முன்பு அடுத்து Page:

வாகன டயர் பராமரிப்பு கண்காட்சி

வாகன டயர் பராமரிப்பு கண்காட்சி

சென்னை, ஜூலை 21 டயர் எக்ஸ்பொ 2017, ஜூலை 11 முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட தொழிற்துறை வல்லுநர்களும் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடு களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இக்கண்காட்சி யில்  பங்கேற்றனர். அவர்கள் புதிய வர்த்தக வாய்ப்புகள், பரி மாற்ற கருத்துக்கள், இந்திய சந்தையில் பொருத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வு கள். பி.கே.டி. டயர்ஸ், லிங்லெங்....... மேலும்

21 ஜூலை 2017 15:50:03

சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

சென்னை, ஜூலை 21 அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிறப்பாசிரி யர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர் களையும் ஆசிரியர் தேர்வு....... மேலும்

21 ஜூலை 2017 15:07:03

இறைச்சிக்காக மாடு விற்பனையை தடுக்கும் சட்டத்திற்கு தடை நீட்டிப்பு

   இறைச்சிக்காக மாடு விற்பனையை தடுக்கும் சட்டத்திற்கு தடை நீட்டிப்பு

மதுரை, ஜூலை 21 இறைச்சிக்காக மாடுகள் விற் பதை தடுக்கும் மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு, விதிக்கப் பட்ட இடைக்காலத்தடை மேலும் ஒரு வாரம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஓர் அர சாணை வெளியிட்டது. அதில், கால்நடை சந்தைகள்  மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் உள் ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகளை விற்க....... மேலும்

21 ஜூலை 2017 14:35:02

மணவழகர் மன்றத்தில் வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆர். படத்தை திறந்து வைத்து தமிழர் தலை…

மணவழகர் மன்றத்தில் வள்ளல் எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆர். படத்தை  திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்

  சென்னை, ஜூலை 21 சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அவரின் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மனிதநேய மிக்க மனிதர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழாரம் சூட்டினார். சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை நடத்திய மணவழகர் மன்றத்தின் 61ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், மணவழகர் மன்றத்தின் முன்னாள் காப்பாளர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவும்....... மேலும்

21 ஜூலை 2017 14:31:02

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சி, ஜூலை 20, திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான காமராஜரின் 115ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவின் தொடக்கமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.சிறீதர், விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வர வேற்றார்.பின்பு காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் நாகம்மையார் ஆசி ரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் செண்பகவள்ளி பரிசு கள் வழங்கி பாராட்டினார்........ மேலும்

20 ஜூலை 2017 15:26:03

மத்திய பிஜேபி அரசே! ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கொடு! விலக்குக்கொடு!!

  மத்திய பிஜேபி அரசே! ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கொடு! விலக்குக்கொடு!!

மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கடந்த 12.7.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சென்னை, ஜூலை 19 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் திருந்தார். அதன்படி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமி ழகம் முழுவதும் (12.7.2017) அன்று ஆர்ப் பாட்டங்கள்....... மேலும்

19 ஜூலை 2017 17:03:05

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் கடிதங்கள்!

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் கடிதங்கள்!

'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டிய அஞ்சலட்டை வாசகங்கள் இவை. அனைவரும் கீழ்க்காணும் வாசகங்களைக் குறிப்பிட்டு தங்களது முகவரியினையும் எழுதி கையொப்பம் இட்டு அனுப்பிட வேண்டுகிறோம். கோரிக்கையினை மின்னஞ்சல் மூலமாகவும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிடலாம்.  - ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக்....... மேலும்

19 ஜூலை 2017 15:47:03

சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

இராமேசுவரம், ஜூலை 19- பாரம்பரிய நாட் டுப் படகு மீனவர்கள் பாதிக்கின்ற வகை யில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி இராமேசு வரத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஅய்டியு) சார்பில் கடலில் இறங்கி சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், தமிழ் நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்- 1983 இல் விசைப்படகு மீனவர்கள் 3 கடல் மைல்....... மேலும்

19 ஜூலை 2017 15:41:03

சர்வதேச நீதி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பங்கேற்பு

சர்வதேச நீதி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பங்கேற்பு

தஞ்சை, ஜூலை 19 தஞ்சை மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறு வனம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் சைல்டு லைன் இணை நிறுவனம் செட் இன்டியா சார்பாக சர்வதேச நீதி நாள் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் கடைப் பிடிக்கப்பட்டது.  இதில் குந்தவை நாச்சியார் கல்லூரி தமிழ் துறை தலைவர் திராவிடராணி வரவேற்று பேசி னார்.  சைல்டுலைன் இணை நிறு வனம் செட் இன்டியா....... மேலும்

19 ஜூலை 2017 15:32:03

150ஆம் ஆண்டு நிறைவு: சர்வதேச படகுப் போட்டி

150ஆம் ஆண்டு நிறைவு: சர்வதேச படகுப் போட்டி

சென்னை, ஜூலை 19 சென்னை மாநகரின் முதன்மையான விளையாட்டு துறை நிறுவனங் களில் ஒன்றான தி மெட்ராஸ் போட் கிளப் அதன் 150ஆவது ஆண்டு நிறைவு விழா கொண் டாட்டத்தை முன்னிட்டு சர்வதேச படகு பந்தய போட்டியை நடத்தப் போவதாக நேற்று 18.7.2017) அறிவித்துள்ளது.இந்த பந்தயப் போட்டிகள் முறைப்படி 2017 ஜூலை 19 அன்று தொடங்கும் மற்றும் இறுதி பந்தயப் போட்டிகள் 2017 ஜூலை 22 அன்று நடைபெறும்.இதுகுறித்து மெட்ராஸ்....... மேலும்

19 ஜூலை 2017 15:06:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, மே 19 தேச ஒற் றுமையைக் காரணம் காட்டி இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக திமுக மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தி திணிப்பு, நீட் தேர்வு எதிர்ப்புக் கருத் தரங்கில் கலந்து கொண்டு கனிமொழி பேசியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்க்க தைரி யம் இல்லாத அரசாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்கவே போராடி இடஒதுக்கீடு கொண்டு வரப் பட்டது. ஆனால், நீட் தேர்வு என்ற பெயரில் இடஒதுக் கீட்டை ஒழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

உலகத்துக்குத் தேவையான கருத்துகளைக் கூறிய தொன்மை யான மொழியாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்தி மொழியை எதிர்க்கவில்லை, மாறாக மொழித் திணிப்பைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் மொழியை அழித்து, தமிழர் களின் அடையாளத்தை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். இந்தி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் எவ்வாறு போராடினார்களோ, அதே போல மொழியைக் காக்கவும் மாணவர்கள் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக் கூடிய அரசாக அதிமுக அரசு செயல் பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படுவது இல்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களைப் பாதுகாத் துக் கொள்ள தமிழகத்துக்கு விரோதமான, மக்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டங்களை மாநில அரசு பின்பற்றுகிறது.

மாநில அரசுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் உள்ள ஆர்வம், மக்களைக் காப் பாற்றுவதில் இல்லை. தமிழக மருத்துவர்களை யாரும் தரம் குறைந்த மருத்துவர்களாகப் பார்ப்பதில்லை. நீட் தேர்வால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வியை கொடுக்க முடியும் என்பது தவறான கருத்து.

நீட் தேர்வை நோக்கியே கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தவறான முடிவாகும். சமச்சீர் கல்வியின் தரத்தை ஆண்டுதோறும் உயர்த்தி, கல்வியின் தரத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரம் உயர்த்த எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை என்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner