முன்பு அடுத்து Page:

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

சென்னை, ஜன.19 வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்தப் பட உள்ள 1, 6, 9ஆ-ம் வகுப்புகளுக் கான புதிய பாடத்திட்டம் தயா ராக உள்ளது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 1, 6, 9, மற்றும் 11-ஆம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட் டத்தை வருகிற கல்வி ஆண்டு (2018- - 2019) முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற் காக பல்வேறு கூட்டங்கள் நடத்தி எப்படி பட்ட....... மேலும்

19 ஜனவரி 2018 15:55:03

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழர் திருநாள் பொங்கல் விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழர் திருநாள் பொங்கல் விழா

காரைக்குடி, ஜன. 19 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப்பண்பாட்டு மய்யம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை 11.1.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கின் உள்கருத்தரங்க அறையில் நடத்தியது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று உரையாற்றுகையில், நமது கலாச்சாரமும், பண்பாடும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற் காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன........ மேலும்

19 ஜனவரி 2018 14:59:02

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

 போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

சென்னை, ஜன. 18- வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் 50 ஆயிரம் பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தியுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆ-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும்....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

சென்னை அருகே இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை பயிற்சி ஒத்திகை

  சென்னை அருகே இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை பயிற்சி ஒத்திகை

சென்னை, ஜன. 18-- சென்னை அருகே வங்கக்கடலில் இந் தியா- ஜப்பான் கடலோர காவல் படையினர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். சாரெக்ஸ் 18 என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 9 கப்பல்களும் எட்டு டோர்னியர் விமானங்களும் 2 ஹெலிகாப் டர்களும் கலந்து கொண்டன. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா- ஜப்பான் கடலோர காவல்....... மேலும்

18 ஜனவரி 2018 13:44:01

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 2018

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்  மாபெரும் அறிவியல் கண்காட்சி 2018

வல்லம், ஜன.18  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின், பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 11.01.2018 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இக்கல்லூரியின் நூலகர் டாக்டர் க.சிவகாமி  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.மல்லிகா,  துணை முதல்வர் டாக்டர். உ.பர்வீன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-  மாணவிகள் பங்கேற்றனர். புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில் மாணவர்கள் எந்த அளவிற்கு தங்களை பொறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால்....... மேலும்

18 ஜனவரி 2018 13:41:01

ரேசனில் பொங்கல் பரிசு 20ஆம் தேதி வரை வழங்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

 ரேசனில் பொங்கல் பரிசு 20ஆம் தேதி வரை வழங்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜன.17 ரேசன் கடைகளில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வருகிற 20ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத் தில், ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி  கரும்பு வழங்கும் திட்டம் கடந்த....... மேலும்

17 ஜனவரி 2018 15:13:03

தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழாக்களால் களைகட்டியது சென்னை பெரியார் திடல்!

தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழாக்களால்  களைகட்டியது சென்னை பெரியார் திடல்!

சென்னை, ஜன.17 திராவிடர்களுக்கென்று இருந்த விழாக்களெல்லாம் பண்டிகைகளாக திரிந்து போன பிறகும் உழவர் திருநாளாம், அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் மட்டும் மானமிகு விழாவாக தொடர்கிறது. அதையும் சங்கராந்தி என்று ஆரியம் அபகரிக்கப் பார்த்து தோற்றுப்போனது. தந்தை பெரியாரின் சுயமரியதைச்சூடு பட்டதும் வாலைச் சுருண்டுக்கொண்டு விட்டது. மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு பல்வேறு தடைகளுக்குப்பிறகு தை முதல்தான் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் இயற்றியது! ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யார்....... மேலும்

17 ஜனவரி 2018 15:12:03

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?

தந்தை பெரியார்  நினைவு  சமத்துவபுரத்தில் கோவிலா?

  குமரி மாவட்டம்  செண்பகராமன்புதூரில்  உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  தந்தை பெரியாரின்  சிலை  அருகே  விநாயகன்  சிலை அமைக்க  பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உடனே  அகற்ற  குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர் மா.  மணி, மண்டல செயலாளர் கோ.  வெற்றிவேந்தன்  ஆகி யோர்  குமரி மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் செய்துள்ளனர். குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்த மத வழிபாட்டுச் சின்னத்திற்கும் இடமில்லை என்பது தனி விதியாகும். மேலும்

17 ஜனவரி 2018 15:01:03

சாலையோர கடைகள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாம்

 சாலையோர கடைகள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாம்

சென்னை, ஜன.16 சாலையோரங்களில் கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள் மீண்டும் உரிமம் பெறுவதைத் தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையைக் கட் டாயம் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெய்சங்கர் உள்பட 5 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது சென்னை மாநகராட்சி விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது....... மேலும்

16 ஜனவரி 2018 15:21:03

சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்தியத் தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு: மயில்சாமி அண்ணா துரை தகவல்

 சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்தியத் தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு: மயில்சாமி அண்ணா துரை தகவல்

சென்னை, ஜன.16 சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்திய தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மய்ய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மய்யம் தயாரித் துள்ள கார்ட்டோசாட்-2 வரிசை (710 கிலோ), மைக்ரோசாட், அய்என்எஸ்-1சி (11கிலோ) ஆகிய 3 செயற்கைக் கோள்கள் தவிர, கனடா, ஃபின் லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்காவின் 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து....... மேலும்

16 ஜனவரி 2018 14:42:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருப்பூர்,செப். 10-- சமூக நல்லிணக்க மேடை என்ற அமைப்பு  திருப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணிக் காக்கவும், ஜாதி,மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ வெகுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வும் திருப்பூர் மாவட்ட அளவிலான ஒரு பொது அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந் திய பொதுவுடைமைக் கட்சியின் திருப் பூர் மாவட்டக் குழு சார்பில் மதச்சார் பற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பின் பேரில்  ஒத்த கருத்துடையவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 7.9.2017 வியா ழக்கிழமை காலை 10.30 மணியளவில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள இந்திய பொதுவுடைமைக் கட்சி மாவட்ட அலுவலகத்தில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிட முன் னேற்றக் கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய பொது வுடைமைக் கட்சியின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் எம்.ரவி கூட்டத் தின் நோக்கம் குறித்து துவக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட் டத் தலைவர் இரா.ஆறுமுகம்,இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர்

மாவட்டச் செயலாளர் காம ராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யைச் சார்ந்த கோபால்,மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாநகரச் செயலாளர் சிவபாலன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனசேகரன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சர வணமூர்த்தி மற்றும் பெரியார் இயக்கங் களைச் சார்ந்தவர்கள் கருத்துரைகள் வழங்கினார்கள்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய இந் திய பொதுவுடைமைக் கட்சியின் முன் னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப் பினரும், இன்னாள் மாநில துணைச் செயலாளருமான கே.சுப்பராயன் தெரிவித்ததாவது: பெரியார் எதிர்த்த  வர்ணா சிரமம் இன்னும் நடைமுறையிருந்து வருகிறது.ஆகவே அதை ஒழிக்க நாம் போராடவேண்டும்.  இது சாதாரண சர்வ கட்சி கூட்டமல்ல! தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நாட்டை காப் பாற்றுவதற்கான கூட்டம்! சமத்துவத்திற் காக போராடிய தலைவர்களுக்கு ஜாதிய அடையாளம் கற்பிக்கும் பதாகைகளும், சுவரொட்டிகளும் நம் கண்களில் தென் படுகிறது, மக்கள் ஜாதியால்,மதத்தால் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர்.ஆகவே நாம் மக்களைச் சென்று சந்திக்க வேண்டும்!  அதற்கு நாம் புத்தி பூர்வமாகச் சிந்திக்க வேண்டும்! மக்களை மாற்ற  நேர்மறை யான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்! திருப்பூரில் 10க்கும் மேற் பட்ட இடங்களை தேர்வு செய்து நம் முடைய அமைப்பின் நோக்கங்கள் வெகு மக்களைச் சென்றடையும் வண்ணம் பிரச்சாரம் செய்யவேண்டும்! கலை வடிவிலான பிரச்சாரங்கள் நம்முடைய நோக்கங்களை மக்களிடம் வெகு விரை வாகக் கொண்டு சேர்க்கும்! இவ்வாறு பலமுனைகளில் மக்களை தெளிய வைக்க நாம் நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும்  "சமூக நல்லிணக்க மேடை" என்ற  பொதுவான பெயரில் பிரச்சாரக் களம் அமைத்துச் செயல்படுவதெனவும்,  எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் தேதி யன்று சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்தி திறந்தவெளிக் கருத்தரங்கம் நடத் துவதெனவும், அந்நிகழ்வில் மாநில அளவிலான சிறந்த சொற்பெருக்காளர் களைப் பங்கேற்கச் செய்வதெனவும்,  "சமூக நல்லிணக்க மேடை" யின்  சார் பில் சமூகப் பிரச்சினைகளை அலசி ஆரா யும் பொருட்டு அனைத்துக் கட்சி கள், இயக்கங்கள் அடங்கிய கலந்தாய் வுக் கூட்டங்களை தொடர்ந்து  நடத்துவ தெனவும்,  தீர்மானங்கள்  நிறைவேற்றப் பட்டது.

தொ.மு.ச மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.கே.டி மு.நாகராஜ், திரா விடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, நா.சேகர், வடிவேல் (சிபிஅய்), எம்.ராஜகோபால் சிபிஅய் (எம்) உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner