முன்பு அடுத்து Page:

புதுக்கோட்டை அருகே ஆதி திராவிடர் காலனியாக இருந்த தெருவிற்கு தந்தை பெரியார் நகர் என்று உடனடியாக பெயர…

புதுக்கோட்டை அருகே ஆதி திராவிடர் காலனியாக இருந்த தெருவிற்கு  தந்தை பெரியார் நகர் என்று உடனடியாக பெயர் மாற்றம்

புதுக்கோட்டை, ஜன. 21 புதுக் கோட்டை மாவட்டம் வல்லத் திரா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வாண்டாகோட்டையில் தங்களது குடியிருப்புப் பகுதிக்கு உள்ள பெயர் இழிவாக அழைக் கப்படுவதால் அதற்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திமுக கிராம சபைக்கூட்டம் ஏற்று உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகு தியில் திருவரங்குளம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட வல்லத்திரா கோட்டை ஊராட்சிக்கு உட் பட்டது வாண்டாகோட்டை....... மேலும்

21 ஜனவரி 2019 17:17:05

சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக மதச் சார்பற்ற அடையாளத்தைக் காத்திட அணிதிரள்வோம்! சென்னை, ஜன. 21- “மதச்சார்பற்ற அடையாளத்தைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற பெரியார் வழியில் திரள வேண்டும்“ என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம் டிசம்பர் 24 - ஆம் தேதி சைதாப்பேட்டையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தது. இதில் திராவிடர்....... மேலும்

21 ஜனவரி 2019 17:07:05

எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை கூறுகிறார் தம்பிதுரை

எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை கூறுகிறார் தம்பிதுரை

சென்னை, ஜன. 21- கும்பகோணம் அருகே திருவிடைமருதூருக்கு வந்த அவர் ஞாயி றன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பாஜகவுக்கும் அதிமுகவுக் கும் கூட்டு இல்லை. ஆதரிப்பது என்பதற்குக் கூட் டணி இருக்க வேண்டும். மத்திய அரசுக் கும், மாநில அரசுக்கும் நட்பு இருக்கிறது. நட்பு என்பது வேறு. அரசியல் உடன்பாடு என்பது வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக கிடையாது. அதற்கான கேள்வி எழாத நிலையில், அதைப் பற்றி எதற்காகப் பேச வேண்டும்.  நான்....... மேலும்

21 ஜனவரி 2019 16:46:04

ரபேல் போர் விமானப் பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

ரபேல் போர் விமானப் பேரம் குறித்து நாடாளுமன்ற  கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை, ஜன. 21- 'ரபேல் போர் விமானப் பேரம் குறித்து  உடனடியாக நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு, பிரதமர் நரேந்திரமோடி  உத்தரவிட வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.1.2019) வெளியிட்ட  அறிக்கை வருமாறு: ஒரு தகவலையும் வெளியே விடாமல் அனைத்து விபரங்களையும் பரம ரகசிய மாக வைத்துக் கொண்டு கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதிலே சொல்லாமல்  “ரபேல் விமான....... மேலும்

21 ஜனவரி 2019 16:32:04

தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் 44ஆம் தேசிய சப் ஜூனியர் கபடிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் தமிழ்நாட்டு விளையாட்டு வீராங்கனையர் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் டாக்டர் எம். கோவிந்தராஜ் மற்றும் குழு மேலாளர் தேக்கம்பட்டி பி. சிவகுமார் உடன் வந்திருந்தனர். தேசிய கபடிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் வீராங்கனைகளின் விவரம்: தர்மபுரியிலிருந்து ஜி. நந்தகுமாரி, ஜி.நந்தினி, ஆர்........ மேலும்

21 ஜனவரி 2019 16:29:04

பொது கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம்!

இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியலுக்குப் புறம்பான ஆதாரமற்ற புராணக்கதையை பா.ஜ.க. பேராசிரியர்கள் பேசி வருவதா? சென்னை ஜன, 21- இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியலுக்குப் புறம்பான, ஆதாரமற்ற புராணக்கதைகளை பா.ஜ.க. பேராசிரியர்கள் தொடர்ந்து பேசி வருவது ஏன் என்று பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கேள்விகேட்டு கடும் கண் டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து பொதுக் கல் விக்கான ஒருங்கிணைப்புக் குழு (சென்னை)வினர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:- இந்திய அறிவியல்....... மேலும்

21 ஜனவரி 2019 16:14:04

தமிழகம் முழுவதும் 4,603 நூலகங்களில் புதிய புத்தகங்கள் வாங்காமல் முடக்கம் போட்டித் தேர்வுகளில் பங்க…

தமிழகம் முழுவதும் 4,603 நூலகங்களில்  புதிய புத்தகங்கள் வாங்காமல் முடக்கம்  போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு சிக்கல்

வேலூர், ஜன. 21- தமிழகம் முழுவதும் 4,603 நூலகங்களில் புதிய புத்தகங்கள் வாங்காமல் முடக்கப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 603 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்து 753 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2 ஆயிரத்து 516 நூலகங்கள் வாடகையில்லா கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. 320 நூலகங்கள் வாடகைக் கட்டடங்களிலும், அதோடு 14 நடமாடும்....... மேலும்

21 ஜனவரி 2019 16:11:04

ஜாக்டோ ஜியோ போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வுகாண வேண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டம…

சென்னை, ஜன. 21- ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட் டத்துக்கு தமிழக அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   கடந்த 1.1.2004 முதல் பழைய ஓய் வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இத னால் அரசு....... மேலும்

21 ஜனவரி 2019 15:42:03

எரிபொருள் சிக்கனம் குறித்து மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

எரிபொருள் சிக்கனம் குறித்து மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

சென்னை - மணலியில் நேற்று (20.1.2019) சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். சி.பி.சி.எல்.இன் மேலாண் இயக்குநர் எஸ்.என்.பாண்டே இதை தொடங்கி வைத்து பேரணியில்  பங்கேற்றார். மேலும்

21 ஜனவரி 2019 15:41:03

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 9 விசைப்படகுகள் ராமேசுவரம் வந்தன

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட  9 விசைப்படகுகள் ராமேசுவரம் வந்தன

ராமேசுவரம், ஜன. 21- இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 9 விசைப்படகுகள் நேற்று மாலை ராமேசுவரம் வந்த டைந்தன. இலங்கை கடற் படையால் 2016 முதல் 2018 வரை கைப்பற்றப்பட்ட, தமி ழக மீனவர்களின் 167 விசைப் படகுகள் கடந்தாண்டு விடு விக்கப்பட்டன. இலங்கை காங்கேசன்துறை, கிராஞ்சி,  தலைமன்னார், ஊர்க்காவல்துறை கடற்படை முகாம் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இப் படகுகளில் 47 படகுகள் மட் டுமே நல்ல நிலையில் உள் ளன. மற்ற....... மேலும்

21 ஜனவரி 2019 15:40:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 14 “பெண் பத்திரிகை யாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீனை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த பிறகும் தலை மைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரைக் கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன்? என்று தி.மு. கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பினார்.

நேற்று (13-.06-.2018) தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊடகங்களில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் களை தரக்குறைவாக பேசிய திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய இன்னும் அரசு தயங்கிக் கொண்டிருப்பது ஏன் என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தலைமைச் செயலாளரின் உறவினர் என்ற ஒரே காரணத்தால் தமிழக அரசு அவரை சுதந்திரமாக நடமாட வைத்திருப்பது பற்றியும் பேச முற்பட்டபோது, சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் அவையிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தார்.

பேட்டி

பின்னர், சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே  தி.மு. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் பின் வருமாறு:

மு.க.ஸ்டாலின்: முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் திரைப்பட நடிகர் எஸ்.வி. சேகர் அவர்கள் பத்திரிகைத் துறையிலே பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய பெண் ஊழியர்களை, தரக்குறைவாக, தரங்கெட்ட வகையிலே சில விமர்சனங்களை செய்து, அதை முகநூலில் அவருடைய பெயரி லேயே பதிவு செய்திருக்கிறார். எனவே, இதுகுறித்து பத்திரிகை யாளர்கள் எல்லாம் மாநகர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து கடந்த ஏப்ரல் 2ஆ-ம் தேதி அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் புகாரின் அடிப்படையிலே வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சியிலே காவல் துறை ஈடுபட்டது. ஆனால், அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் அவர்கள் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்தார்.

சுதந்திரமாக வெளியில்

நடமாட விட்டது எப்படி?

ஆனால், முன் ஜாமீன் வழங்க முடியாது என்று அவருடைய மனுவை உயர்நீதிமன்றமே தள்ளுபடி செய்திருக் கிறது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் அவருடைய உறவினராக இருக்கக்கூடிய எஸ்.வி. சேகர் அவர்களை கைது செய்வதற்கு இந்த அரசு தயங்கி சுதந்திரமாக அவரை வெளியிலே நடமாட விட்டிருக்கிறது.

எனவே, எஸ்.வி. சேகர் அவர்கள் எல்லா நிகழ்சி களிலும் கலந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார், குறிப்பாக மத்திய அமைச்சர் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு முன்பு, அண்ணா நகரிலே இருக்கக்கூடிய கந்தசாமி நாயுடு கல்லூரியிலே கடந்த 10ஆம் தேதி, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் நடந்திருக்கிறது. அந்த தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில் அங்கே சென்று, அவர் நடிகர் என்ற அந்த  முறையிலே  வாக்களித்திருக்கிறார்.

அங்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் இருந்திருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சுதந்திரமாக போலீஸ் பாதுகாப்போடு வந்து, வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால், தலைமைச் செயலாளருடைய உறவினராக இருக்கக் கூடிய எஸ்.வி. சேகரை இதுவரையில் கைது செய்யாமல் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் நாங்கள் இன்றைக்கு எழுப்பிய நேரத்தில் இதை பேசுவதற்கு சபாநாயகர் எங்களுக்கு அனுமதி தரவில்லை. தொடர்ந்து நான் முயற்சித்து பார்த்தேன், போராடி பார்த்தேன் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார். எனவே, இதனைக் கண்டிக்கின்ற வகையில் குறிப்பாக தலை மைச் செயலாளருடைய உறவினராக இருக்கின்ற எஸ்.வி.  சேகரை பற்றி இந்த அவையில் எதுவும் பேசக்கூடாது என்ற அந்த நிலையிலே அவர் எங்களுக்கு பேச அனுமதி மறுத்துவிட்டார். எனவே, இதை கண்டிக்கக்கூடிய வகையிலே நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner