முன்பு அடுத்து Page:

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிக்கை சென்னை, ஜூன் 19- தமிழ் மொழித்திறனையும், அறிவாற் றலையும், படைப்பாற்றல் தனித்தன்மையையும், தமிழ் மொழி இலக்கணத்தையும் மாணவர்கள் அறியும் வகை யில் அமைந்த சிறப்புத் தமிழ்ப் பாடத்தை அகற்றிவிட்டு ஒரே தமிழ்ப்பாடமாக்கிடும் அரசா ணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது கண்டித்தக்கதா கும். எனத் தமிழ் அமைப்புகள் சார்பாகப் பன்னாட்டுத் தமிழு றவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகள் முதல்,....... மேலும்

19 ஜூன் 2018 15:52:03

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

சென்னை, ஜூன் 19- தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங் கள் கடந்த இரண்டு கல்வி யாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்க ளானவர்களும் தகுதியானவர் என்ற முறை கடந்த இரு ஆண்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

உடல் உறுப்பு மாற்று முறைகேடு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

உடல் உறுப்பு மாற்று முறைகேடு  சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்  டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 19- உடல் உறுப்பு மாற்று முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத்  செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது: உடல்  உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சையில் முதன்மை மாநி லமாக விளங்கும்  தமிழகத்தில் அதிகமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் பயன் அடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

சொத்துகள் ஆவணப் பதிவு: போலி ஆவணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்

சென்னை, ஜூன் 18 தமிழகத்தில் போலி ஆவணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறை களை பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிவுறுத் தல் சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்களுக்கு அவர் அண் மையில் அனுப்பியுள்ளார். அதன் விவரம்:- சொத்துகளை ஆவணப் பதிவு செய்யும் போது அதற்குத் தேவையான முன்பதிவு ஆவ ணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங் களை எந்தக் காரணத்துக்காகவும் அலுவலகத்தில் வாங்கி வைத்....... மேலும்

18 ஜூன் 2018 15:44:03

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 18- இதுகுறித்து அவர் நேற்று (17.6.2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அணைகள் பாதுகாப்பு மசோதா விற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருது கிறது. அணைகள் பாதுகாப்பு குறித்து 1982-லேயே விவாதிக்கப்பட்டு, 1987-இல் முதல் வரைவு மசோதா வெளியிடப்....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம்

சென்னை, ஜூன் 18 சரக்கு லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சரக்கு லாரி உரிமையாளர்கள் நாடு முழு வதும் காலை 6 மணிக்கு வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வை  மாதங் களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும் என்பது அவர் களுடைய பிரதான கோரிக்கை யாக இருந்து வருகிறது. அதேபோல 3ம்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது : கனிமொழி பேட்டி

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின்  ஒற்றுமை வலுவாகி வருகிறது :  கனிமொழி பேட்டி

ஆலந்தூர், ஜூன் 18 தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி களுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள் ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளன. பா.ஜனதா வுடன் கூட்டணி....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்  ஆகஸ்டு மாதம் விண்ணில் பாய்கிறது

சென்னை, ஜூன் 18- பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவ தற்காக ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்து....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

அண்ணா பெயரில் பல்கலைக் கழகம்

அண்ணா பெயரில் பல்கலைக் கழகம்

அண்ணா கொள்கைக்கே குழி பறிப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழக அலுவலர் குடியிருப்பில் ஓம் சக்தி ஸ்ரீநாகாத்தம்மன் ஆலய புற்றுக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீகாலபைரவர் நூதன பிம்ப பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது.'' அரசுக்குச் சொந்தமான இடத்தில் எந்த வழிபாட்டுத் தலமும் அமைக்கக் கூடாது; அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் அண்ணா ஆணை....... மேலும்

18 ஜூன் 2018 13:40:01

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்துகளில் ஊர்ப்பெயர் பலகையில் இந்தி!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்துகளில் ஊர்ப்பெயர் பலகையில் இந்தி!

அட, கேவலமே! பெருந்துறை, ஜூன் 18 ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி யிலிருந்து  பெருந்துறை சிப்காட் செல்லும் 17 ஆம் எண் கொண்ட நகரப்பேருந்தில் பெருந்துறை சந்தைவரை செல்லும் பேருந்து என்பதை குறிக்கும்வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு இடமில்லை. ஆங்கிலத்திலும், அதனையடுத்து இந்தியிலும் பெயர்ப்பலகைஅமைக்கப் பட்டுள்ளது. அந்த பெயர்ப் பலகையில் தமிழில் எழுதப்பட வில்லை. அறிவிக்கப்படாத இந்தித் திணிப்பை தமிழக அரசே செய்யத் துணிந்துவிட்டதா? வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களின்....... மேலும்

18 ஜூன் 2018 13:40:01

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.13- நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பேரணிநடத்திய மாணவர் கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண் டித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். பலர் மீது பொய் வழக்குகள் புனைந்து சிறையில் அடைத்துள்ளனர். இத்தாக்கு தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. தமிழகத் திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரவிலக்கு அளிக்கக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செவ்வாயன்று (12.9.2017) சென்னை, ராஜரத்தினம் ஸ்டே டியத்திலிருந்து, கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு அனுமதி பெற்று, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் தலை மையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவதற்கு முன்பாக காவல் துறையினர் மாணவ - மாணவிகள் மீது கடுமையானதாக்குதலை தொடுத்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் களையும் குறிப்பாக தனியாகஇழுத்துச் சென்று தாக்குதல் தொடுத்துள் ளனர். காவல்துறையின் இந்த தாக்குதலை கண் டித்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள் அமைதியாக சாலையில் அமர்ந்து முழக்க மிட்டபோது, மாணவிகளை ஆண் காவலர்கள் கைகளைப் பிடித்தும், உடை களைப் பிடித்தும் இழுத்துள்ளனர். இதில் சில மாணவிகளின் உடைகள் கிழிந்துள் ளன. ஆபாசமான வசவுகளுடன் மாணவி களை தகாத முறையில் தொட்டும், பிடித்துத் தள்ளியும் உள்ளனர்.

மாணவர்களை மாணவிகள் மீதும், மாணவிகளை மாணவர்கள் மீதும் வேக மாக இடித்துத் தள்ளியுள்ளனர். மாணவர் களுடைய கைகளை திருகியும், கால்களை திருகியும், பூட்ஸ்காலால் மிதித்தும், வயிற் றில் குத்தியும், விரல்களை உடைக்க முயற் சித்தும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வீ.மாரியப்பன், செந்தில், தீபா, தாமு, நிரூ பன், சந்துரு, இசக்கி உள்ளிட்ட மாணவர் - வாலிபர் தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்கள் தங்களுடைய கைபேசியை காணோம் என்று தெரிவித்த போது,கைபேசி மட்டுமல்ல நீயும் சிறிது நேரத்தில்காணாமல் போகப் போகிறாய் என்று வெறித்தனமாக மிரட்டியுள்ளனர்.

காவல்துறையின் இந்த தாக்குதலில் மாணவிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் முரட்டுத்தனமாக முறுக் கியதில் வாலிபர் சங்க தலைவரான ஷகீ லாவின் கைமூட்டு விலகியது. இதைய டுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 24 மாண விகள் உள்பட 108 பேர் கைது செய்யப் பட்டனர். பின்னர் மாரியப்பன், செந்தில், நிருபன், தாமு, கோதண்டராமன் உள்பட 23 பேர்மீது 3 பிரிவுகளில் பொய்வழக்குகள் பதிவு செய்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் தவிர 19 பேர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிபிஎம் கடும் கண்டனம்


இவையனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், இந்திய தண் டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் குற் றங்களாகும் என்றுகடுமையாக சாடியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழுகாவல்துறையின் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத அத்துமீறல் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை யில் ஒருமனதாக அவசரச் சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்த நிலையில் பலதரப்பு மக்களும் அவசரச் சட்டத்திற்கு அனுமதி கோரி போராடிக் கொண்டிருக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கள், இளைஞர்கள் மீது இத்தகைய காட் டுமிராண்டித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட் டிருப்பது, தமிழக காவல்துறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? அல்லது மத்திய பாஜக அரசின் தூண் டுதலில் இயங்குகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

மாதர் சங்கம் கடும் கண்டனம்


மாணவர்கள் போராட்டத்தில் காவல் துறை ஏவியுள்ள அடக்குமுறையையும், மாணவிகளை மூர்க்கத்தனமாக தாக்கிய அட்டூழியத்தையும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வன்மை யாக கண்டித்துள்ளனர். மாநிலமனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.
கும்பகோணம் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம் பாலக்கரையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 5- ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண் டனர்.தஞ்சை

நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலக வளாகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 3- ஆவது நாளாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர்

திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 400 பேர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் செய் தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத் தனர்.

புதுச்சேரிபுதுவையில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் நேற்று சட்டக்கல்லூரி, தாகூர் கலைக்கல் லூரி மற்றும் பள்ளி, கல்லூரி மாண வர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

அவர்கள் கல்லூரிகளிலிருந்து ஊர் வலமாக புதுவை தலைமை தபால் நிலையம் நோக்கி வந்தனர். தாரை, தப் பட்டை முழங்க அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலம் புதுவை தலைமை தபால் நிலையத்தை அடைந்ததும் அதற்கு மேல் செல்ல அவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத் தினார்கள். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாணவர்களின் போராட்டத்தினை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடு தல் காவல்துறை பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. ஆளுநர் மாளிகையின் முன்புறம் செல்லும் சாலையில் யாரை யும் காவல்துறையினர் அனுமதிக்க வில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner