முன்பு அடுத்து Page:

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிம…

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின்  அறிக்கை சென்னை, மே 21 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை மத்திய பிஜேபி அரசு உடனடியாக கைவிட வில்லை என்றால் இளைஞர்களை பெரு மளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.கழகம் நடத்திடும் என அதன் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்  கூறி யுள்ளார். அதுபற்றி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: "மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர்,....... மேலும்

21 மே 2018 15:27:03

அரபிக்கடலில் புதிய புயல் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் புதிய புயல்  தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில் மே 21 அரபிக்கடலில் ஏடன் வளை குடா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு சாகர் என்று பெயரி டப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந் திய ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சாகர் புயல் இந்தி யாவுக்குள் நுழையாமல் எதிர் திசையில் சென்று ஏமன்....... மேலும்

21 மே 2018 15:27:03

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில்  பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

    சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம்....... மேலும்

20 மே 2018 16:49:04

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, மே 20- தூத்துக் குடி, உண்மை வாசகர் வட்டம் 6ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 28.4.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநகரப் ப.க. தலைவர் ப.பழனிச்சாமி அனைவரை யும் வரவேற்றார். மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மாவட் டப் ப.க. தலைவர் ச.வெங் கட்ராமன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றி னார்கள். வாசகர் வட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையுரையாற்றினார். அடுத்து....... மேலும்

20 மே 2018 16:32:04

பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பச்சைக்கொடி!

பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பச்சைக்கொடி!

கருநாடகத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்று இருப்பது தென்னகத்தில் பி.ஜே.பி.யின் மிகப்பெரிய நுழைவு என்று பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தமிழக துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். அண்ணா பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டுள்ள ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மதவாத இந்துத்துவா ஆட்சியைத் தென்னாட்டில் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றால், இந்தக் கேடுகெட்ட நிலையை என்னவென்று சொல்வது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் பி.ஜே.பி.,க்கு சிவப்புக்....... மேலும்

19 மே 2018 17:16:05

மணிப்பூர் தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு

இம்பால், மே 19 -மணிப்பூர் மாநிலம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ராம லிங்கம் சுதாகர் வெள்ளியன்று பொறுப்பேற்றார். மணிப்பூர் ஆளுநர் ஜெக்தீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலை வர்கள், நீதிமன்ற மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீதிபதி ராமலிங்கம் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்....... மேலும்

19 மே 2018 15:50:03

கிருஷ்ணகிரி அருகே பழங்கால மனிதனின் வாழ்விடக் குகை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே பழங்கால  மனிதனின் வாழ்விடக் குகை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, மே19 கிருஷ் ணகிரி அருகே பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை வரலாற்று ஆர்வலர்கள் செவ் வாய்க்கிழமை கண்டறிந்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ் ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தனது களப் பணியை கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி அருகே செவ் வாய்க்கிழமை மேற்கொண்டது. அப்போது, நக்கல்பட்டி கிரா மத்தில் உள்ள ஆயிரம் அடி உயரம் உள்ள சிறீராமன் மலையின் தெற்கு திசையில், அடிவாரத்திலிருந்து சுமார்....... மேலும்

19 மே 2018 14:51:02

தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு உதவித்தொகை இல்லையாம்! மத்திய அரசு அறிவிப்பு! 4கல்வி நிலையங்கள்…

தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு உதவித்தொகை இல்லையாம்!  மத்திய அரசு அறிவிப்பு! 4கல்வி நிலையங்கள் அதிர்ச்சி!

சென்னை, மே 18 - கல்வி நிறுவனங்களின் முறை கேடுகளைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 50 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்பட மாட்டாது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களும் கல்வி நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து "தி டைம்ஸ் ஆப்....... மேலும்

18 மே 2018 16:03:04

ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஜூலை 20 முதல் லாரிகள்  வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை, மே 18 அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மே ளனத் தலைவர் எம்.ஆர்.குமார சாமி தெரிவித்தார். டீசல் விலையை நாள் தோறும் நிர்ணயிக்கும் முறை யைக் கைவிட வேண்டும். சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத் தும் முறையைக் கொண்டு வரவேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பன....... மேலும்

18 மே 2018 15:38:03

ஜாதியற்ற சமுதாயம் உருவாக்கிட அனைவரையும் அர்ச்சகராக்குங்கள்! கேரள அமைச்சர் வேண்டுகோள்

ஜாதியற்ற சமுதாயம் உருவாக்கிட அனைவரையும் அர்ச்சகராக்குங்கள்!  கேரள அமைச்சர் வேண்டுகோள்

சென்னை, மே 18 ஜாதியற்ற சமுதாயம் உருவாக கேரள அரசைப் போன்று தலித்து களை அர்ச்சகராக்க பிற மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளா இடது முன்னணி அரசு தலித் மக்களை அர்ச்சகராக்கியது. இதனைப் பாராட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் விருதை....... மேலும்

18 மே 2018 15:38:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 15- முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பட்டினிப்  போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவ அலு வலர் சங்கத்தினர் சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் நிகழ் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில், உரிய சலுகை மதிப்பெண்ணை வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வாக அரசு மருத்துவர் களுக்கு முதுநிலைப் படிப் பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை வரும் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி, ஈட்டிய விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு எடுத்த அரசு மருத்துவர்களுக்கு முது நிலை மாணவர் சேர்க்கையில் முழு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி, தமி ழக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்க ளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner