முன்பு அடுத்து Page:

பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை, அக்.21 சென்னை மாநகர மக்களின் தாகம் தணிக் கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி திகழ்ந்து வருகிறது. அதனால் இந்த ஏரியில் இருந்து இணைப் புக் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகும். தற்போதைய நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் ....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

சென்னை, அக்.21 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் அளிக்கப்பட உள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு பயிற்சிகள் வாரந்தோறும் இரண்டு நாள்கள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டை பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில்... மத்திய மனிதவள....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க துணைக்குழு

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க துணைக்குழு

சென்னை, அக்.21 முல் லைப்பெரியாறு அணையைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட துணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அண்மையில் கனமழை வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து முல் லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்சநீதி மன்றத்தை அணு கியது.  அப்போது முல்லைப்....... மேலும்

21 அக்டோபர் 2018 15:00:03

மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை, அக்.21 மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதி களுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர்த லில் காங்கிரசு, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முசு லிம் லீக் உள்ளிட்ட கட்சி களுடன்இணைந்து போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகு....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது

ஆண்டிபட்டி,  அக்.21   ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய அய்ந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத் துக்கும் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நிரம்பியது. அதைத்தொடர்ந்து, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 55 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: ஆர்.நல்லகண்ணு குற்றச்சாட்டு

மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: ஆர்.நல்லகண்ணு குற்றச்சாட்டு

திருத்துறைப்பூண்டி, அக்.21  சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா ஆர்.நல்லகண்ணு குற்றம் சாட்டினார். திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் செய்தியாளாகளிடம் கூறுகையில், கேரளத் தில் மாநில அரசுக்கு எதிராக சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது. எனவே, சபரிமலை கோயிலுக்கு செல்பவர்களை தடுக்கக் கூடாது, அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் மீது,....... மேலும்

21 அக்டோபர் 2018 14:27:02

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மய்யத்தை தொடங்கி வைத்தார்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மய்யத்தை தொடங்கி வைத்தார்

சென்னை, அக். 21-- கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மருத்துவ முகாம்கள், அங்கன் வாடி மய்யம்  ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுக தலைவரும், கொளத் தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், நேற்று (அக். 20) காலை தனது தொகுதியில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, பெர வள்ளூர் ஜிகேஎம் காலனி 25ஆவது தெரு, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் மருத்துவ....... மேலும்

21 அக்டோபர் 2018 13:49:01

பெண்களை சாட்டையால் அடித்து "பேய்" விரட்டும் காட்டுமிராண்டித்தனம்

பெண்களை சாட்டையால் அடித்து

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் காட்டுமிராண்டித் தன நிகழ்ச்சி. அரசு இதை தடுத்து நிறுத்துமா? தசரா கொண்டாட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல் பாட்னா, அக். 21- பீகாரில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம் பெண்கள் மீது, பிளேடு உள்ளிட்ட கூரான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய அடையாள தெரியாத நபர்களை,....... மேலும்

21 அக்டோபர் 2018 13:35:01

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமுகப் பணித்துறை மாணவர்கள் நடத்திய ‘மா…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  சமுகப் பணித்துறை மாணவர்கள் நடத்திய  ‘மாற்றம் தம் கையில்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காடுவெளி, அக்.20 பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவன சமூகப்பணித்துறை மற்றும் நிலா மனநல மறுவாழ்வு மய்யம் இணைந்து நடத்திய மாற்றம் நம் கையில் எனும் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திருவையாறு அடுத்து காடுவெளியில் உள்ள சிறீ வெங்கடேஷ்வரா ஆதரவற் றோர் இல்லத்தில் நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறீவெங் கடேஷ்வரா ஆதரவற்றோர் இல்லத்தின் குழந்தைகள் நல அலுவலர் இ.அம்சலட்சுமி  அறிமுக உரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருவை யாறு....... மேலும்

20 அக்டோபர் 2018 15:34:03

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள்: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள்:  அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை, அக்.20 குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப் பிடிப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, புதுச்சேரி யைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு விவரம்: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எனது கணவர் ரமேஷ், காலாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் சட்ட நடவடிக்கைகளை முறை யாக பின்பற்றாமல், எனது கணவர் மீது இந்தச் சட்டத்தின்கீழ்....... மேலும்

20 அக்டோபர் 2018 15:24:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 12- பணியின் போது உயிரிழந்த துப்புரவு தொழிலாளிகளுக்கு இழப்பீட் டுத் தொகையுடன், 8 விழுக் காடு வட்டியை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமி ழக அரசுக்கு உத்தரவு பிறப்பித் துள்ளது. ‘சேஞ்ச் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் சார் பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அவ்வாறு உத் தரவு பிறப்பித்துள்ளது.

துப்புரவுத் தொழிலில் ஈடு பட்ட தொழிலாளர்கள்  பணியின்போது உயிரிழந்தார்கள். அத்தொழிலாளர்களின் வாரிசு களுக்கு இழப்பீட்டுத் தொகை யாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும் என்று 2014ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் நாள் அன்று உத்தரவானது.

ஆனால், இதுவரை அத் தொகை துப்புரவுத் தொழிலா ளர்களின் வாரிசுகளுக்கு வழங் கப்படவில்லை. இதுகுறித்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி பதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அளித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது:

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இழப்பீட்டுத் தொகைக்குரிய வட்டி வழங்கப் படவில்லை. ஆகவே, மனுதா ரர் கோரிக்கையான, துப்புரவு தொழிலாளர்களின் வாரிசுக ளுக்கு இழப்பீட்டுத் தொகைக் குரிய வட்டித் தொகையையும் அத்தொழிலாளர் இறந்த நாளி லிருந்து கணக்கிட்டு  வழங்கப் பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத் தரவில் குறிப்பிட்டார்கள்.

உயிரிழந்த துப்புரவு தொழி லாளர்களின் வாரிசுகளைக் கண்டறிந்து இழப்பீட்டுத் தொகையை வழங்குவது என்ப தில் ஆறு மாத காலம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. உச்ச நீதிமன்றம் 27.3.2014 அன்று அளித்த உத்தரவில் 1.10.2014 நாளில் இருந்து இழப்பீட்டுத் தொகைக்குரிய வட்டி கணக் கிடப்பட்டு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

மனுதாரரின் கோரிக்கையின்படி, சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் எனும் அமைப்பு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 1993ஆம் ஆண்டில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தார் கள். அத்தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இழப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்தினை ஒரே நேரத் தில் அளிக்காமல், பல வழக்கு களில் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக அளிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அக்குடும்பத் தினர் இழப்பீட்டுத்தொகையின் முழுமையான பயனை அடைய முடியாமல் இருந்துள்ளனர்.

தொழிலாளர்கள் உயிரிழந்த 30 நாள்களிலிருந்து இழப்பீட்டுக் குரிய தொகை  வட்டியுடன் அளிக்கப்பட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner