முன்பு அடுத்து Page:

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில்,  நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

சென்னை, ஜூன் 21 தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி கவிக்கோ மன்றத்தில் நேற்று (ஜூன் 20) நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க சார்பில்  டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்  கலி.பூங்குன்றன்,  தமிழ்நாடு காங்கிரசு சார்பில் பீட்டர் அல்போன்ஸ்,  தாமோதரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்குரைஞர் பாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு  சான்றிதழ் சரிபார்ப்பு

    சென்னை, ஜூன் 21 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு இயக்கூர்தி  பேணுதல் துறையில் தானியங்கி பொறியாளர், காவல் போக்குவரத்து பட்டறை மற்றும் பயிற்சிப் பள்ளி ஆவடி மற்றும் மண்டல காவல் போக்குவரத்து பட்டறை, திருச்சிராப்பள்ளியில் தானியங்கி பொறியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 109 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து  350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

    தூத்துக்குடி  ஜூன் 21  தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட் டுள்ளது. மக்களின் போராட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு கடந்த மாதம் 28 -ஆம் தேதி தமிழக அரசு அர சாணை வெளியிட்டது. இதையடுத்து, அன்றைய தினமே ஆலைக்கு சீல் வைக் கப்பட்டது. ஆலை முழுவதுமாக செயல் படாத நிலையில், ஆலையில் உள்ள கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

தூத்துக்குடி போராட்டம்: 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

  தூத்துக்குடி போராட்டம்:  65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

    மதுரை, ஜூன் 21  தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட் டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 65 பேர் கைது: இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட் டம் புதுக்கோட்டை காவல் நிலைய....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம் தொடக்கம்

   அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம் தொடக்கம்

சென்னை, ஜூன் 21   போட்டித் தேர்வுகள், தமிழ் ஆர்வலர்களுக்கான சிறப்பு நூலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஅய் வளாகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. இந்தச் சிறப்பு நூலகத்தில் பொருளா தாரம், வரலாறு, அறிவியல், மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் டிபிஅய் வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டடத்தின் தரைதளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நூலகம் தினமும் காலை....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 2532 இடங்களுக்கு 44 ஆயிரம் விண்ணப்பங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  2532 இடங்களுக்கு 44 ஆயிரம் விண்ணப்பங்கள்

ஜூலை 1ஆம் தேதி கலந்தாய்வுசென்னை, ஜூன் 21  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43,925 விண்ணப்பங்கள் சமர்ப்பிக் கப்பட்டது. வரும் ஜூலை 1ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டின்கீழ் 2,447 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த கல் லூரிகளுக்கான மருத்துவ மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக்கல்லூரி களிலும்....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 21- தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் எட்டு வழி பசு மைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படு வதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் போரா டும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

தூத்துக்குடியில் காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை, ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக் கூட்டம் நடத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனு மதி மறுத்ததை எதிர்த்து நீதி மன்றம் சென்று  அனுமதி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு, உயர் நீதிமன்றம் விதித்த நிபந்த னைகளை மீறி  பொதுக்கூட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்த மாவட்டச் செயலா....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

திண்டுக்கல், ஜூன் 21- நள்ளிரவில் துவங்கி அதிகாலை வரை நடக்கும் கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கோரியுள்ளார். பள்ளிக்கல்வி துறையில் கலந்தாய்வில் ஆசிரியர்களை நள்ளிரவு வரை காக்க வைத்து அலைக்கழிக்கும் போக்கை கண்டிக்கிறோம். 19ஆம் தேதி காலை 9:00 மணிக்கு கலந் தாய்வு நடைபெறும் என பட் டதாரி ஆசிரியர்களை வரவ ழைத்து இரவு 11:00 மணிக்கு துவங்கியது. இரவு 12:30....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

சென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு

   சென்னை ரயில்வே கோட்ட வருவாய் கடந்த ஆண்டை விட 12.82 சதவீதம் உயர்வு

சென்னை, ஜூன் 20 சென்னை ரயில்வே கோட்டத்துக்கு நிகழாண்டு மே மாதத்தில் மட்டும் ரூ.289.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாத வருவாயை விட 12.82 சதவீதம் உயர்வாகும். மே மாதத்தில் மட்டும் ரூ.166.88 கோடி பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்துள்ளது. மே மாதத்தில் 4.32 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள் ளனர். இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பயணம் செய்த பயணிகளை விட 2.13....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 10  மத்திய அரசு டீசல் விலையை நாள் தோறும் உயர்த்தி வருவதற்கும், சுங்கக் கட்டணத்தை உயர்த்தியி ருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 18-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படப் போவதாக லாரி உரிமையா ளர்கள் சம்மேளனம் தெரிவித்தது.

இதுகுறித்து அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மே ளனப் பொதுச் செயலர் ரஜிந்தர் சிங் சென்னையில் செய்தியா ளர்களிடம்  கூறியது:

மத்திய அரசு ஒரே நேரத்தில் டீசல் விலை, சாலைப் பயன் பாட்டுக்கான சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை என அனைத்தையும் உயர்த்தியுள்ளது. இதனால் எங் களால் லாரி தொழிலை செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகள் தொடர் பாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், தொடர்புடைய அதிகாரிகளிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித சுமுக தீர்வும் எட்டப்படவில்லை.

இதனால், கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு மத்திய அரசிடம் தாக்கீது அளிக்கப் பட்டது. அப்போது அதிகாரிகள் தரப்பில் சிறிது கால அவகாசம் கேட்டுக்கொண்டனர். அதை யடுத்து வேலைநிறுத்த முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.

ஆனால் இதுவரை மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இல்லை. இது தொடர் பாக 2 முறை நினைவூட்டல் கடிதமும், கோரிக்கைகள் தொடர் பான கடிதமும் கொடுக்கப் பட்டும், மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வர வில்லை. இதையடுத்து வேறு வழியின்றி, நாடு முழுவதும் ஒரே சீரான விலையை டீசலுக்கு நிர்ணயம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 7.5 லட்சம் லாரிகளின் உரிமையாளர்கள் ஜூன் 18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார் ரஜிந்தர் சிங்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner