முன்பு அடுத்து Page:

அய்பிரிட் மின்சார வாகனம் அறிமுகம்

அய்பிரிட் மின்சார வாகனம் அறிமுகம்

சென்னை, நவ.21  லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் என்எக்ஸ் 300எச்  என்ற உயர் வகை மின் சார காரை இந்திய சந்தைகளில் முதல் முதலாக அறிமுகப்படுத் தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத் தின் தலைவர்  அகிடேஷி டகி முரா கூறியதாவது:தனித்துவம், இணையில்லா செயல்திறத்தை விரும்பும் வாடிக் கையாளர்களுக்கு அய்பிரிட் தெழில்நுட்பத்தில் இயங்கும் இந்த மின்சார கார் நிச்சயம் சிறப்பாக அமையும். இந்தியாவில் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும்....... மேலும்

21 நவம்பர் 2017 16:24:04

கணினி வழி பங்கு வர்த்தகம்

கணினி வழி பங்கு வர்த்தகம்

சென்னை, நவ.21 அய்.அய்.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தின் 100% துணை நிறுவனமான 5பைசா கேபிட்டல் லிமிடெட், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ அமைப்புகளால் பட்டியலிடப் பட்ட முதல் கணினிவழி பங்கு வர்த்தக நிறுவனம் ஆகும். தேசியப் பங்குச் சந்தையில் இடம் பெறுவது குறித்த அறிவிப்பினை 5பைசா.காம் முறையாக அறிவித்துள்ளது. அய்.அய்.எஃப்.எல் பங்கு வர்த்தக நிறுவனத்தில் தற்போ தைய பங்காளர்களுக்கு இப்புதிய 5பைசா.காம்-ன் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் 25:1 என்ற விகிதத்தில்....... மேலும்

21 நவம்பர் 2017 16:21:04

மேம்படுத்தப்பட்ட அலைப்பேசி அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட அலைப்பேசி அறிமுகம்

சென்னை, நவ.21 அலைப் பேசி தயாரிப்பு நிறு வனமான ஒன் பிளஸ் (oneplus) அதன் சமீபத் திய பிரீமியம் முதன்மை சாதனம் ஒன் பிளஸ் 5டி அய் அறிவித் துள்ளது. ஒன் பிளஸ் 5டி ஆனது இந்த நிறுவனத்தின் இன்றுவரை முதன் மை சாதனமான ஒன் பிளஸ் 5 இன் சிறப்புடைய படைப்பு ஆகும். இது 18:9 காட்சி, மேம்பட்ட குறைந்த ஒளி கேமரா செயல் திறன், மற்றும் பல....... மேலும்

21 நவம்பர் 2017 15:57:03

தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை,  நவ.21 தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு இல்ல திருமண விழாவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-தமிழகத்தில் இருக்கும் குதிரைபேர ஆட்சியை கூட யாரும் அதிகமாக திட்டவில்லை. எங்களைத்தான் இப்போது அதிகமாக திட்டிக் கொண்டிருக் கிறார்கள். என்ன திட்டுகிறார்கள் என்றால், இந்த....... மேலும்

21 நவம்பர் 2017 15:39:03

டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

 டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

சென்னை, நவ. 20- வெளிமாநிலத் தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழு தும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: - தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம், டி.என்.பி. எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018ஆம் ஆண்டு பிப்ர வரி 11....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

   மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை, நவ. 20- சென்னையில் 40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதைப்பணி இம் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பாதைகள் அமைக் கப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப் பாதை மற்றும் பறக்கும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வழித்தடத்தில் புது வண்ணை....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பே…

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

  சென்னை, நவ. 20- தி.மு.க. செயல் தலை வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு: செய்தியாளர்: தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும், மீன வர்களை இந்தியில் பேசுமாறு கட்டா யப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அது இந்திய கடற் படை சுட்ட....... மேலும்

20 நவம்பர் 2017 15:49:03

பத்திரிகையாளர்களின் "போர்க்குரல்" இரா.மோகனின் படத்திறப்பு

பத்திரிகையாளர்களின்

சென்னை, நவ. 19- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மறைவுற்ற இரா.மோகனின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) பொதுச் செயலாளராகவும், தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாள ராகவும் பணியாற்றி வந்த பத் திரிகையாளர்களின் போர்க்குரல் நினைவில் வாழும் இரா.மோகன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.11.2017) மாலை 4.30 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி....... மேலும்

19 நவம்பர் 2017 15:53:03

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

மோகன் படத்திறப்பு - நினைவேந்தலில் ‘விடுதலை' ஆசிரியர் இரங்கலுரை சென்னை, நவ.19- இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை, இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.11.2017 அன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உள்ள பெர்ட்ரம் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் மறைந்த இரா.மோகன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில்  தமிழர் தலைவர் ‘விடுதலை‘ ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் இரங்கலுரையாற்றினார். அவரது உரை....... மேலும்

19 நவம்பர் 2017 15:30:03

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து மன்னார்குடியில் நடத்த…

  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து  மன்னார்குடியில் நடத்திய  +2 தேர்வு எழுதும் மாணவர்களின்

உயர் கல்விக்கான வெற்றிப் படிகள் நிகழ்ச்சி   மன்னார்குடி நவ.19 மக்கள் பல்கலைக்கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளித்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியான புதிய தலைமுறையுடன் இணைந்து +2 தேர்வு எழுதும் மாணவர்களின் உயர்கல்விக்கான  வெற்றிப்படிகள்  எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 18.11.2017 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மன்னார்குடி சந்தோஷ் மகால் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழக கனிணி....... மேலும்

19 நவம்பர் 2017 15:29:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழ்திருவிழாப்பட்டி, நவ.14 பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மய்யத்தின் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித் துறை, பெரியார் மருத்துவக்குழுமம், திருச்சி ஹர்சமித்ரா மருத்துவமனை மற்றும் மாத்தூர் சாயா தொண்டு நிறுவனம் இணைந்து பெரியார் புரா கிராமம் கீழ திருவிழாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12.11.2017 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இலவச பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

40 பேர் அடங்கிய மருத்துவக்குழு


பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக்குழுவுடன் மருத்துவ முகாமில் 40 க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவுடன் மருத்துவர்கள் சேவை வழங்கினார்கள். இந்த ஆண்டு நடைபெறும் ஏழாவது மருத்துவ முகாம் ஆகும். இந்த மருத்தவமுகாம் அனைத்து புரா கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.

நரிக்குறவ இன மக்களுக்கு...

இந்த முகாமில் குழந்தைகள், பெண் கள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 314 பேர் கலந்துகொண்டு பயனடைந் தனர். இதில் நரிக்குறவ இன மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். மற்றும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் சோத னையில் பெண்கள்  கலந்துகொண்டு பயனடைந்தனர் என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது.

சிறந்த மருத்துவ சேவை


இந்த மருத்துவக்குழுவில் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர்

மரு.ஆர்.கவுதமன், மரு.எஸ்.பிறைநுதல் செல்வி (பொருளாளர் திராவிட கழகம்), மரு.எம்.புஷ்பா- (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மருத்துவமனை வல்லம்),  மரு.வி.பஞ்சாட்சரம் (பெரியார் மருத்துவ மனை சோழங்கநல்லூர்), மரு.தியாக ஆர்த்தி (பெரியார் மருத்துவமனை திரு வெறும்பூர்) ஆர்.செந்தாமரை- (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி) மரு.எம்.ரமியா- (ஹர்சமித்ரா மருத்துவ மனை திருச்சி) ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சேவை வழங்கினர்.

மின்சாரம் தாக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை

இந்த முகாமில் மியூசி என்ற பெண்ணுக்கு மின்சாரம் தாக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் கொண்டுவந்தனர் அவருக்கு நமது மருத்துவக்குழு மிகவும் சிறப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு மாலை நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு வேண்டிய குறிப்பிட்ட மருந்து வகைகள் குறிப்பாக ஊசி மூலம் ஏற்றும் மருந்து மற்றும் டிரிப்ஸ் போன்ற அவசர தேவைப்படும் மருந்து வகைகள் மருத்துவ முகாம் மூல மாகவே விரைவாக ஏற்பாடு செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பேரா.முனைவர் த.ஜானகி அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேரா.முனைவர்.அ.ஆனந்த் ஜெரார்டுஜெபாஸ்டின், பேரா.முனைவர் எம்.அறிவானந்தன் மற்றும் சமூகப்பணித் துறை நான்காம் ஆண்டு மாணவி, மாண விகள் இந்த மருத்துவமுகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றினர்.     

இறுதியாக இயக்குநர் பேரா.முனைவர் த.ஜானகி இந்த மருத்துவமுகாம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்து பெரும் உதவிபுரிந்த  இராபர்ட், நிறுவனர் மாத்தூர் சாயா தொண்டு நிறுவனம் கீழ திருவிழாப்பட்டி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை பேராசிரியர்கள் முனைவர் அ.ஆணந்த் ஜெரார்டு ஜெபாஸ் டின் முனைவர் எம்.அறிவானந்தன், சமூகப்பணித்துறை நான்காம் ஆண்டு மாணவி, மாணவிகள் மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முரு கேசன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner