முன்பு அடுத்து Page:

காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல…

  காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.20 “காவிரி நீர் தொடர்பாக  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு  திமுகழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கூட்டத் தில் தி.மு.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை கள் தெரிவிக்கப்படும் என்றும்,  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: -காவிரி நதி....... மேலும்

20 பிப்ரவரி 2018 16:12:04

மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

 மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, பிப்.20 மின்னணு குடும்ப அட்டை இல்லா விட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் நிச்சய மாக வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் எழில கத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் உணவுத் துறை அதிகாரிகள், அலுவலர் களுடன் கலந்தாய்வுக் கூட்டம்  நடை பெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் ஆர்.காம ராஜ் கூறியதாவது: 1.93 கோடி குடும்ப அட் டைகள் மின்னணு குடும்ப அட் டைகளாக....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:54:03

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை, பிப்.20 சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 3ஆம் கட்ட மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (பிப்.20) தொடங்குகிறது. இதில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 6 மின்சார ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 3 மின்சார ரயில் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. முதல் சேவையாக தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். 12 பெட்டிகள்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:39:03

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வாம்!

 பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வாம்!

தாம்பரம், பிப்.20  தமிழகம் முழுவதும் பொது சுகாதார பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற உள்ளாட்சி அமைப்பு களில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 12-10-2017 அன்று சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அரசாணை (நிலை) எண் 360-இன் படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறு வதற்கான கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து கால தாமத....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:39:03

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

  போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள....... மேலும்

19 பிப்ரவரி 2018 17:25:05

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

  நாகை, பிப்.19 நாகையில் வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த ஆளுநருக்கு திமுகவினர் நேற்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், செல்லும் இடமெல்லாம் அரசு பணிகளை  ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேற்று முன்தினம் இரவு நாகை வந்தார். விருந்தினர் மாளிகையில் இரவு....... மேலும்

19 பிப்ரவரி 2018 16:01:04

திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு திரளான மாணவர…

  திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு  திரளான மாணவர்கள்  பங்கேற்க ஆயத்தம்

திருச்சி, பிப். 18-   பிப்.22 இல்  நீட் தேர்வுக்கு எதிரான அறப்போராட்டத்தில் மாண வர்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டுமென திருச்சி யில் நடந்த சமூக நீதி பாது காப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை பெரியார் திட லில் பிப்.11 ஆம் தேதி திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி  அவர்கள் தலைமை யில் அனைத்து மாணவர் அமைப் பின் கூட்டமைப்பு (சமூக நீதி பாதுகாப்பு பேரவை) சார்பில் ....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:23:03

அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

  அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

சென்னை, பிப்.18 16.02.2018, முற்பகல், தமிழ்த்தாய் பெரு விழா 70-அய் முன்னிட்டு சு.அறி வுக்கரசு அவர்களால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் 2015-இல் தொடங்கப்பட்ட அறிவுக் கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை யின் சார்பாக பெரியார் வாழ் வியலில் கருத்துப்போர் (புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன்), பெரியா ரின் இதழ்களில் பெண் விடுதலை (முனைவர் சு.இராசலட்சுமி) என்னும் நூல்களின் வரிசையில் பேராசிரியர் அறிவரசன் அவர்களின் இவர்தாம் பெரியார் எனும் பொருண்மையிலானச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. நிகழ்விற்கு....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:17:03

மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது அழகல்ல போக்குவரத்து துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

 மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது அழகல்ல   போக்குவரத்து துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை, பிப்.18 அரசு போக்குவரத்து கழகங்களை செம்மையாக்க நடவடிக்கை எடுங்கள் என்றும், மு.க.ஸ்டாலினை விமர்சிப்பது கொஞ்சமும் அழகல்ல என்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தலைமையிலான குழு தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலைமை மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நிலைமைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரையை மு.க.ஸ்டாலின் மூலமாக அளித்தது. அதனை....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:17:03

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில்  மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

  திருப்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்தக் கட்சியின் துண்டறிக்கையில் பிர சுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (16.2.2018) நடத்தப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பள்ளி, நல்லூர் சமுதாய நலக்கூடத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மய்யத்திலும்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, நவ. 14- சென்னை எழிலக வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமை யான கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அண்ணாசாலையில் உள்ள பள்ளிக்கட்டிடமும் இடிந்து விழுந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், கட்டட கலையை பறை சாற்றும் வகையில் பழமையான கட்ட டங்கள் உள்ளன. தமிழக அரசின் பல் வேறு துறை அலுவலகங்கள் எழிலக வளாகத்தில் இயங்கி வருகின்றன.

எழிலக வளாகத்தில் இயங்கி வந்த 200 ஆண்டுகள் பழமையான கொதி கலன் அலுவலக கட்டடம் உறுதித் தன்மையை இழந்தது. அவ்வப்போது கட்டடத்தின் மேற்கூரை துகள்கள் விழுந்தன. எப்போது வேண்டுமானா லும் அந்த கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டது.

இதையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுபணித்துறை கட்டிட அலு வலகத்துக்கு இடம் பெயர்ந்தனர். வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தால், கொதிகலன் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை மிகவும் பலவீனமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் போது கட்டடத் தின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த கட்டிடத்தின் அரு கில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கொதிகலன் அலுவலக கட்டிடத்தை புனரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. பருவமழையால் பணிகள் நிறுத்தப்பட்டிந்த வேளையில் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.

எழிலக வளாகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஹூமாயின் மஹாலில், செயல் பட்டு வந்த மகளிர் ஆணையத்தின் கட் டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி கட்டடம் இடிந்தது

சென்னை, அண்ணாசாலையில் உள்ள அரசு மதரசா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சென்னையின் பழமை யான பள்ளிகளில் ஒன்றான மதரசா மேல்நிலைப்பள்ளி 168 வயதுடைய தாகும். இந்த பள்ளியின் பழைய கட்ட டம் பாரம்பரிய கட்டிடமாக கருதப்படு கிறது. பள்ளியின் வகுப்புகள் புதிய கட்டடத்தில் இயங்கிவருகிறது. பாழ டைந்து காணப்பட்ட பள்ளியின் பழைய கட்டடத்தை அரசு பராமரிக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்னாள் மாணவர்கள் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையில் இந்த பள்ளியின் கட்டிடம் திடீரென பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத் தினர் உடனே திரண்டனர். இச்சம்பவம் குறித்து முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில், இந்த பள்ளியின் கட்டிடம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல. பாரம்பரிய கட்டிடமான இந்த பள்ளியை பராமரிக்க அரசு முன்வர வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும், என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner