னங்கால்கள் இல்லை.

பூமி உருண்டை - - தன்னைத்தானே சுற்று வருகிறது என்பதை கண்டறிந்தவர் கலிலியோ. ஆனால் அந்த உண்மையைச் சொல்லும் கருத்துரிமை மறுக்கப்பட்ட கலீலியோ, இறக்கும்வரை வீட்டுச் சிறை யில் இருக்குமாறு தண்டிக்கப் பட்டார். ஆனால் மறுக்கப்பட்ட அந்தக் கருத்து வெளிப்பட்ட பிறகுதான் மனித குலம் வானத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

சகிப்புத்தன்மை?

இன்று சகிப்புத்தன்மை குறைந்திருப் பதை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் கட்டுகிறது.

பெரியார் இன்றிருந்தால் எத் தனைமுறை சுடப்பட்டிருப்பார்? ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும்? ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக் கொண்டிருக்கும்?ஜெயகாந்தன் இன்றிருந் தால் எத்தனை முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்? பன்முகத் தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்துச் சுதந்திரம் தான் அதன் பெருமை. அரசியலை படைப்புகள் தடுக்கலாம்; ஆனால் படைப்புகளை அரசியல் தடுக்கக் கூடாது.

ஜெயகாந்தன், இலக்கியம் - சமூகம் இரண்டையும் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிப் படைப்பாளி. செவ்வாய்க் கிழமையைத் தாண்டாமல் புதன்கிழமை இல்லை. ஜெயகாந்தனைத் தாண்டாமல் சிறுகதைகள் இல்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner