முன்பு அடுத்து Page:

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை, செப். 26 தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளி லும் எல்.கே.ஜி. முதல் இரண் டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇ ஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி, சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3 -ஆம் வகுப்பு வரை 8 பாடங்களைப்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

சுங்கக் கட்டண விவரத்தை மின்னணு திரையில் பட்டியலிட கோரிக்கை

சென்னை,  செப். 26- சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்த விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு திரையில் பட்டியலிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992 -ஆம் ஆண்டு....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுற…

மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, செப். 26- மாதாந்திர பேருந்து பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (25.9.2018) வெளியிட்ட அறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திரப் பேருந்து பயண அட்டைக் கான கட்டணத்தை ரூ.1000-இலிருந்து ரூ.1300-ஆக உயர்த்த அதிமுக அரசு ஆலோசித்து வருவது கண்டனத்துக் குரியது. சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பயணத்துக்கு மிகவும் பயனுள்ள....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் திட்டம் எவ்வளவு காலஅவகாசம் தேவை?

தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் திட்டம் எவ்வளவு காலஅவகாசம் தேவை?

விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,  செப். 26- தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து, தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக் குமாறு, அரசு வழக்குரைஞ ருக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்சியைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த 5 ஆண்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

தமிழக முதல்வரின் தனி கவனத்துக்கு

எச். ராஜா என்ற பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, வாய்க்கொழுப்புடனும், வக்கணையுடனும் பேசி, காவல்துறையையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில், 'கொச்சை - பச்சை அர்ச்சனை' செய்தவர்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரைத் தேட மூன்று போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் அவர் அதே போலீஸ் பாதுகாப்போடு, ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்திப்பதும், அரசியல் ஆலாபனை - ஆலோசனை நடத்துவதும்,....... மேலும்

26 செப்டம்பர் 2018 15:07:03

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

திருச்சி ஆத்மா மருத்துவமனை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி 23.09.2018 அன்று நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மொத்தம் 52 பேர் கலந்துகொண்டு மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இம்மாரத்தான் போட்டியில் திருச்சியிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலிருந்து  6500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். இம்மாரத் தான் போட்டி நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள....... மேலும்

25 செப்டம்பர் 2018 16:42:04

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

தூத்துக்குடி மாணவி சோபியா  மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

திருநெல்வேலி, செப். 25- -நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட் கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடாஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த செப். 3ஆம் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் பாஜகவுக்கு எதிராக சோபியா....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:13:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

சென்னை,  செப். 25- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதம் முழுவதும் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம் பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:04:03

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

சென்னை, செப்.25 தந்தை பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஆகியோர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவை வருமாறு: வைகோ தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத் துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல்,....... மேலும்

25 செப்டம்பர் 2018 14:43:02

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நாகர்கோவில், செப்.24கன்னியா குமரி மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தைபெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று  அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்க தலைவர் எழுத்தாளர்  பொன்னீலன்  அவர்கள்  விழா சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத் தரங்கம்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:05:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 10 பத்தாம் வகுப்பில் குறைவான மதிப் பெண் பெற்றுள்ள காரணத்தை சுட்டிக் காட்டி பிளஸ் 1 வகுப் புக்கு அதே பள்ளியில் சேர்க்கை வழங்க மறுக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக் கிழமை பிறப்பித்துள்ள உத்தர வில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பில் குறைவான மதிப் பெண் பெற்றுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டி பிளஸ் 1 வகுப் புக்கு அதே பள்ளியில் சேர்க்கை வழங்க தனியார் பள்ளிகள் மறுக்கக் கூடாது. அதே வேளை யில் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர் களுக்கு பிளஸ் 1 வகுப்பின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2017 - -2018-ஆம் ஆண் டில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேல் நிலை வகுப் புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகால படிப்பாக கருதப்பட வேண்டும். பிளஸ் 1 முடித்து தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பு முடிக்கப்பட வேண்டும்.

பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தால்...: ஆனால், தற் போது பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றது, சில பாடங்களில் தோல்வி அடைந்தது ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி அந்த மாணவர் களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பள்ளி மெட்ரி குலேஷன் பள்ளிகளின் நிர்வாகம் வற்புறுத்துவதாக பெற்றோர் புகார் அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற செயல்பாடுகள் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் பயில அனுமதித்து சிறப்பு பயிற்சி அளித்து அவர் களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் களையும் தோல்வி அடைந்த மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளியின்முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் பெற வற்புறுத்தக் கூடாது: பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற, தோல்வி அடைந்த மாண வர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பெற் றோரை பள்ளி நிர்வாகம் வற்பு றுத்தக் கூடாது.  இந்த சுற்றறிக் கையை அனைத்து மெட்ரிகுலே ஷன் பள்ளிகளுக்கு அனுப்பி அதன்படி செயல்படத்தக்க அறிவுரை வழங்க வேண்டும். மேலும் இந்தப் பிரச்சினை சார்ந்த புகார்கள் வந்தால் அவற்றின் மீது உடனடியாக விசாரணை மேற் கொண்டு மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப் படுகிறது என அதில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner