முன்பு அடுத்து Page:

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி

திருச்சி ஆத்மா மருத்துவமனை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மனநல விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி 23.09.2018 அன்று நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மொத்தம் 52 பேர் கலந்துகொண்டு மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இம்மாரத்தான் போட்டியில் திருச்சியிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலிருந்து  6500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். இம்மாரத் தான் போட்டி நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள....... மேலும்

25 செப்டம்பர் 2018 16:42:04

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

தூத்துக்குடி மாணவி சோபியா  மனித உரிமை ஆணையத்தில் விளக்கம்

திருநெல்வேலி, செப். 25- -நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட் கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடாஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த செப். 3ஆம் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் பாஜகவுக்கு எதிராக சோபியா....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:13:03

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க 6.31 லட்சம் பேர் மனு

சென்னை,  செப். 25- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதம் முழுவதும் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம் பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:04:03

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்

சென்னை, செப்.25 தந்தை பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஆகியோர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவை வருமாறு: வைகோ தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத் துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல்,....... மேலும்

25 செப்டம்பர் 2018 14:43:02

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நாகர்கோவில், செப்.24கன்னியா குமரி மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தைபெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று  அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்க தலைவர் எழுத்தாளர்  பொன்னீலன்  அவர்கள்  விழா சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத் தரங்கம்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:05:05

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அவதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு  வாகன ஓட்டிகள் அவதி

சென்னை, செப். 24- கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தின சரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டால ரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை யில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிக ளுக்கு....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

கடைமடைக்கு நீர் வராததால் பயிர்கள் கருகியதைக் கண்டு விவசாயி தற்கொலை

கடைமடைக்கு நீர் வராததால்  பயிர்கள் கருகியதைக் கண்டு  விவசாயி தற்கொலை

நாகை, செப். 24- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). விவசாயி. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை  குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் கூடுதலாக நிலம் குத்தகைக்கு பிடித்து, 6 ஏக்கர் நிலத்தில் சம்பா  சாகுபடி செய் தார். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் 35 நாள் வயதுடைய பயிராக உள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

தூத்துக்குடி, செப். 24- தூத்துக் குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் மனு அளித்துள்ளதாக, இது குறித்து நேரில் ஆய்வு மேற் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் கூறினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு வினர் தூத்துக்குடியில் இரண் டாவது நாளாக ஞாயிற்றுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:24:03

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர், தூயநெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட ‘கள’ ஆய்வின்போது, நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சுந்தரம்பள்ளி கிராமத் தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வரலாற்று ஆவணமான சதி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:56:04

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான  வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

சென்னை, செப்.22 நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வரும் 90 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களை ஊக்குவித்து கொண்டாடும் முயற்சியில் நீரிழிவின் மீது வெற்றி விருது என்ற இதன் வகையில் முதல்முறையாக வழங்கப்படும் விருதுவை டாக்டர். மோகன்ஸ் டயாபட்டிஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் தொடங்கி வைத்துள்ளது. இந்த விருது வழங்கு நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்களில் நீரிழிவு நோயுடன் சமச்சீரான வாழ்க்கைமுறை மூலம் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 90 வயதுக்கும் கூடுதலாக நடத்தி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:13:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 14- பசுமை தீர்ப்பாயத்தில், நீதிபதி மற்றும் உறுப்பினர் பற்றாக்குறையால், 1,500க்கும் மேற்பட்ட வழக்கு கள் தேக்கம் அடைந்துள்ளன. தென் மாநிலங்களில், சுற்றுச் சூழல் தொடர்பான, 1,500க்கும் மேற்பட்ட வழக்குகளை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின், தென் மண்டல அமர்வு விசாரிக்கிறது.

இந்த தீர்ப்பாயம், இரண்டு அமர்வுகளுடன் இயங்கி வந்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் இழப்பை மதிப்பீடு செய்யும், 'லாஸ் ஆப் ஈகாலஜி' ஆணையத்தை கலைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர் வுடன், சென்னை, உயர் நீதிமன்றம் இணைத்தது.

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால், மூன்றாவது அமர்வு துவங்கப்படவில்லை.

இந்நிலையில், நீதிபதி, பி.ஜோதிமணி ஓய்வு பெற்ற பின், மற்றொரு நீதிபதி நியமிக்கப்படவில்லை. இதனால், இரண் டாவது அமர்வு முடக்கப்பட்டு, நீதிபதி, எம்.எஸ்.நம்பியார், உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய ஒரு அமர்வு மட்டுமே செயல்பட்டு வருகிறது. தற்போது, பல வழக்குகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், உறுப்பினர், பி.எஸ்.ராவ் நாளை ஓய்வு பெறுகிறார். இதனால், வழக்குகள் தேக்கம் அடைவ தோடு, புதிய வழக்குகளும் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, தீர்ப்பாய வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில், பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை பிறப்பித்ததால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப் படுத்தப்பட்டது. மூன்று அமர்வுகளுடன் உள்ள தீர்ப்பாயத் துக்கு, ஒரு நீதிபதி உள்ளார். அவராலும், வழக்குகளை விசா ரிக்கவோ, தீர்ப்பு வழங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீதிபதி, எம்.எஸ்.நம்பியாரும், 2018 ஜனவரியில், ஓய்வு பெறுகிறார். இதனால், மத்திய அரசு தீர்ப்பாயத்துக்கு புதிய நீதிபதிகள், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தை திருமணங்கள் தர்மபுரியில் அதிகம்

தர்மபுரி, நவ. 14-  ''தர்மபுரி மாவட்டத்தில் தான், அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன,'' என, எஸ்.பி., பண்டி கங்காதர் கூறினார்.

தர்மபுரி மாவட்ட, 'சைல்டு லைன்' சார்பில், என் நண்பன் வார விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, எஸ்.பி., அலுவலகத்தில், சைல்டு அமைப்பிற்கு வந்த அழைப்புகள் குறித்த பட்டியலை, எஸ்.பி., பண்டிகங்காதர் வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர் பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே, தர்மபுரி மாவட்டத்தில் தான், அதிக குழந்தை திருமணங்கள் நடக் கின்றன. சைல்டு லைன் மூலம், இந்தாண்டு அக்டோபர் வரை, மாவட்டத்தில், 217 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தை திருமணம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந் தையோ அல்லது பக்கத்து வீட்டினரோ புகார் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் குறித்து, 1098 மற்றும் 1077 என்ற எண்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நிபந்தனையற்ற
மன்னிப்பு கோரியது தேர்தல் ஆணையம்


சென்னை, நவ. 14- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாத மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்.18-ஆம் தேதிக் குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட வேண் டும். நவ. 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெஃரோஸ் கான், தேர் தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கடந்த நவ. 6, 7 மற்றும் 10-ஆம் தேதிகளில் ஆஜராகினர்.

ஆனால் வழக்குப் பட்டியலிடப்படாததால், விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் இருவரும் இந்த வழக்குத் தொடர் பாக செவ்வாய்க்கிழமை (நவ.14) நேரில் ஆஜராக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்றம் நிர்ணயித்த காலத்துக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அட்ட வணையின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்காக நிபந்தனையற்ற மன் னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner